மதுரை தந்த மாணிக்கம் – III

ஆலயப்பிரவேசம் ஹரிஜனங்களை சமுதாயத்தில் சரி சமானமான ஜனங்களாக ஆக்கிட வேண்டுமென்ற உள்ளுணர்வு ஆசை அய்யருக்கு வளர்பிறையாக வளர்ந்து கொண்டிருந்தது. தேசவிடுதலைப் போருக்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமத்தையும் அக்கறையையும் விட ஹரிஜன சேவைக்குத்தான் அதிகம் உழைப்பையும் பணத்தையும், காலத்தையும் செலவிட்டார். மதுரையில் அய்யரைப் போலவே, மதுரை காந்தி என்று அழைக்கப்பட்ட என்.எம்.ஆர். சுப்புராமன் அவர்களும் விளங்கினார். இருவரும் சேர்ந்து என் போன்ற தொண்டர்களுடன் ஹரிஜன சேவையில் முழு மூச்சுடன் இறங்கினர். நாடு விடுதலை அடையும். அது அடைகிறபோது…

மதுரை தந்த மாணிக்கம் – II

ஈ.வெ.ரா. பெரியாரை பாதுகாத்தார் 1946இல் வைகை வடகரையில் திராவிடக் கழக மாநாடு. சில தி.க தொண்டர்கள் மீனாட்சியம்மன் கோவிலுக்குள் சென்று சாமி சிலைகளைப்பற்றி கிண்டலும் கேலியுமாகப் பேசினார்கள். தகவலைக்கேட்ட மதுரை மக்கள் ஆவேசமாக எழுந்து தி.க. தொண்டர்களை மாநாட்டுப் பந்தல்வரை விரட்டிச் சென்றதோடு மாநாட்டுப் பந்தலுக்கும் தீ வைத்து விட்டார்கள். அப்போது ய­னாய் நகரில் தங்கியிருந்த மாநாட்டுத் தலைவரான ஈ.வெ.ரா. பெரியார் அவர்களையும் மக்கள் சூழ்ந்து விட்டார்கள். போலீஸாலும் தடுக்க முடியவில்லை. தகவல் அறிந்த அய்யர், அங்கு…

மதுரை தந்த மாணிக்கம் – I

மதுரை தந்த மாணிக்கம் – ஸ்ரீமான், அ.வைத்தியநாதய்யர்  —–  ஐ.மாயாண்டி பாரதி (சுதந்திரப் போராட்ட வீரர்) மதுரை தந்த மாணிக்கம் – ஸ்ரீமான், அ.வைத்தியநாதய்யர், இவர் மாசிலா தேசபக்தர் தனது படிப்பு, திறமை, பணம், உழைப்பு ஆகிய யாவற்றையும் தேசவிடுதலைக்கே அர்ப்பணம் செய்தவர். இவரை மதுரை மக்கள் வைத்திய நாதய்யர் என்று அழைப்பது இல்லை. அய்யர் என்றே பெருமையுடன் அழைப்பார்கள். அய்யரை எனக்கு 1930 முதல் தெரியும். அவருடைய வீடு மேலச் சந்தைப்பேட்டை தெருவில் நியூ காலேஜ் ஹவுஸ்க்கு…