கல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும் – வ. உ. சிதம்பரம்பிள்ளை

(13. 3. 1928 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குக் காரைக்குடி காந்தி செளக்கத்தில் சிவஞான யோகிகள் தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு.) தலைவர்களே! சீமான்களே! சீமாட்டிகளே ! நமது தேசத்தில் இப்பொழுது கல்வி கற்பிக்கும் முறை பொருத்தமானதாயில்லை. அதனைச் சீர்திருத்தி நன்னிலைக்குக் கொண்டுவரத் தலைவர்கள் ஆராய்ந்து முடிவு செய்திருக்கிறார்கள், அம்முடிவை நீங்கள் நன்கு ஆராய்ந்து நன்மையெனத் தோன்றும் பட்சத்தில் அதனைக் கவர்மெண்டுக் கலாசாலைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்கள் ஏற்படுத்தியுள்ள கலாசாலைகளிலும் நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சியுங்கள். புதிதாக ஏற்படுத்தப்பெறும் கலாசாலை, பாடசாலைகளிலும்…

சிதம்பரம் சிதைவு

தோழர் வி.ஒ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் முடிவெய்தி விட்டார். தனக்கு இயங்கும் சக்தி இருந்து ஓடி ஆடி உசாவித் திரியும் காலமெல்லாம் தனக்கு சரியென்று தோன்றிய வழிகளில் உழைத்துவிட்டு ஒடுக்கம் ஏற்பட்டவுடன் அடக்கமாகி விட்டார். இது மக்கள் வாழ்க்கையின் நியாயமான நிலையேயாகும். மிக்க மந்தமான காலத்தில் அதாவது மனிதன் பொதுநலம் என்றால் மதசம்மந்தமான காரியம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியல் என்றால் அது தெய்வீக சம்மந்தமானது என்றும், எப்படி எனில், கூனோ குருடோ, அயோக்கியனோ,…

வ.உ.சி பற்றி அறிந்து கொள்ள ……………..

  சுயசரிதை – வ.உ.சி http://bit.ly/vocbiography கப்பலோட்டிய தமிழன் – மா.பொ.சி http://bit.ly/vocmaposi கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் – என்.வி.கலைமணிhttp://bit.ly/vockalaimani (தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்) மா.பொ.சி,என்.வி.கலைமணி எழுதிய நூல்கள் வ.உ.சியின் சுயசரிதையை பிரதி எடுத்தது போல் இருக்கின்றன.என்.வி.கலைமணி எழுதிய நூலில் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டு சம்பவங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. V O Chidambaram pillai – R.A. Padmanabhan http://bit.ly/vocpadmanabhan வள்ளியம்மை சரித்திரம்(வ.உ.சியின் முதல் மனைவி) – முத்துச்சாமிப்பிள்ளை http://bit.ly/vocvalliyammai மனம் போல் வாழ்வு – வ.உ.சி…

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம் பிள்ளை மறைந்த தினம்

மலர்வு :- செப்டம்பர் 5, 1872 ஓட்டப்பிடாரம் || மறைவு :- நவம்பர் 18, 1936 தூத்துக்குடி விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும்.எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம்…