நாம் “துர்ஜனங்கள்” (சாத்தானின் பிள்ளைகள்)

அன்றொரு நாள்  நண்பர் ஒருவர் தீண்டத்தகாதவர்களை குறிக்க பயன்பட்டில் உள்ள அந்த்யஜா (கடைநிலை இழி பிறப்பாளன் ) என்கிற வார்த்தைக்கு பதிலாக ஹரிஜன்  (கடவுளின் பிள்ளைகள் ) என்கிற வார்த்தையை மாற்றாக பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். அந்த வார்த்தை நாகர் பிராமண சமூகத்தை சேர்ந்த மிகப்பெரும் முனிவரான நரசிங்க மேத்தா பயன்படுத்திய சொல். அவர் தீண்டத்தகாத மக்களை தனக்கானவர்கள் என்று சொல்லி அவர்களுக்காக ஓயாமல் இயங்கியவர் . அப்படி ஒரு மாபெரும் முனிவரால் பயன்படுத்தப்பட்ட சொல்லை…