தென்னாப்பிரிக்க நிறவெறி

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்த போது கோபால கிருஷ்ண கோகலே ஆண்ட்ரூஸைக் காந்தியடிகளிடம் அனுப்பி வைத்தார். காந்தியடிகள் தனது கருத்தில் சிறிது மாறுதல் செய்ய வேண்டும் என ஆண்ட்ரூஸ் விரும்பினார். அப்பாவி ஆண்ட்ரூஸீக்கு இப்பணியில் சிறிதளவு வெற்றி கூடக் கிடைக்கவில்லை. மாறாக, ஆண்ட்ரூஸ் தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டு அண்ணலின் சீடரானார்.   ஒரு நாள் காலை ஆண்ட்ரூஸிடம் காந்தியடிகளுக்கு ஒரு வேலை இருந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்பொழுது ஒருவர் வந்து, ‘இன்று ஞாயிற்றுக்கிழமை யாதலால் ஆண்ட்ரூஸ்…

காந்தியை மனிதராகவே இருக்க விடுங்கள் – வினோபா

காந்தியைப் பொறுத்த வரையில் இத்தகைய மூட பக்திக்குத் தேவை இல்லை. அவர் ஒரு மனிதர் மட்டும் தான். அப்படி அவர் மனிதராகவே இருக்க வேண்டும். அவரை அப்படி இருக்க விடுவதால் தான் நமக்கு லாபம், அப்படிச் செய்வதால் நல்லவர் ஒருவரின் ஓவியம் நம் கண் முன் நிற்கும். இன்றைக்கு மிகத் தேவையான ஒழுக்க நெறிகள் எவை என்பது உலகத்துக்குத் தெரிய வாய்ப்புண்டாகும். அதை விட்டு அவரைத் தெய்வமாக்கினால் தெய்வங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை என்பதன்றி நமக்குக் கிடைக்க…

மதுரை தந்த மாணிக்கம் – III

ஆலயப்பிரவேசம் ஹரிஜனங்களை சமுதாயத்தில் சரி சமானமான ஜனங்களாக ஆக்கிட வேண்டுமென்ற உள்ளுணர்வு ஆசை அய்யருக்கு வளர்பிறையாக வளர்ந்து கொண்டிருந்தது. தேசவிடுதலைப் போருக்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமத்தையும் அக்கறையையும் விட ஹரிஜன சேவைக்குத்தான் அதிகம் உழைப்பையும் பணத்தையும், காலத்தையும் செலவிட்டார். மதுரையில் அய்யரைப் போலவே, மதுரை காந்தி என்று அழைக்கப்பட்ட என்.எம்.ஆர். சுப்புராமன் அவர்களும் விளங்கினார். இருவரும் சேர்ந்து என் போன்ற தொண்டர்களுடன் ஹரிஜன சேவையில் முழு மூச்சுடன் இறங்கினர். நாடு விடுதலை அடையும். அது அடைகிறபோது…

மதுரை தந்த மாணிக்கம் – II

ஈ.வெ.ரா. பெரியாரை பாதுகாத்தார் 1946இல் வைகை வடகரையில் திராவிடக் கழக மாநாடு. சில தி.க தொண்டர்கள் மீனாட்சியம்மன் கோவிலுக்குள் சென்று சாமி சிலைகளைப்பற்றி கிண்டலும் கேலியுமாகப் பேசினார்கள். தகவலைக்கேட்ட மதுரை மக்கள் ஆவேசமாக எழுந்து தி.க. தொண்டர்களை மாநாட்டுப் பந்தல்வரை விரட்டிச் சென்றதோடு மாநாட்டுப் பந்தலுக்கும் தீ வைத்து விட்டார்கள். அப்போது ய­னாய் நகரில் தங்கியிருந்த மாநாட்டுத் தலைவரான ஈ.வெ.ரா. பெரியார் அவர்களையும் மக்கள் சூழ்ந்து விட்டார்கள். போலீஸாலும் தடுக்க முடியவில்லை. தகவல் அறிந்த அய்யர், அங்கு…

மதுரை தந்த மாணிக்கம் – I

மதுரை தந்த மாணிக்கம் – ஸ்ரீமான், அ.வைத்தியநாதய்யர்  —–  ஐ.மாயாண்டி பாரதி (சுதந்திரப் போராட்ட வீரர்) மதுரை தந்த மாணிக்கம் – ஸ்ரீமான், அ.வைத்தியநாதய்யர், இவர் மாசிலா தேசபக்தர் தனது படிப்பு, திறமை, பணம், உழைப்பு ஆகிய யாவற்றையும் தேசவிடுதலைக்கே அர்ப்பணம் செய்தவர். இவரை மதுரை மக்கள் வைத்திய நாதய்யர் என்று அழைப்பது இல்லை. அய்யர் என்றே பெருமையுடன் அழைப்பார்கள். அய்யரை எனக்கு 1930 முதல் தெரியும். அவருடைய வீடு மேலச் சந்தைப்பேட்டை தெருவில் நியூ காலேஜ் ஹவுஸ்க்கு…

பாரதியும் முத்துலட்சுமி அம்மையாரும்

பெண்கல்வியின் அவசியத்தை எடுத்துக்காட்ட விரும்பிய பாரதி பிற்காலத்தில் சமூக சீர்திருத்தவாதியாக விளங்கிய டாக்டர். முத்துலக்ஷ்மி ரெட்டி எஃப்.ஏ. பரீட்சையில் தேறின செய்தியையும், பிற்காலத்தில் ‘சிஸ்டர்’ என்று அழைக்கப்பட்ட ஆர்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாள் மெட்ரிகுலேஷனில் தேறிய செய்தியையும் ‘சக்கரவர்த்தினி’ பத்திரிகையில் வெளியிட்டார். (சக்கரவர்த்தினி, 1906 ஜனவரி, பக்: 143). “சக்கரவர்த்தினி: இது சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஒரு தமிழ் பத்திரிகை. பெண்பாலாரின் அறிவுப் பெருக்கத்துக்கென்று தொடங்கப் பெற்றது இது. இதன் முதல் இரு பகுதிகள் கிடைக்கப்பெற்றோம். நம் நாட்டு மாதர்கள்…