கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது – அண்ணா

  கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது! கோடு, குன்றம் இரண்டும் ஓரேபொருளைக் குறிக்கும் சொற்களன்றோ என்பர் அன்பர், உண்மை. அதுபோலவே இங்கு நாம் விளக்க எடுத்துக் கொண்ட பிரச்னை சம்பந்தப்பட்டமட்டில், உயர்ந்தது தாழ்ந்தது என்னும் இருசொற்களுமம் கூர்ந்து நோக்கும்போது, ஒரே பொருளையே தருவதும் விளங்கும். எந்தப் பிரச்சனை? எந்தக் கோடு? எந்தக் குன்றம்? அச்சாரியார் பிரச்சனை! திருச்செங்கோடு! திருப்பரங்குன்றம்! இவையே சிலபல திங்களாக வீடு, நாடு, மன்றமெங்கும் பேசப்பட்டவை. இப்போது திருச்செங்கோடு தேர்தல் செல்லுபடியாகக் கூடியதே என்று…

காமராஜர் சிந்தும் கண்ணீர்! – அண்ணா

அந்த மோகனப் புன்சிரிப்பிலே, அவரும் சொக்கினார். பத்தரை மாற்றப் பசும்பொன் மேனியனே! ஓற்றைத் துகிடுத்த ஒளிவிடு வடிவழகா! பற்று ஆற்றவனே! பவம் அறுத்திடுவோனே!! – என்று அவர் அர்ச்சித்தார், ஒருநாள் இருநாளல்ல – ஒய்வின்றி இருபது ஆண்டுகள்!! தொழுது நின்றவரை, தூரத்திலிருந்து நாம் அழைத்து, “பக்திப் பரவசத்திலே மெத்தவும் உடுபட்ட அன்பரே! நீர்தொழும் தேவன், உமக்கு அருள்பாலிக்க மாட்டானே! பூசுரரின் பாசுரமே அந்தத் தேவனுக்குச் செந்தேன்! உன் மலரைவிட, அவர்கள் தரும் சருகு, அவருக்கு ஆனந்த மளிக்கும்!…

“Clique” – Kamaraj vs Rajaji (& Gandhi) – II

இந்தி பிரசாரசபை வெள்ளி விழாவில் கலந்து கொள்வதற்காக 1946 ஆம் ஆண்டில் காந்திஜி தமிழகத்திற்கு வந்திருந்தார். அவர் ஒரு வார காலம் தியாகராய நகரில் தங்கியிருந்தபோது அவரைத் தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் தமிழ் நாட்டில் மூலைமுடுக்குகளிலிருந்தெல்லாம் வந்து கூடியிருந்தார்கள். ஆகஸ்ட் போராட்டத்துக்குப் பின் காந்திஜி பின் புகழும் காங்கிரசின் செல்வாக்கும் நாட்டு மக்களிடையே பெரும் அளவில் ஓங்கியிருந்தன. அப்போது காமராஜ்தான் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர். ஆனாலும் காந்திஜி எப்போது சென்னை வருகிருறார். எந்த ஸ்டேஷனில் அவரைச் சந்தித்து…

‘கன்னடிய இராமசாமிக்குத் தமிழ் நாட்டில் என்ன வேலை’ – காமராஜர்

நாம் யாருக்கு எதிரி திராவிடர் கழகத்தாராகிய நாம் பார்ப்பனர்களுக்கு எதிராக வேலை செய்கிறோமென்றும், தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனர்கள், திராவிடர் கழகத்தாருக்குப் பயந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதென்றும், திராவிடர் கழகத்தாரால் செய்யப்பட்டு வரும் ‘ஆபத்துகளை’ ஒழித்துப் பார்ப்பனர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும் 1-3-49இல் நடைபெற்ற பட்ஜெட் விவாதக் கூட்டத்தின் போது தோழர் காளேஸ்வரராவ் அவர்கள் சட்டசபையில் பேசியிருக்கிறார். பட்ஜெட் கூட்டத்தின் போது தோழர் காளேஸ்வரராவ் இந்த விஷயத்தை ஏன் பேசினார் என்பது தெரியவில்லை. ஒருவேளை, திராவிடக் கழகத்தாரை ஒழித்துக் கட்டுவதற்கும்…

கத்தி வைத்துக் கொள்ளுங்கள் – பெரியார்

டில்லியில் காமராஜர் தங்கி இருந்த வீட்டுக்கு நெருப்பு வைத்து விட்டார்கள் பார்ப்பனர்கள்! ஏன் இப்படிச் சொல்லுகின்றேன் என்றால், நெருப்புவைத்த நாளில் சிருங்கேரி சங்கராச்சாரி, பூரி சங்கராச்சாரி முதலிய பார்ப்பன சமுதாயத் தலைவர்கள் டில்லியில் இருந்திருக்கிறார்கள்; தவிரவும், சந்தியாசிகள் (சாதுக்கள்) என்னும் போல் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் பல பாகங்களிலுமிருந்து அன்று டில்லிக்கு வந்து இருக்கின்றார்கள். ஏன் இந்த சந்தியாசிகளைப் பார்ப்பனர்கள் என்கிறேன் என்றால், பார்ப்பனர் அல்லாத (சூத்திர) சாதிக்கு சந்தியாசம் கொள்ள உரிமை இல்லை. அவனைச் சாது வென்றோ,…

காமராசர் கொலை முயற்சி திட்டமிட்ட சதியே! – பெரியார்

காமராசர் கொலை முயற்சி சரித்திரம்  என்ற நூலிலிருந்து… நமது சென்னை அரசாங்கம், பார்ப்பனர்களுக்கு நிபந்தனை அற்ற அடிமை என்பதைச் சிறிதும் மானம் வெட்கம் இல்லாமல் காட்டிக் கொள் கிறது. சுயநலம் மேலோங்கினால் எப்படிப்பட்டவர்களுக்கும் நீதி, நேர்மை மாத்திரமல்லாமல் பலருக்கு மானம் வெட்கம்கூட மறந்தும், பறந்தும் போய் விடும். இதற்கு சரியான எடுத்துக்காட்டு என்னவென்றால் இம்மாதம் 7-ஆம் தேதி டில்லியில் சங்கராச்சாரிகள், சாதுக்கள், நிர்வாண சாமியார்கள் என்ற பெயர்களைத் தாங்கி நிற்கும் பல அயோக்கியர்களும், பசு வணக்கக்காரர்கள், பொதுமக்கள்…

பசுவதைக்கு தடை விதிக்கக் கோரி டெல்லியில் கலவரம்! துப்பாக்கி சூடு

மாலைமலர் காலச்சுவடுகளில் இருந்து ……….. பசுவதைக்கு தடை விதிக்க கோரி டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக உருவெடுத்தது. துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானார்கள். டெல்லியில் காமராஜர் தங்கி இருந்த வீட்டில் தீப்பந்தங்கள் வீசப்பட்டன. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.   பசுவதைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜனசங்கம் வலியுறுத்தி வந்தது. இதற்காக டெல்லி பாராளுமன்றம் முன்பு 7.11.1966 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. சில எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.  …