காந்திஜிக்கு டால்ஸ்டாயின் கடிதங்கள்

கடிதம் -I யாஸ்னாயா போல்வானா மே 8, 1910 அன்பு நண்பரே, நான் தங்களது கடிதத்தையும், ‘இந்திய சுயராஜ்யம்’ நூலையும் பெற்றேன். அதை நான் மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன். அதில் நீங்கள் எழுப்பியுள்ள அமைதி வழி எதிர்ப்பு பற்றிய கேள்விகள் மிக முக்கியமானவை. இந்தியாவுக்கு மட்டுமல்ல, மனிதகுலம் முழுமைக்கும் தேவையானவை.தங்களுடைய முந்திய கடிதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ஜே.தாசின் தங்கள் வாழ்க்கை வரலாறு நூல் கண்டேன். மிகுந்த ஆழத்துடனும், கவனத்துடனும் படித்தேன். அது எனக்குத் தங்களைப் பற்றிய…