நான் கண்ட காந்தி – எம்.ஜி.ஆர்

காந்திஜியின் பேரில் எம்.ஜி.ஆர். கொண்டுள்ள பக்திக்கு அளவேயில்லை. இதோ… காந்திஜி பற்றி சொல்கிறார் எம்.ஜி.ஆர். காந்திஜியை நீங்கள்  எப்போது முதலில் பார்த்தீர்கள்? 1930ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. காரைக்குடியில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நான் நடித்துக்கொண்டிருந்த பொழுது காரைக்குடிக்கு வந்திருந்தார் காந்திஜி. அப்போது தான் அவரை பார்த்தேன். அவரை பார்த்ததும் முதன்முதலில் உங்களுக்கு எத்தகைய உணர்வு ஏற்பட்டது? அமைதியும் எளிமையுமே உருவான அவரை பார்த்ததும் ஏதோ தெய்வ தன்மை பொருந்திய ஒருவரை பார்ப்பது போன்ற பக்தி…

காந்திஜி காண விரும்பிய நாடு – அண்ணா

“பரம ஏழைகளும் இது தங்கள் நாடு என்று எண்ணவேண்டும். அதன் அமைப்பில் தங்களுக்கு முக்கியத்துவமும் அதிகாரமும் இருக்கிறது என்று அவர்கள் நினைக்கவேண்டும். மக்களில், உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பதே இருக்கக் கூடாது. எல்லாச் சமூகத்தினரும் அன்யோன்யமாய் வாழ வேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே நான் பாடுபடுவேன்.” இதுவே, உலக உத்தமர் காந்தியாரின் இலட்சியம் என்று அறிவிக்கிறார் பண்டித நேரு. ஒரு நாடு, அன்னியரிடம் அடிமைப்பட்டு விடுதலைப் போர் தொடுத்து, பிறகு தன்னாட்சி பெறுவது, மகத்தானதோர் சம்பவம்…

உலகப் பெரியார் காந்தி – அண்ணா

உலக உத்தமர், மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம், ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக் கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகிவிட்டது, இழிகுணத்தான், மானிலம் போற்றும் மகாத்மாவைக் கொலை செய்து, உலகம் இன்றும் அழுதுகொண்டுதான் இருக்கிறது. அவருடைய மாண்புகளைப் பற்றிப் பேசாத நாடில்லை, எழுதாத ஏடில்லை. எங்கும் கலக்கம் – ஏக்கம் . எவருக்கும் தாங்கொணாத் துக்கம். அதை மாற்ற அவரைப்பற்றிப் பேச முனைகிறோம். ஒவ்வொரு பேச்சும், மீண்டும் மீண்டும், கண்ணீரைக் கொண்டுவரவே உதவுகிறது. மூண்ட…

காந்தியும் வர்ணாசிரம தர்மமும் – சந்திரசேகர சரஸ்வதி

தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்) வைதிக மதம் தலைவலிக்குப் பரிகாரம் சிரச்சேதமா ? இப்போது பெரிய பெரிய தலைவர்களிலிருந்து ஆரம்பித்து தெருவில் போகின்றவன் வரை அத்தனை பேரும் ஜாதி எதற்கு என்கிறார்கள். நாமும்தான் இதைப் பற்றி பேசலாமே என்று ஆரம்பித்தேன். நன்றாக ஆலோசனைப் பண்ணிப் பார்த்தால், இப்படிப்பட்ட ஒரு பாகுபாடு இருப்பதுதான் எல்லாருக்கும் க்ஷேமம் என்று தெரிகிறது. சமூகம் முழுவதும் முன்னேறுவதற்கும் சரி, அவரவரும் சித்த சுத்தியடைந்து ஆத்மாவைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கும் சரி, இந்த ஏற்பாடே…

Tilak & Ganesh Chaturthi

  Tilak transformed worshipping Ganesha into Ganesh Chaturthi , (1894) which had twin aims. On the one hand it was a replacement counterpart to Muharram observance and on the other a mobilisational strategy to unite people. It is said that upon the inception of Ganesha Chaturthi, Hindus abandaoned participating Muharram festival and instances of riots were…

மகாத்மா காந்தி பஞ்சகம் -மகாகவி பாரதியார்

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க! அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம் குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப் படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்! முடிவிலாக் கீர்த்தி பெற்றாய, புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்! கொடியவெந் நாக பாசத்தை மாற்ற…