புனா ஒப்பந்தத்தில் வங்காள (சாதி)இந்துக்களுக்கு உடன்பாடில்லை – தாகூர்

சர் இரவீந்திரநாத தாகூர் அனுப்பிய தந்தி நாள்: 27 ஜூலை 1933 சர் என்.என். சர்க்கார் அவர்களுக்கு, வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்வு சம்பந்தமாக மகாத்மாஜி தெரிவித்த யோசனையை ஏற்பதற்குத் தாமதிக்க வேண்டாம் என்று பிரதமரை வேண்டி அவருக்கு அனுப்பிய தந்தி எனக்கு நினைவுக்கு வருகிறது. புனா உடன்படிக்கை ஏற்படுத்தும் விளைவு என்ன என்பதைப் பற்றி அமைதியாகச் சிந்திக்க அந்த நேரத்தில் எங்களுக்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது. சாப்ரு, ஜெயகர் இருவரும் மற்ற உறுப்பினர்களோடு புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.…