மகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்

காந்தியடிகளின் வளர்ப்பு மகளுடன் ஒரு சந்திப்பு (20.10.1968) தமிழில் : காஞ்சி சு.சரவணன் கி.பி.1915-ஆம் ஆண்டில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய பிறகு குஜராத்தில் அஹமதாபாத்தில் உள்ள கோச்ரப்பில் சபர்மதி நதிக்கரையில் தன்னுடைய சமூக அரசியல் பணிகளின் மையமாக இருக்கும் பொருட்டு ஆசிரம வாழ்க்கையை துவக்கினார். அதில் தென்னாப்பிரிக்காவின் டால்ஸ்டாய் மற்றும் போனிக்ஸ் குடியிருப்பைப் போலவே தன்னுடைய சொந்த குடும்பத்தார் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரையும் ஆசிரமத்தில் இணைத்துக் கொண்டு ஒரு கூட்டு வாழ்க்கை முறையை நடத்தினார். அதில்…

பதவிக்குரிய தகுதி

சென்னை சட்டசபைக்குச் சபாநாயகர் தேர்தல் நடப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னால் ராஜாஜியிடம் திரு.சிவ சண்முகம் பிள்ளை வந்திருந்தார். வந்தவர் ராஜாஜியைப் பார்த்து, தாம் சபாநாயகர் தேர்தலுக்கு நிற்கப் போவதாகவும் தம்மை ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு ராஜாஜி,”அந்தப்பதவிக்குஇன்னும் யார் போட்டி போடுகிறார்கள்?” என்று கேட்டார். தென்னேட்டி விஸ்வநாதன் போட்டி போடுவதாக சிவசண்முகம் பதிலளித்தார். உடனே ராஜாஜி ‘விஸ்வநாதனைக் காட்டிலும் தாங்கள் எந்த விதத்தில் அந்தப் பதவிக்குத் தகுதி?” என்று சிவசண்முகம் பிள்ளையைப் பார்த்து வெகு அமைதியுடன்…

படித்த பட்டியல் இன இளைஞருக்கு உதவிய ராஜாஜி

ராஜாஜி முதலமைச்சராக இருந்த சமயம்.படித்த ஹரிஜன் இளைஞர்களுக்கு உத்யோகம் பண்ணி வைப்பதில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். வகுப்பு வாரியாகச் சர்க்கார் உத்தியோகங்களைக் கொடுக்க வேண்டுமென்ற விதி ஒன்று ஏற்பட்டிருக்கிறதல்லவா? இந்த விதியானது ஒவ்வொரு சாதியாகத் தாண்டி  ஹரிஜனங்களிடம் வரும்போது பயனில்லாமல் போய்விடுவது வழக்கம். அதாவது அந்த உத்யோகத்துக்குத் தகுந்த ஹரிஜன் அபேட்சகர் இல்லை என்று காரணம் சொல்லி விட்டு, மேல் சாதிக்காரர்களுக்குக் கொடுத்து விடுவது வழக்கம். ஒரு சமயம் போலீஸ் டெபுடி சூபரின்டெண்ட்  வேலைக்கு ஹரிஜன் வகுப்பின்…

தமிழ் ஹரிஜன்

தமிழ் ஹரிஜன் மகாத்மாஜி கடைசியாகச் சென்னைக்கு வந்திருந்தபோது அவரிடம் ராஜாஜி என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் பகல் 12 மணிக்கு மக்களால் பகிரங்கமாகச் சிறையை உடைத்து விடுதலை செய்யப்பட்ட முதல் ஆள் இவர் என்று கூறினார். மகாத்மாஜி “எந்த ஊரில் நடந்தது?” என்றார். “திருவாடானையில் ‘ என்றேன் நான் சுருக்கமாக. இவர் இப்போது சிறந்த தமிழ்ப் புத்தகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தங்கள் ‘ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் வெளியிடவிரும்புகிறார்.” என்று ராஜாஜி சொன்னார். காந்திஜி சிரித்துக்கொண்டு “அச்சா…

ராஜாஜியின் “காந்தி ஆசிரமம்”

வைக்கம் சத்தியாகிரகம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் டிசம்பர் 1924 இல் பெல்காமில் நடைபெற்ற மாநாட்டில் காந்தி காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டிற்குப் பின் சபர்மதியில் வைத்து காந்தியை சந்தித்த ராஜாஜி காந்தி பெயரில் தான் ஒரு ஆசிரமம் அமைக்க விரும்புவதாக கூறி ஆசி வாங்கினார். சொன்னபடியே பிப் 6 1925 இல் திருச்செங்கோடு தாலுகாவில் நல்லிப்பாளையம் கிராமத்திற்கு அருகில் புதுப்பாளையம் குடியிருப்பில் ஆசிரமம் ஒன்றை ஆரம்பித்தார். ரத்னசபாபதி கவுண்டர் என்பவர் நாலரை ஏக்கர் நிலம் தந்து உதவினார்.…

My Daughter’s Marriage – Gora

My contact and conversation with Gandhiji not only confirmed me in atheism but turned my thoughts more towards practical programmes. Hitherto, for the removal of untouchability, my programme had consisted of only cosmopolitan dinners. I thought I should go a step further. There should be inter-marriages. Only inter-marriages will efface the differences of caste, creed,…