இராஜாஜியின் சமூக சீர்திருத்தப் பணிகள்

இராஜாஜி அரசியல்வாதியாக, ஆன்மீகவாதியாக, எழுத்தாளராக தமிழகத்தில் ஒளிர்ந்தவர். தொரப்பள்ளியில் ஒரு கிராம அதிகாரியின் புதல்வராகப் பிறந்து. படித்து, சேலத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராக உயர்ந்தவர். தனிப்பட்ட அளவில் உயரிய ஒழுக்கமுடைய எளிய வாழ்வினை இறுதிவரை வாழ்ந்தவர். கூர்த்தமதி கொண்டவர் இராஜாஜி. எனவே புகழை விட கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருந்தவர். அரசியலில் செக்குலரிசத்திற்கு ஆதரவாக இருந்தவர். எனவே சமத்துவம், சுதந்திரமுடைய ஜனநாயக சமுதாயம் மலர்வதை வாழ்நாள் இறுதிவரை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர். 1919களில் மகாத்மா காந்தியை சென்னையில் சந்தித்ததிலிருந்து…

காந்தியின் வளர்ப்பு மகள் லட்சுமி (பட்டியல் சாதி)

சபர்மதி ஆசிரமத்தில் வளர்ந்த காந்தியின் வளர்ப்பு மகள் லட்சுமி (பட்டியல் சாதி) பேராசிரியர் அ,மார்க்ஸ் அவர்களின் “காந்தியும் தமிழ்சனாதனிகளும்” என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் இருந்து …. ஜன 9, 1915 ல் காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்புகிறார். தன்னுடன் தென்னாப்பிரிக்காவில் ஃபீனிக்ஸ் பண்ணையில் இருந்த பறையர் சாதியைச் சேர்ந்த செல்வன் (துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்) என்பவரின் மகனை (நாயக்கர் ) தரங்கம்பாடியில் இருந்து ஆசிரமத்துக்கு ஏப்ரலில் அழைத்து வருகிறார். மே 20-25 1915-இல்…