பாரதி கட்டுரைகள் :: சமூகம்

பறையர் ‘பறையர்’ என்பது மரியாதை உள்ள பதம் இல்லை,என்று கருதி இக்காலத்தில் சிலர் பஞ்சமர் என்ற சொல்லை அதிகமாக வழங்குகிறார்கள். நானும் சில சமயங்களில் பஞ்சமர்என்ற சொல்லை வழங்குவது உண்டு. ஆனால் பறையர் என்பதேமேற்படி ஜாதியாருக்குத் தமிழ்நாடில் இயற்கையாக ஏற்பட்ட பெயர். பறை என்பது பேரிகை. பூர்வகாலத்தில் நமது ராஜாக்கள்போர்செய்யப் போகும்போது ஜய பேரிகை கொட்டிச் செல்லும்உத்தமமான தொழில் இந்த ஜாதியார் செய்து வந்தபடியால் இவர்களுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று. ‘இது குற்றமுள்ள பதமில்லை’ யென்பதற்கு ருஜூவேண்டுமானால், மேற்படி…