அண்ணாமலை பல்கலைக்கழகத்தையே ரத்து செய்து விடலாம் – சட்ட சபையிலே சகஜானந்தர்

நம்ப மறுக்கிறீர்களா, இந்த வாசகத்தை! எந்த மேதாவி ஐயா, இந்தப் பேச்சு கூறமுடியும்! தென்னாட்டுக்குத் திலகமாவும், தமிழரின் கண்மணியாகவும் திகழும் ஒரு பல்கலைக் கழகத்தை ரத்து செய்துவிடலாம் என்று கூற யாருக்குத் துணிவு பிறக்கும் அனாவசியாரின்  ஆசியுரையைச் சில நாட்களுக்கு முன்பு பெற்ற பல்கலைக்கழகம், ரத்து செய்யப்படுவதா! தமிழ்ப் பல்லைக் கழகமாகத் திகழவேண்டிய இடமாயிற்றே, நாவலர் பாரதியர் தமிழைப் பரப்பிய கழகம்! ங.க.பிள்ளை இருந்த இடம்! மகாகனத்தை அவருடைய வயோதிகப் பருவத்தின் போது, எஞ்சலாட்டிய இடம் யாருக்கு…