காந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்ற பெரியாருக்காக … அண்ணா

காந்தியார் பெரியாரின் மாளிகையிலே தங்கியிருந்திருக்கிறார் ; காந்தியின் நினைவாக தன் தமக்கையின் பெண்ணுக்கு ‘காந்தி’ என்றே பெயர் வைத்திருக்கிறார் பெரியார். காந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்று பெரியார் (ஈ.வெ.ரா.) சொன்னாரென்றால் அவருக்கு அவைகளின்பேரில் இருக்கிற வெறுப்பினால் அல்ல! தேசியக் கொடிக்கு-தேசியச் சட்டத்திற்கு இழுக்கை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அல்ல; ‘இவைகளை எந்தக் காரணத்திற்காக கொளுத்தச் சொல்லுகிறேன்; கிழிக்கச் சொல்லுகிறேன்’ என அவர் எடுத்துச் சொல்லுகிறாரோ அந்தக் குறைபாடுகளையெல்லாம் நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சி…

கல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும் – வ. உ. சிதம்பரம்பிள்ளை

(13. 3. 1928 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குக் காரைக்குடி காந்தி செளக்கத்தில் சிவஞான யோகிகள் தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு.) தலைவர்களே! சீமான்களே! சீமாட்டிகளே ! நமது தேசத்தில் இப்பொழுது கல்வி கற்பிக்கும் முறை பொருத்தமானதாயில்லை. அதனைச் சீர்திருத்தி நன்னிலைக்குக் கொண்டுவரத் தலைவர்கள் ஆராய்ந்து முடிவு செய்திருக்கிறார்கள், அம்முடிவை நீங்கள் நன்கு ஆராய்ந்து நன்மையெனத் தோன்றும் பட்சத்தில் அதனைக் கவர்மெண்டுக் கலாசாலைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்கள் ஏற்படுத்தியுள்ள கலாசாலைகளிலும் நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சியுங்கள். புதிதாக ஏற்படுத்தப்பெறும் கலாசாலை, பாடசாலைகளிலும்…