இரத்த வெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ்

நெருக்கடி நிலையின்போது இந்திரா காந்தி செய்‌tத உருப்படியான காரியம்‌ ஏதாவது ஒன்று உண்டென்றால்‌, அது ஆர்‌.எஸ்‌.எஸ்‌., ஆனந்தமார்க்‌கம்‌ போன்ற மதவெறிபிடித்த இடங்கங்களுக்குத் தடை விதித்‌ததுதான்‌!

உலகம்‌ போற்றி உத்தமர்‌ காந்தியின்‌ உயிர்போக்கிய கோட்சேயை வளர்த்து ஆளாக்கி விட்ட இந்த ஆர்‌.எஸ்‌. எஸ்‌. மீண்டும்‌ அலிகாரில்‌ தன்‌ கைவரிசையைக்‌ காட்டியுள்ளது. அதன்‌ விளைவாக முப்பது பேர்‌ கொல்‌லப்பட்டிருக்கிறார்கள்‌. நூற்‌றுக்‌ கணக்கானோர்‌ படுகாயமடைந்திருக்கிறார்கள்‌. ஐந்து இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்கள்‌ நாசமாக்கப்பட்‌டுள்ளன.

செப்டம்பர் 12 ஆம் தேதி “புரா” என்றழைக்கப்பட்ட சுரேஷ் சந்த் சர்மா என்பவனுக்கும் ஒரு முஸ்லீக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் இருவருமே காயமடைந்தனர். மருத்துவ விடுதியில் சேர்க்கப்பட்ட “புரா” அக்டோபர் 5 ஆம் தேதி மாண்டு போனான்.

சூப்பிரிண்டண்ட் ஆஃப் போலீஸ் சதுர்வேதி நீதிபதி சிங்கால்,அமர்சிங் ஆகியோர் தலைமையில் 33 போலீஸ்காரர்கள் “புரா” வின் சடலைத்தை அறுவைக்காக எடுத்துச் சென்ற போது, நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த ஒரு கலக்கார கும்பல் சடலத்தை போலீஸாரிடம் இருந்து கைப்பற்றியது.

சடலத்தை ஏற்றிச்சென்ற கலக்கார கும்பல் .வெறித்தனமான முழக்கங்களை எழுப்பியவாறே வீதிகளில் ஊர்வலம் வந்தது.

“*இரத்தத்திற்குப்‌ பதில்‌ இரத்தம்‌…!””

“*எங்களில்‌ ஒருவரை அவர்‌கள்‌ கொன்றால்‌, அவர்களில்‌ நால்வரை நாங்கள்‌ கொல்‌வோம்‌…!””

கலகக்காரக்கும்பல் முஸ்லீம்கள்‌ வாழும்‌ குடியிருப்புக்குள்‌.நுழைந்தது: அவர்களுடைய கடைகள்‌ தீக்‌கரையாக்கப்பட்‌டன. கற்கள்‌ சரமாரியாக வீசப்பட்டன ! கலகக்கார கும்பல் ‌சுட ஆரம்பிக்கவே, தங்‌களத்‌. தற்காத்தக் கொள்ள முசுலீம்களின்‌ தரப்பிலிருந்து:சிலர்‌ சுட்டதாகவும் ‌சொல்லப்‌படுறது.

முதல்‌ கலவரத்தின்போது, மூன்றுபேர்‌ கொல்லப்பட்டி.ருக்கிறார்கள்‌….. அவர்களில்‌ பெரும்பாலானோர்‌… மூசுலீம்‌களே என்று போலீஸ்‌… தரப்பின்‌  அறிக்கை கூறு 1962 ஆம் ஆண்டிலும் ‌1977 – ஆம்‌ அண்டிலும்‌ அலிகாரில்‌ நடந்த கலவரங்களை நினைவூட்டும்‌. இந்தக்‌ கலவரதைப்‌ போலீசார்‌. திறம்படச்‌ செயலாற்றியிருந்தால்‌ தடுத்‌திருக்க முடியும்‌.நிலைமை கட்‌டுக்’கடங்காமல் போன பிறகுதான்‌ அவர்கள்‌ துப்பாக்கிச்‌. சூடு, நடத்தி ஊரடங்குச்‌. சட்டமும்‌ போட்டிருக்கிறார்கள்‌..

அக்டோபர்‌ மாதத்தோடு அலிகார்‌. வாழ்‌ முசுலீம்‌ மக்‌களின்‌ தெருக்களில்‌ இரத்தம்‌.பெருக்கெடுத்து ஒடுவது நின்று: விடவில்லை, மீண்டும்‌ நவம்பர்‌.மாதமும்‌ பதினொன்று பேர்கள்‌ கொல்லப்பட்டிருக்கிறார்கள்‌.

அலிகாரில் நடந்த வன்முறைகள் தீவைப்புகள்‌, கொலைகள் அனைத்திற்கும்‌. மூல காரணமாக இருந்தவர்கள்‌ ஆர்‌.எஸ்‌.எஸ்‌, இயக்கத்தாரே என்பதை அனைத்துக்‌ கட்டசியினரும்‌ ஒத்துக்‌ கொள்கின்றனர்‌ ஜனதா கட்சியிலிருக்கும்‌ சிலரை-த்‌ தவிர!

அலிகார்‌ வன்முறைகளைத்‌ தூண்டிவிட்டவர் கிருஷ்ணகுமார்‌ நவ்மன் ‌என்பவர்தான்‌ (முன்னால்‌ ஆர்‌,எஸ்‌.எஸ்‌ இயக்கத்தின்‌ தலைவர்களில்‌ ஒருவரான இவர்‌… இப்போது அலிகார்‌ ஜனதாக்‌ கட்சியின்‌ தலைவர்‌), சில உயர்‌ அதிகாரிகள்கூட இதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.‌ ஊரடங்குச்‌ சட்‌டத்தின்‌ சீழ்‌ அக்டோபர்‌ எட்டாம்‌ தேதி கைது செய்யப்‌பட்ட இவர் உடனடியாக ஏன் விடுதலை செய்யப்பட்டார்‌ என்று தெரியவில்லை…”*.

இவ்வாறு கூறியுள்ள இராஜ்ராயணன்‌, “அலிகாரில்‌ நடந்த வன்முறைகளை ஆர்‌.எஸ்‌.எஸ்‌… தூண்டிவிடவில்லை’ என்று சப்பைக்கட்டு கட்டப்பாக்கும் சத்திரசேகரின்‌ கூற்று மடத்தனமானது…” என்று சாடியுள்ளார்‌.

அலிகார் என்ற நகரமானது முசுலீம் மக்களின் உயிர்வாழும் பண்பாட்டுச் சின்னமாகும். அங்கு ஏற்படும் வன்முறைகள் இந்தியா முழுக்க வாழும் முசுலீம்களை பாதிக்கக்கூடும்.தொடர்ந்து வன்முறைகள் அங்கு தலைவிரித்தாடி வருகின்றன.

இம்முறை ஆர்.எஸ்.எஸ் முழுக்க முழுக்க இரு தனிநபர்‌ சண்டையைத்‌ திட்டமிட்டுப்‌. ‘பெரிதாக்கி ஒரு மதச்சண்டையாக்கியுள்ளது.

ஆர்‌. எஸ்‌. எஸ்‌. தன்னுடைய மதவெறியிலிருந்து மீண்டுவிடும்‌ என்ற பலரின்‌ நம்பிக்கை மீண்டும் பொய்த்துவிட்ட்து; அதன்‌ தலைவர்‌களும்‌ சரி தொண்டர்களும்‌ சரி இரத்தவெறி பிடித்து அலைகின்றனர்‌;  மதச்சாற்பற்ற தன்மையிலோ சமத்துவத்‌திலோ நம்பிக்கை இல்லாத ஆர்‌. எஸ்‌, எஸ்‌. இந்தியாவை எதிர்நோக்கி இருக்கும்‌ பெரிய ஆபத்துக்களில்‌ ஒன்றாகும்‌; ‘தொண்டர்களுக்குப்‌ பயிற்சி தருறோம்‌ என்று சொல்லிக்கொண்டு ஆர்‌.எஸ்‌,எஸ்‌. தலைவர்கள்‌, அரசாங்க நிறுவனங்களின்‌ மைதானங்‌களை ஆக்கிரமித்து, அவைகளை கொலைப்‌ பயிற்சி முகாமாக மாற்றி வருகிறார்கள்‌.

ஆர்‌.எஸ்‌.எஸ்‌. பயிற்சியாளர்களுக்கு அரசாங்க இடங்களில்‌ இனி அனுமதி இல்லை! என்ற கேரள அரசின்‌ துணிச்சலான தீர்மானம்‌ பாராட்டுக்குரியது: இந்‌தியாவிலுள்ள பிற மாநிலங்‌களும்‌ இதைப்‌ பின்பற்றுமா?.

ஆயுதம்‌ தாங்கிப் போராடுவது, மதவெறியைத்‌ தூண்டிவிட்டு ஆட்களைத்‌ தீர்த்துக்கட்டுவது போன்ற ஆர்‌.எஸ்‌.எஸ்.ன்‌ நடவடிக்கைகள்‌ இந்திய ஜனநாயகத்திற்கும்‌ ஓற்றுமைக்கும்‌ விடப்பட்ட சவாலாகும்‌!

இதை அரசின்‌ ஓற்றுமையோடு மக்கள்‌ முறியடித்தே ஆகவேண்டும்‌.

நம்நாடு – 26-11-1978 (ஆசிரியர் மு.கருணாநிதி)
மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s