மகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்

காந்தியடிகளின் வளர்ப்பு மகளுடன் ஒரு சந்திப்பு (20.10.1968) தமிழில் : காஞ்சி சு.சரவணன் கி.பி.1915-ஆம் ஆண்டில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய பிறகு குஜராத்தில் அஹமதாபாத்தில் உள்ள கோச்ரப்பில் சபர்மதி நதிக்கரையில் தன்னுடைய சமூக அரசியல் பணிகளின் மையமாக இருக்கும் பொருட்டு ஆசிரம வாழ்க்கையை துவக்கினார். அதில் தென்னாப்பிரிக்காவின் டால்ஸ்டாய் மற்றும் போனிக்ஸ் குடியிருப்பைப் போலவே தன்னுடைய சொந்த குடும்பத்தார் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரையும் ஆசிரமத்தில் இணைத்துக் கொண்டு ஒரு கூட்டு வாழ்க்கை முறையை நடத்தினார். அதில்…

காந்தியின் ஆசிரமத்தில் வசித்த தமிழ் (பறையர்) குடும்பம்

காந்தியின் தென்னாப்பிரிக்க மற்றும் இந்திய ஆசிரமத்தில் வசித்த தரங்கம்பாடியைச் சேர்ந்த தமிழ் (பறையர்) குடும்பம் – செல்வனின் (குண்டடிபட்டு இறந்தவர்) மனைவி , மூத்த மகன் அந்தோணிமுத்து , இளைய மகன்  நாய்யகர் –  1914 ல் எடுக்கப்பட்ட புகைப்படம்   ஒப்பந்த கூலி எண் : – 74863 ஆண்டு : – செப் 1898 (நாட்டலுக்கு வந்த தேதி) பெயர் :- செல்வன் ஆரோக்கியம் வயது :- 26 மனைவி : – அருளாயி…

‘தீண்டப்படாதோர்’, ‘ஹரிஜன்’, ‘தலித்’, ‘அட்டவணைச் சாதியினர்’ எது சரி ?

இந்திய இழிவு கட்டுரையில் அருந்ததிராய் கீழ்க்கண்டவாரு சொல்கிறார் : இன்றைய இந்திய அறிவாளிகள் கூட வெளிப்படுத்தத் தயங்கும் உணர்வு நடையில் அம்பேத்கர் 1945இல் எழுதினார்: ‘தீண்டப்படாதோருக்கு இந்து மதம் கொடூர அரங்காய்த் திகழ்கிறது.’ ஓர் எழுத்தாளர் சக மனிதர்களை வர்ணிப்பதற்கு ‘தீண்டப்படாதோர்’, ‘அட்டவணைச் சாதியினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ போன்ற பதங்களைப் பயன்படுத்த வேண்டியிருப்பது கொடூர அரங்கில் வாழ்வதை ஒத்ததே. அம்பேத்கர் ‘தீண்டப்படாதோர்’ என்னும் சொல்லைத் தயக்கமேதுமின்றி ஆழ்ந்த கோபத்துடன் பயன்படுத்திய காரணத்தால், நானும்…