கத்தி வைத்துக் கொள்ளுங்கள் – பெரியார்

டில்லியில் காமராஜர் தங்கி இருந்த வீட்டுக்கு நெருப்பு வைத்து விட்டார்கள் பார்ப்பனர்கள்! ஏன் இப்படிச் சொல்லுகின்றேன் என்றால், நெருப்புவைத்த நாளில் சிருங்கேரி சங்கராச்சாரி, பூரி சங்கராச்சாரி முதலிய பார்ப்பன சமுதாயத் தலைவர்கள் டில்லியில் இருந்திருக்கிறார்கள்; தவிரவும், சந்தியாசிகள் (சாதுக்கள்) என்னும் போல் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் பல பாகங்களிலுமிருந்து அன்று டில்லிக்கு வந்து இருக்கின்றார்கள். ஏன் இந்த சந்தியாசிகளைப் பார்ப்பனர்கள் என்கிறேன் என்றால், பார்ப்பனர் அல்லாத (சூத்திர) சாதிக்கு சந்தியாசம் கொள்ள உரிமை இல்லை. அவனைச் சாது வென்றோ,…

காமராசர் கொலை முயற்சி திட்டமிட்ட சதியே! – பெரியார்

காமராசர் கொலை முயற்சி சரித்திரம்  என்ற நூலிலிருந்து… நமது சென்னை அரசாங்கம், பார்ப்பனர்களுக்கு நிபந்தனை அற்ற அடிமை என்பதைச் சிறிதும் மானம் வெட்கம் இல்லாமல் காட்டிக் கொள் கிறது. சுயநலம் மேலோங்கினால் எப்படிப்பட்டவர்களுக்கும் நீதி, நேர்மை மாத்திரமல்லாமல் பலருக்கு மானம் வெட்கம்கூட மறந்தும், பறந்தும் போய் விடும். இதற்கு சரியான எடுத்துக்காட்டு என்னவென்றால் இம்மாதம் 7-ஆம் தேதி டில்லியில் சங்கராச்சாரிகள், சாதுக்கள், நிர்வாண சாமியார்கள் என்ற பெயர்களைத் தாங்கி நிற்கும் பல அயோக்கியர்களும், பசு வணக்கக்காரர்கள், பொதுமக்கள்…

பசுவதைக்கு தடை விதிக்கக் கோரி டெல்லியில் கலவரம்! துப்பாக்கி சூடு

மாலைமலர் காலச்சுவடுகளில் இருந்து ……….. பசுவதைக்கு தடை விதிக்க கோரி டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக உருவெடுத்தது. துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானார்கள். டெல்லியில் காமராஜர் தங்கி இருந்த வீட்டில் தீப்பந்தங்கள் வீசப்பட்டன. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.   பசுவதைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜனசங்கம் வலியுறுத்தி வந்தது. இதற்காக டெல்லி பாராளுமன்றம் முன்பு 7.11.1966 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. சில எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.  …

புனா ஒப்பந்தத்தில் வங்காள (சாதி)இந்துக்களுக்கு உடன்பாடில்லை – தாகூர்

சர் இரவீந்திரநாத தாகூர் அனுப்பிய தந்தி நாள்: 27 ஜூலை 1933 சர் என்.என். சர்க்கார் அவர்களுக்கு, வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்வு சம்பந்தமாக மகாத்மாஜி தெரிவித்த யோசனையை ஏற்பதற்குத் தாமதிக்க வேண்டாம் என்று பிரதமரை வேண்டி அவருக்கு அனுப்பிய தந்தி எனக்கு நினைவுக்கு வருகிறது. புனா உடன்படிக்கை ஏற்படுத்தும் விளைவு என்ன என்பதைப் பற்றி அமைதியாகச் சிந்திக்க அந்த நேரத்தில் எங்களுக்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது. சாப்ரு, ஜெயகர் இருவரும் மற்ற உறுப்பினர்களோடு புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.…

ராஜாஜியின் மறைவு குறித்து பெரியார்

நண்பர் இராஜாஜி அவர்கள் முடிவெய்திய நிகழ்ச்சி எல்லையற்ற துக்கத்துக்குரிய நிகழ்ச்சியாகும். சம்பிரதாயத்திற்கல்ல; உண்மையாகவே சொல்லுகிறேன், இராஜாஜி அவர்கள் ஒப்பற்றவர்; இணையற்றவருமாவார். கொள்கைக்காகவே வாழ்ந்து கொள்கைக் காகவே தொண்டாற்றி முடிவெய்திய பெரியார் ஆவார். அவரது இழப்பு பரிகாரம் செய்ய முடியாத இழப்பாகும். தமிழ் நாட்டில் ஒப்பிலா மணியாய் வாழ்ந்து அரும்பெரும் காரியங்களைச் சாதித்த பெரியார் இராஜாஜி 95ஆம் வயதில் முடிவெய்தி மறைந்துவிட்டார். அவரது பெருமைக்கு ஓர் எடுத்துக்காட்டு தெரிவிக்கவேண்டுமானால், இராஜாஜி இல்லாது இருந்தால் மகாத்மா காந்தி’யே இருந்திருக்கமாட்டார். அதுமாத்திரமல்ல;…

பசு வதை தடைச் சட்டம் குறித்து காந்தி

தடைகள் தீர்வல்ல இந்து மதம் பசுவைக் கொல்வதை இந்துக்களுக்கு மட்டும்தான் தடை செய்துள்ளது. உலகம் முழுமைக்கும் அல்ல. பிறருக்கு அதை செய்வது நிர்பந்தமாகும். நிர்பந்தம் மதத்துக்கு எதிரானது. இந்தியா இந்துக்களுக்கு மட்டுமல்ல, பிற மதத்தினருக்கும் உரியது. நாம் பசுவதையை தடையை அமுலாக்க முயன்றால், பாகிஸ்தான் உருவ வழிபாட்டை தடைசெய்வதை நாம் எப்படி எதிர்க்க முடியும்? நான் கோயிலுக்குச் செல்பவன் அல்ல. ஆனால் பாகிஸ்தான் கோயில்களுக்கு தடைவிதித்தால் நான் என் தலையே கொய்யப்படும் என்றாலும் அதை எதிர்க்க பாகிஸ்தான்…