பேராசிரியர் அ.மார்க்ஸின் நூலுக்கு நான் எழுதிய முன்னுரை

https://facebook.com/raattai/ https://raattai.wordpress.com/ இல் கடந்த 3 வருடங்களாக காந்தி, பெரியார், அம்பேத்கர் மற்றும் இந்திய வரலாறு பற்றிய தகவல்களை சேகரித்துவருகிறேன். 2009-இன் ஈழப் பெருந்துயருக்குப் பின் சர்வதேச சமூகம் ஏன் நம்மை கைவிட்டது? நமக்கான சரியான அரசியல் எது? எங்கு தவறு இழைத்தோம்?  போன்ற கேள்விகள் காந்தியின் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியது. ஆரம்பத்தில் காந்தி பற்றிய பதிவுகளை தேடிப்படிக்கும் போது பெரும்பாலும் அவை விமர்சனம் என்ற பெயரில் அவதூறாக இருப்பதையே கண்ணுற்றேன்.…

காந்தி என்கிற மெய்யியலாளர் -அ.மார்க்ஸ்

‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’ நூலின் முன்றாம் பதிப்பிற்கு (பிரக்ஞை வெளியீடு) பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் எழுதிய முன்னுரை முதல் பதிப்பு வெளிவந்து சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் இந்நூலின் இந்த மூன்றாம் பதிப்பு வெளிவருகிறது. தனது நூலின் அடுத்தடுத்த பதிப்புகளுக்கு முன்னுரை எழுதுவதைக் காட்டிலும் ஒரு ஆசிரியனுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அனுபவம் ஏதும் இருக்க இயலாது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்நூல் மீது நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இந்த விவாதங்களின் ஊடாக காந்தி குறித்துத் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய…

மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 9

காந்தி கனவுகண்ட சுயராஜ்யத்தில் பார்ப்பனர்கள் மலம் அள்ளும் துப்புரவு பணியை செய்வார்களா என்ன ? பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் “காந்தியும் தமிழ் சனாதனிகளும்” நூலில் பின் இணைப்பாக கொடுத்துள்ள “தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம் – மா.நீலகண்ட சித்தாந்தியார்” இல் இருந்து  சுயராஜ்யங் கிடைத்தாற் கூட காந்தியே சர்வாதிகாரியாயிருப்பர். பிராமணர் முதலாயினாரை “ மலம் வாருங்கள் தோற்பதனிடுங்கள், வீதி குப்பையைக் கூட்டுங்கள். சுடுகாட்டுக் காவலிருங்கள். பிணந் தூக்குங்கள், பிணத்தைச் சுடுங்கள். வெட்டியான் வேலையைச் செய்யுங்கள். வேற்றுமை வேண்டாம்”…