அவர்(காந்தி) காட்டிய வழி! – அண்ணா

அவர் காட்டிய வழி! தன் நலங் கருதாது பொதுத் தொண்டு புரிந்ததன் காரணமாக உலக உத்தமர் என்ற உயரிய நிலையைப் பெற்ற காந்தியார் மறைந்து ஓர் ஆண்டு நிறைந்து, அவருடைய நினைவின் அறி குறியாக நாடெங்கும், ஏன், உலகமெங்குமே அவருடைய உழைப்புக்கும் தியாகத்திற்கும் நன்றி செலுத்தும் முறையில் அனைவரும் அவருக்கு வணக்கமும் மரியாதையையும் செலுத்தினார். காந்தியார் மறைந்தாலும் அவர் வகுத்த கொள்கைகளும் திட்டங்களும் நம்முன் இருக்கின்றன என்றும், ஆவற்றை நடைமுறையில் கொண்டு வருவதே நம்முடைய நீங்காக் கடமையாக…

திருமணங்கள் எல்லாம் பெரியார் வழியில் நடக்க வேண்டும்! – ராஜாஜி

31.05.1936 இல் குற்றாலத்தில் காலை 9 மணிக்கு பட்டிணம் பொடி உரிமையாளர் தோழர் எஸ். தங்கவேலுவுக்கும் மதுரை அய்யம்பாளையம் வியாபாரி கே.எஸ்.இராமசாமி பிள்ளையின் மகள் பூரணத்தமாளுக்கும் குற்றாலம் காடல்குடி ஜமீன்தார் மாளிகையில் தந்தை பெரியார் தலைமையில் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் நடந்தது.அத்திருமணத்தில் இராச கோபாலாச்சாரியார் (இராஜாஜி), டி.கே. சிதம்பரநாத முதலியார், பப்ளிக் பிராசிக்கியூட்டர் பி. ஆவுடையப் பிள்ளை, அ. பொன்னம்பலனார், ஏ. வேணுகோபால், பி. பிச்சையா, கே.சி. இராமசாமி (கொல்லம்), எ.கே.கே. குற்றாலிங்க முதலியார், சு.ரா. அருணாசலம்…