அன்றாட வாழ்வில் மதம்

தான் வாழும் போது ஒருவன் எப்படி நடந்துக்கொள்வது,இறந்த பின் அவன் உடலை எப்படி அடக்கம் செய்வது ஆகியவற்றை மதம் ஆணையிடுகிறது.தன் பாலியல் உந்துதல்களை எப்படித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை மதம் சொல்லுகிறது.ஒரு குழந்தை பிறந்தால் என்னென்ன சடங்குகள் செய்யப்பட வேண்டும்,அதற்கு எப்படிப் பெயரிட வேண்டும்,தலைமுடி எப்படி வெட்டப்பட வேண்டும்,எவ்வாறு முதல் உணவு ஊட்டப்படவேண்டும் போன்றவற்றை மதம் சொல்கிறது.எந்தத் தொழிலை அவன் செய்யவேண்டும் எப்படிப்பட்ட பெண்ணை அவன் மணம் புரிய வேண்டும் என்பதையும் மதம் சொல்கிறது.யாருடன் சேர்ந்து அவன்…