சத்தியம் செத்ததோ ? – கல்கி

எத்தனை காலம் இனி வாழ்ந்திருந்தாலும், 1948-ம் வருஷம் ஜனவரி மாதம் 30-ந் தேதி வரையில் இருந்தது போல் இனி நம் வாழ்க்கை ஒருகாலும் இராது. பெரும் வித்தியாசம் இருக்கத்தான் இருக்கும். சூரியன் நிரந்தரமாக அஸ்தமித்து உலகில் முடிவில் லாத இருள் சூழ்ந்து விட்டால் உலகத்தின் வாழ்க்கை முன்போல் இருக்க முடியுமா? ஒருநாளும் முடியாது. அந்த நிலையிலேதான் இன்று நாம் இருக்கிறோம். நமது வாழ் வில் அப்படி இருள் கவிந்திருக்கிறது. சென்ற முப்பது வருஷங்களாக, காந்தி மகானுடைய வாழ்க்கையைச்…

வாழ்க்கை வழிகாட்டி – அண்ணா

மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியார் என்ற பெயருடன் தென் ஆப்பிரிக்காவிலே முரட்டு வெள்ளையர்களுக்கு எதிராகச் சாத்வீகப் போராட்டம் நடத்திய காலத்திலும் நாட்டுத் தலைவராகி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்திய பல போராட்டங்களின்போதும் சிறைச்சாலையிலேயும் நாட்டு மக்களின் உள்ளத்திலே தூய்மையை உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பலமுறை உண்ணாவிரதம் இருந்த காலங்களிலும் அவர் சென்ற ரயிலைக் கவிழ்க்க முயற்சித்தபோதும் வெறியன் வெடிகுண்டு வீசியபோதும் ஆபத்து அவரை நோக்கி வந்தது. அவ்வளவு ஆபத்துகளிலிருந்தும் அவர் தப்பினார். “ஒவ்வோர் சமயமும் அவர்…

‘Nathuram did not leave the RSS’ – Gopal Godse

கேள்வி: நீங்கள் ஆர்.எஸ்.எஸில் ஓர் அங்கமா? கோபால் கோட்சேயின் பதில்: நாதுராம் (காந்தியைக் கொன்றவன்) தாத்தாத்ரியா நான் (கோபல் கோட்சே) கோவிந்தத் ஆகிய நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸில் இருந்தோம் எங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதைவிட ஆர்.எஸ்.எஸில் வளர்ந்தோம் என்றே கூற வேண்டும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போல் ஆகும்). கோபால் கோட்சேயின் இந்தப் பதிலுக்கு பிஜேபியினர் இதுவரை என்ன சமாதானம் சொல்லி இருக்கிறார்கள்? நாதுராம் கோட்சே உயிருடன் இல்லை – காந்தியாரைக் கொலை செய்த…