1931 ஆம் ஆண்டு (மார்ச் 26-31) காங்கிரஸ் மகாநாட்டில் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் ஆற்றிய உரை

(பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் தூக்கிலிடப்பட்டதற்குப் பிறகு நடைபெற்ற இந்த மாநாட்டில் ராஜகுருவின் தாயும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் மேடையில் வீற்றிருக்க சர்தார் கிஷன்சிங் உரையாற்றினார்) ராஜகுருவின் அன்னை இங்கு வீற்றிருக்கிறார்கள். இவருக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நான் இந்த அன்னைக்கு தலை வணங்குகிறேன். தலைவர் அவர்களே ! சகோதர சகோதரிகளே ! சற்று நேரத்துக்கு முன்பு உங்களுக்கு முன்னால் என்பால் காட்டிய அன்புக்கும் பரிவுக்கும் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தீர்மானம் பற்றி…