காந்திப் பசு – பாரதி

தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நியாயத்தை எடுத்துரைக்க 1909-ல் லண்டன் சென்ற பாரிஸ்டர் காந்தியின் பயணம் தோல்வியில் முடிந்தது. திரும்பிச் சென்றால் கைது செய்யப்படுவது நிச்சயம் என்ற நிலைமை புரிந்த மற்ற தலைவர்கள் வெளியே இருந்து கொண்டே போராட்டத்தைத் தொடர எண்ணி தலைமறைவாகி விட்டனர், காந்திஜியோ தென்னாப்பிரிக்கா திரும்பினார். எதிர்பார்த்தபடி அவரைக் கைது செய்து சிறையிலிட்டது தென்னாப்பிரிக்க அரசு. இது பற்றி தமது இந்தியா வார இதழில் பாரதி ஒரு கேலிச்சித்திரம் வெளிட்டு அதனடியில் பின் வரும் குறிப்பையும் பிரசுரித்தார்…

ஒத்துழையாமை இயக்கம் குறித்து பாரதி

சுதேசமித்திரன் பத்திரிகையும் தமிழ் நாடும் – ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி 30 நவம்பர் 1920 ரௌத்திரி கார்த்திகை 16 வடக்கே, ஸ்ரீ காசியினின்றும், தெற்கே தென் காசியினின்றும், இரண்டு தினங்களின் முன்னே, இரண்டு கடிதங்கள் என் கையில் சேர்ந்து கிடைத்தன,’ அவை யிரண்டும் சிறந்த நண்பர்களால் எழுதப்பட்டன. அவற்றுள் ஒன்று “பஹிரங்கக் கடிதம்” மற்றது ஸாதாரணக் கடிதம். ஆனால் இரண்டிலும் ஒரே விஷயந்தான் எழுதப்பட்டிருக்கிறது; ஒரே விதமான கேள்விதான் கேட்கப் பட்டிருக்கிறது. அதே கேள்வியைச் சென்னையிலுள்ள…

பாரதியும் முத்துலட்சுமி அம்மையாரும்

பெண்கல்வியின் அவசியத்தை எடுத்துக்காட்ட விரும்பிய பாரதி பிற்காலத்தில் சமூக சீர்திருத்தவாதியாக விளங்கிய டாக்டர். முத்துலக்ஷ்மி ரெட்டி எஃப்.ஏ. பரீட்சையில் தேறின செய்தியையும், பிற்காலத்தில் ‘சிஸ்டர்’ என்று அழைக்கப்பட்ட ஆர்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாள் மெட்ரிகுலேஷனில் தேறிய செய்தியையும் ‘சக்கரவர்த்தினி’ பத்திரிகையில் வெளியிட்டார். (சக்கரவர்த்தினி, 1906 ஜனவரி, பக்: 143). “சக்கரவர்த்தினி: இது சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஒரு தமிழ் பத்திரிகை. பெண்பாலாரின் அறிவுப் பெருக்கத்துக்கென்று தொடங்கப் பெற்றது இது. இதன் முதல் இரு பகுதிகள் கிடைக்கப்பெற்றோம். நம் நாட்டு மாதர்கள்…

பாரதி பாதை! – அறிஞர் அண்ணா

எட்டையபுரத்திலே, தேசீயக் கவி சுப்பிரமணிய பாரதியாருக்கு முக்கிய மண்டபம் அமைத்து, சீரிய முறையில் விழா நடத்தினர். பரங்கியாட்சியை ஒழித்தாக வேண்டுமென்ற ஆர்வத்தீ கொழுந்து விட்டெரியும் உள்ளத்துடன், வாழ்ந்தவர் பாரதியார். தாயகத்தில் உலவத் துரைத்தனத்தார் தடை விதித்ததால், புதுவையில் தங்கிப் புதுப்பாதை வகுத்தார் பாரதியார். அவருக்குக் ‘காணிக்கை’ செலுத்த ஆட்சி அலுப்பையும் பொருட்படுத்தாது,ஆச்சாரியார் வந்தார் – ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடினர் – ஆசைவாணர்கள் – கலைவாணர்கள் – எழுத்தாளர்கள் பற்பலர். ‘கல்கி’ ஆசிரியர், இப்பணியினைத் திறம்பட நடத்தி முடித்தார்…

பாரதி பாடல் புரட்டு – பார்ப்பனர்களின் அயோக்கியத்தனம்

அதாவது பாரதிபாடல் முதற் பாகத்திலுள்ள பாட்டுகளில் ஒன்றான மன்னும் இமயமலை எங்கள் மலையே என்னும் பாட்டின் அடிகளில் உன்னத பாரத நாடெங்கள் நாடே என்னும் வாக்கியம் ஒரு அடியாக இருந்து வந்தது. இது யாவருக்கும் தெரிந்ததேயாகும். இப்போதைய பதிப்புகளில் பாரத நாடு என்பதை எடுத்துவிட்டு உன்னத ஆரிய நாடெங்கள் நாடே என்று திருத்திப் பதிக்கப்பட்டிருக்கின்றதாம். இம்மாதிரியாகவே அதில் வேறு பல விஷயங்களும் சந்தேகிக்க வேண்டியதாகவே இருக்கின்றன.பாரதி பாடல் என்பதாக சில பாட்டுகள் காலம் சென்ற திரு.சுப்பிரமணிய பாரதி…

பாரதி ஆராய்ச்சி அறிவாளியா? இயற்கைவாத கவியா? அவர் ஒரு புராண பண்டிதரே

நம் தமிழ் நாட்டில் சமீபத்தில் பாரதியின் தினத்தைப் பல இடங்களில் கொண்டாடினார்கள். அப்பொழுது அவரை ஒரு தெய்வமாகப் பாவித்து அவருடைய படத்துக்கு மாலை போட்டுத் தூபதீப நைவேத்தியங் கூடச் சிலர் செய்தார்கள். இப்படியெல்லாம் செய்வதற்குப் பார்ப்பனரின் சூழ்ச்சி பிரசாரமும் பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள் நம்பிக்கையுமே காரணமென்றும் மற்றபடி இவர்கள் பாரதியைப் பற்றியோ அல்லது அவருடைய பாடல்களைப் பற்றியோ அறிந்து கொண்டாடப்பட்டதல்லவென்றும் எடுத்துக் காட்டவே இக்கட்டுரையை எழுதத் துணிந்தோம். ஆகையால் வாசகர்கள் இதைப் படித்த பின்பாவது தாங்கள் அக்கொண்டாட்டங்களில்…

பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத் தக்கது யாது? – பாரதி

 (மகாகவி பாரதியார் எழுதி அவருடைய பெண் தங்கம்மாவால் புதுச்சேரியில் ஒரு கூட்டத்தில் படிக்கப்பட்டது) ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டுமன்று, பெண்ணுக்கும் அப்படியே. ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழ விரும்புதல் மனுஷ்ய ஜீவனுடைய கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம் விடுதலை. அடிமைக்கு இன்பம் கிடையாது. தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்தார் படுங்கஷ்டங்களைக் குறித்து 1896-ம் வருஷத்தில் கல்கத்தாவில் கூடிய பன்னிரண்டாம் ஜனசபைக் (காங்கிரஸ்) கூட்டத்தில் செய்யப்பட்ட தீர்மானமொன்றை ஆதரித்துப் பேசுகையில் வித்வான் ஸ்ரீ பரமேச்வரன் பிள்ளை…

நெஞ்சு பொறுக்குதில்லையே – மகாகவி பாரதியார்

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி யஞ்சி சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சிப் பேய்களேன்பார்-இந்த மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார் துஞ்சுது முகட்டி லென்பார்-மிக துயர்படு வார்எண்ணி பயப்படுவார் (நெஞ்சு) மந்திர வாதி யென்பார்-சொல்ல மாத்திரத்தி லே மனக் கிலிபிடிப்பார் யந்திர சூனியங்கள் -இன்னும் எத்தனை யாயிரம் இவர் துயர்கள்! தந்த பொருளைக் கொண்டோ- ஜனம் தாங்குவ ருலகத்தில் அரசரெல்லாம் அந்த அரசியலை -இவர் அஞ்சுதரு பேயென்றேண்ணி நெஞ்சமயர்வார்(நெஞ்சு) சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச்- சேவகன் வருதல்கண்டு…

மகாகவி பாரதியார் குறித்து காந்தி

LETTER TO S. GANESAN SATYAGRAHA ASHRAM, S ABARMATI, October 26, 1928 MY DEAR GANESAN, Here is a letter from Spain. Please send him the information he wants, and the books you should send only when he sends the money for them. Mr. Gregg is here and he complains of absence of any letter from you, even regarding business…

தராசும் காந்தியடிகளும் – பாரதி

தராசு சொல்லலாயிற்று:- “ஸ்ரீமான் காந்தி நல்ல மனுஷர். ”அவர் சொல்லுகிற ஸ்த்ய விரதம், அஹிம்ஸை, உடமை மறுத்தல், பயமின்மை இந்த நான்கும் உத்தம தர்மங்கள் – இவற்றை எல்லோரும் இயன்றவரை பழக வேண்டும். ஆனால் ஒருவன் என்னை அடிக்கும்போது நான் அவனைத் திருப்பி அடிக்கக் கூடாதென்று சொல்லுதல் பிழை. “சுதேசியம் ஜாதிஸமத்வம், தேசபாஷைப் பயிற்சி, தெய்வ பக்தி இந்த நான்கையும் இன்றைக்கே பழகி சாதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நமது தேசம் அழிந்துபோய்விடும். “நாக்கைக் கட்டுதல், பிரமசரியம்…