இறந்த காந்தியார் நம் காந்தியார் – பெரியார்

சென்ற மாநாட்டிற்குப்பின் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் முதன்மையாகப் பேசப்படவேண்டியது காந்தியாரின் மறைவைக் குறித்தாகும். காந்தியார் உயிரோடிருந்த வரை அவருடைய போக்கைப் பெரும் அளவுக்குக் கண்டித்துவந்த எனக்கு காந்தியார் மறைவுக்குத் துக்கப்படவோ, அவரது மறைவுக்குப்பின் அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசவோ என்ன உரிமை உண்டென்று சிலர் கேட்கலாம். சிலர், காங்கிரஸ்காரரின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக்கொள்ளவே நான் இவ்விதம் சூழ்ச்சி செய்வதாகவும் கருதி இருக்கலாம். ஆனால், தோழர்களே! இவை உண்மையல்ல. காந்தியார் மறைவுக்காக எந்தக் காங்கிரஸ்காரர். துக்கப்பட்டா ர் ? அழுதார்…

வினோபாவுடன் திராவிட நாடு பிரச்சினை – அண்ணா

தம்பி, புனிதமான புத்தர் விழாவைக் கெடுத்துத் தொலைத்தான் பாவி, தூய்மை நிரம்பிய தமிழ்ச் சங்கப் பொன்விழாவைப் பாழாக்கிவிட்டான் பாதகன் என்றெல்லாம், பழிசுமத்தப்படுகிறது உன் அண்ணன் மீது. ஏன்தான் நமக்கு இந்தத் தொல்லைகள் தாமாக வந்து தாக்குகின்றனவோ என்று நான் சில வேளைகளிலே கவலைப் படுவதும் உண்டு – எனினும் என் செய்வது? சில பல நிகழ்ச்சிகளில் நான் ஈடுபட நேரிடுகிறது. நான் ஈடுபடுவதனாலேயே நிகழ்ச்சிகள் கெட்டு விடுகின்றன என்று கூறி, நான் தாக்கப்படுகிறேன். அந்த முறையில், இதற்கு…

பெரியார் – வினோபா சந்திப்பு: 2 மணி நேரம் ரகசிய பேச்சு

ஈ.வெ.ரா. பெரியாரும், காந்தியின் சீடர் வினோபாவும் திருச்சியில் சந்தித்தனர். 2 மணி நேரம் தனியாகப் பேசினார்கள். பூமிதான இயக்கத் தலைவர் வினோபாவும், திராவிடர் கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரும் நேர் எதிர்மாறான கொள்கை உடையவர்கள். காந்தியின் சீடரான வினோபா கடவுள் பக்தி உடையவர். நிலங்களை தானமாக பெற்று நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கி வந்தார். ஆனால் கோவில்களுக்கு நிலம் எழுதி வைப்பதை கண்டித்து வந்தார். பெரியார் மூட நம்பிக்கைகளை எதிர்த்து தீவிர பிரசாரம் செய்து வந்தார். பிள்ளையார்…

ஏன் காங்கிரசிலிருந்து வெளியேறினேன் ? – பெரியார்

பேரன்பு படைத்த தலைவர் அவர்களே! தாய்மார்களே! பெரியோர்களே! வ. வே. சு. அய்யர் என்ற பார்ப்பனர் சேரமாதேவி என்ற இடத்தில் ஒரு குரு குலத்தை வைத்து நடத்திவந்தார். அதற்கு தமிழ்நாடு காங்கிரசிலிருந்து 2 தடவையில் ரூ.10,000 கொடுப்பதாகச் சொல்லி முதல் முறையாக ரூ.5000-த்தை அப்போது தலைவனாய் இருந்த நான் கொடுத்தேன். அதோடு, பொதுமக்களிடம் ரூ.10,000க்குமேல் சேர்ந்தது. இவைகளை வைத்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட குருகுலத்தில்,பார்ப்பான் பிள்ளைகளுக்கு உப்புமாவும் நம்மவர் பிள்ளைகளுக்குப் பழைய சோறும், தனி இடத்தில் (வெளியில்) சாப்பாடும் தரப்பட்டன.…

காந்தியை பெரியார் எச்சரித்தாரா ? – 2

மகாத்மா வரவேற்பு கதரின் பேரால் நமது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு இடையூறு.அதாவது அரசியலி ன்பேரினாலும் கடவுள்.மோகம்,மதம், என்னு ம்பேரினாலும் எவ்வளவு கொடுமையும். சூழ்ச்சிகளும் செய்துவந்தார்களோ வருகிறார்களே அதுபோலவே ஶ்ரீரீமான் சி.இராஜகோபாலாச்சாரியார் முதலிய பார்ப்பனர்களும் அவருடைய பார்ப்பன சிஷ்யர்களும் பார்ப்பனரல்லாத சில கூலிகளும் சூழ்ச்சி செய்து வருவதாக நாம் நினைப்பதற்கு இடமேற்பட்டு வருவதற்கு தகுந்தாற் போல்பல இடங்களில் இருந்து சமாச்சாரங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இச்சூழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் மகாத்மா வரவை ஒருஆயுதமாக உபயோகப்படுத்திக்கொள்ளுகிறார்கள் என்றும் தெரியவருகிறது.”மகாத்மாவின்தென்னாட்டு விஜயம்”என்னும் பேரால்  கதர்…

காந்தியை பெரியார் எச்சரித்தாரா ? – 1

(1927-ல், பெங்களுரில் காந்தியார்-பெரியார் சந்திப்பு- நூல் : இந்து மதமும் காத்தியாரும் பெரியாரும் (1948)-வள்ளுவர் பதிப்பகம், பவானி) வே.ஆனைமுத்து அவர்கள் தொகுத்த “ பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள் தொகுதி 2” பக்கம் 1005 -1008 இல் இருந்து  1927ஆம் ஆண்டு பெங்களூரில் காந்தியர் விடுதியில் தோழர் இராஜகோபாலாச் சாரியார் அவர்களும், தோழர் தேவதாஸ் காந்தியவர்களும் கீழே இருந்து வரவேற்று, காந்தியாரிடம் தனி அனுமதி பெற்று தந்தை பெரியார் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்கள். அவ்வமயம்…

காந்தியார் மாற்றமும், கொலையும் – பெரியார்

தோழர்களே! கதத்திரம் வந்துவிட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டு வெள்ளையனும் போய் விட்டதாகக் கூறப்பட்ட அந்தத் தினத்திலிருந்து, காந்தியாரின் எண்ணங்களில் பல குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டு வந்ததை நான் கண்டேன். காங்கிரஸ்காரர்கள் விரும்பியபடி சுயராஜ்யம் கிடைக்குமானால், நம் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் என்னென்ன கேடுகள் விளையக்கூடும் என்று நான் இடைவிடாது கூறிவந்தேனோ, அக் கேடுகள் வினைய நேரிட்டதை உணர்ந்து, காந்தியார் அதை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார்: அக்கேடுகளையும் அனுபவிக்க ஆரம்பித்தார் அவசரப்பட்டு சுயராஜ்யம் கேட்டது எங்கு ஆபத்தாக முடியுமோ என்று கவலைகொள்ள ஆரம்பித்தார் :…