“Clique” – Kamaraj vs Rajaji (& Gandhi) – II

இந்தி பிரசாரசபை வெள்ளி விழாவில் கலந்து கொள்வதற்காக 1946 ஆம் ஆண்டில் காந்திஜி தமிழகத்திற்கு வந்திருந்தார். அவர் ஒரு வார காலம் தியாகராய நகரில் தங்கியிருந்தபோது அவரைத் தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் தமிழ் நாட்டில் மூலைமுடுக்குகளிலிருந்தெல்லாம் வந்து கூடியிருந்தார்கள். ஆகஸ்ட் போராட்டத்துக்குப் பின் காந்திஜி பின் புகழும் காங்கிரசின் செல்வாக்கும் நாட்டு மக்களிடையே பெரும் அளவில் ஓங்கியிருந்தன. அப்போது காமராஜ்தான் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர். ஆனாலும் காந்திஜி எப்போது சென்னை வருகிருறார். எந்த ஸ்டேஷனில் அவரைச் சந்தித்து வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதெல்லாம் காமராஜுக்குத் தெரியவில்லை. எல்லா ஏற்பாடுகளும் போலீசாருக்கு மட்டுமே தெரிந்திருந்தன. – –

எல்லா விவரங்களையும் போலீசார் மூடு மந்திரமாகவே வைத்திருந்தார்கள். ராஜாஜி, சர். என். கோபாலசுவாமி ஐயங்கார், இந்தி பிரசார சபா காரியதரிசி சத்திய நாராயணா போன்ற ஒரு சில முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமே விவரம் தெரிந்திருந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்_ என்ற முறையில் மகாத்மாஜியை_நேரில் சென்று வரவேற்கும் பொறுப்பு காமராஜிடம் இருந்தது. ஆனாலும் அவருக்கு எந்த விவரமும் தெரியாததால் நேராக இந்தி பிரசார சபைக்குப் போப் விசாரித்தார்.

ராஜாஜி முதலியவர்கள் ஏற்கெனவே காந்திஜியை வர வேற்கப் புறப்பட்டுப் போய்விட்டார்கள் என்கிற தகவல் மட்டுமே காமராஜுக்குக் கிட்டியது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் காந்திஜி வந்து விடுவார். அதற்குள் அவர் இறங்கும் ஸ்டேஷனைக் கண்டுபிடித்து ஆக வேண்டும். இதற்கு என்ன செய்வது? காமராஜுக்கு ஒன்றும் புரியவில்லை.

சிவஇந்தச் சமயத்தில் காமராஜின் நண்பரும் பத்திரிகை நிருபருமான திரு கணபதி அங்கே வந்து சேர்ந்தார். மகாத்மாஜி எந்த ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்கப் போகிறார் என்கிற இரகசியம் பத்திரிகைக்காரர் என்ற முறையில் அவருக்குத் தெரிந்திருந்தது. கணபதி தம்முடைய காரிலேயே காமராஜரை அழைத்துக் கொண்டு அம்பத்துார் ஸ்டேஷனுக்குப் பறந்து சென்றார், அந்த ஸ்டேஷனில்தான் மகாத்மாவை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

காந்திஜி ரயிலை விட்டு இறங்கியதும் காங்கிரஸ் தலைவர் காமராஜ் தம் கையோடு கொண்டு போயிருந்த பெரிய மாலையைப் போட்டு அவரை வரவேற்றார்,

இந்தி பிரசார சபையின் வெள்ளி விழா முடிந்ததும், மகாத்மாஜி பழனிக்கும் மதுரைக்கும் ரயில் மார்க்கமாகவே யாத்திரையாகச் சென்றார்,  அந்தப் பயணத்தின் போது ராஜாஜியும் மகாத்மாவுக்குத் துணையாகச் சென்றிருந்தார்; காமராஜும் போயிருந்தார். காந்திஜியிடம் ராஜாஜிக்கு அதிகச் செல்வாக்கு இருந்த காரணத்தினாலே என்னவோ, காமராஜ் அந்தப் பயணத்தின் போது சற்று ஒதுங்கியே இருந்தார்.

பழனி ஆண்டவர் சந்நிதியில்கூட ராஜாஜிக்கும், காந்திஜிக்கும் தான் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்கள். காந்திஜியும் ராஜாஜியும் பழனிமலைப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தபோது காமராஜ-ம் கூடவே போய்க் கொண்டிருந்தார். பத்திரிகைக்காரன் என்ற முறையில் நானும் போயிருந்தேன். அப்போது ராஜாஜி காமராஜரைக் காட்டி, “இவர்தான் காமராஜ், காங்கிரஸ் பிரசிடெண்ட்” என்று காந்திஜிக்கு அறிமுகப்படுத்தினர்.

காந்திஜி, “எனக்குத் தெரியுமே!” என்று பதில் கூறிஞர். மதுரைக்கும், பழனிக்கும் போய் வந்த பிறகுதான் காந்திஜி “கிளிக் (ஒரு சிறு கும்பல்) என்று காமராஜ் குழுவைக் குறிப்பிட்டார். காந்திஜி தங்களைப் பார்த்து இப்படிச் சொன்னது காமராஜுக்கும், அவரைச் சேர்ந்த காங்கிரஸ் காரர்களுக்கும் பெரும் வேதனையை அளித்தது. அதைத் தொடர்ந்து மதுரையில் ராஜாஜிக்கு எதிராகப் பெரிய ஆர்ப்பாட்டமும் கலவரமும் நடந்தன. காமராஜி மகாத்மாஜியைக் கண்டிக்கும் முறையில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை வருமாறு: ‘ஹரிஜனில் தம் கையெழுத்துடன் எழுதியுள்ள மகாத்மா’ வின் கட்டுரை எனக்கு மிகுந்த திகைப்பை உண்டாக்கியது. நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். சட்டப்படி காரியக் கமிட்டியை அமைத்தது நான்தான். ஆகவே, காந்திஜியின் குறிப்பு எனக்குத்தான் பொருந்த முடியும். சென்னையிலும் தமிழ் நாட்டிலும் காந்திஜி போகுமிடங்களுக்கெல்லாம் நானும் போய்க் கொண்டிருந்தேன். எப்பொழுதும் அவர் கூப்பிடும் துரத்தில்தான் நான் இருந்தேன். காரியக் கமிட்டி அங்கத்தினர்கள் பலரும் கூடவே இருந்தனர். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் விவகாரங்கள் பற்றிக் காந்திஜி இங்கிருந்த போது எங்களிடம் எதுவும் பேசவில்லை. அங்கே போனபின் ‘கும்பல்’ என்ற வார்த்தையை அவர் உபயோகித்துள்ளது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. சட்டசபை வேலைத்திட்டம் தேச சுதந்திரப் போராட்டத்தைப் பலப்படுத்துவதற்கு ஒரு சாதனம் என்பதைத் தவிர, அதில் எனக்கோ, என் சகாக்களுக்கோ அதிக நம்பிக்கை கிடையாது. என் நிலையை விளக்கி நான் பல மேடைகளில் பேசியுள்ளேன். எது என்னவாயினும் நான் சட்டசபை வேலைத்திட்டத்தில் எந்தவிதப் பதவியும் பெற ஆசைப்படவில்லை. காந்திஜியின் கட்டுரைக்குப் பின், பார்லிமெண்டரி போர்டிலிருந்து நான் ராஜிநாமா செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஏனென்றால், இந்தச் சண்டை முழுவதும் சட்டசபைத் திட்டத்தால் ஏற்பட்டதுதான்.

டி.எஸ். அவிநாசிலிங்கம், சி.என். முத்துரங்க முதலியார், ஓ.பி. ராமசாமி ரெட்டியார். ருக்மிணி லட்சுமிபதி ஆகிய நால்வரும், தாங்களும் ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதினர். ஆனல் தேர்தலுக்கு முன் நமக் குள்ள அவகாசம் மிகக் குறுகியதாயிருப்பதால் அனைவரும் மொத்தமாக ராஜிநாமா செய்ய வேண்டாம் என்று அவர்களை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். என் வேண்டுகோளுக்கிணங்கி அவர்கள் போர்டில் இருக்கச் சம்மதித்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை நான் ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இருபது ஆண்டுகளாக நான் விசுவாசத்துடன் பின்பற்றி வந்துள்ள தலைவர் காந்திஜி. அவரிடம் என் பக்தி இன்றும் எள்ளளவும் குறையவில்லை. என்னுல் அவருக்கு வருத்தம் ஏற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே என்ற காரணத்தால்தான் நான். ராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளேன். மாகாண போர்டும், மத்திய போர்டும் எந்த முடிவுகளைச் செய்தாலும் அவற்றை நான் மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என்று இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உறுதி கூறுகின்றேன்.”

காமராஜின் அறிக்கையைப் படித்துப் பார்த்த காந்திஜி மீண்டும் ஹரிஜன் பத்திரிகையில் விளக்கம் எழுதினர். ‘கிளிக்’ என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதியில் தவறான அர்த்தம் எதுவுமில்லை என்று சமாதானம் கூறி, காமராஜ் தம்முடைய ராஜிநாமாவை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும் காமராஜ் தம்முடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

Image : The Hindu

Image : The Hindu

அந்த ஆண்டு நடைபெறவிருந்த அசெம்பிளித் தேர்தலுக்கான பார்லிமெண்டரி போர்டில் காமராஜ் இல்லை. பார்லிமெண்டரி போர்டார் ராஜாஜியின் உதவியுடன் அபேட்சகர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனாலும் சில நாட்களுக்கெல்லாம் சூழ்நிலை சரியில்லை என்பதை அறிந்து கொண்ட ராஜாஜி, தாம் காங்கிரஸ் விவகாரங்கள் எதிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று அறிக்கை வெளி யிட்டுவிட்டு விலகிக் கொண்டார்.

அப்போது டாக்டர் வரதராஜுலு நாயுடு காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்: ”காந்தி தர்மத்தைப் பரப்புவதிலும், காங்கிரஸ் திட்டங்களை செயல்படுத்துவதிலும் காமராஜ் தென்னுட்டிலேயே முதன்மையானவர்.அவரைக் குறித்துத் தாங்கள் தவறாக எழுதியது சரியல்ல. இவ்விஷயத்தில் தாங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.” காந்திஜி நாயுடுவுக்கு உடனே பதில் எழுதினார்: ‘உங்கள் இஷ்டப்படியே நடந்துக் கொள்கிறேன். இத்தத் தகராறில் இனி நான் ஈடுபடுவதில்லை” என்பதே அந்தப் பதில். ராஜாஜியை ‘ஒரு சிறு கும்பல் எதிர்ப்பதாகக் காந்திஜி எழுதியதும் தமிழ் நாட்டில் ஒரு பெரிய கொந்தளிப்பே ஏற்பட்டுவிட்டது. ராஜாஜி கோஷ்டி, காமராஜ் கோஷ்டி என்று இரு பிரிவுகள் தோன்றின.

சாவியின் “சிவகாமியின் செல்வன்” பக்கம் 44-48

related :: “Clique” – Kamaraj vs Rajaji (& Gandhi) 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s