மத ஏகாதிபத்யத்தின் மீது தாக்குதல் – அண்ணா

காங்கிரஸ்காரர் விடும் கணைகள் மதத்தின் பேரால் நடைபெறும் ஊழல்களை மக்களுக்கு எடுத்துக் கூறினோம் – மதவிரோதிகள் என்று கண்டிக்கப்பட்டோம். கடவுள் பேரால் நடக்கும் கபட நாடகங்களை விளக்கினோம் – நாத்திகர் என்று நிந்திக்கப்பட்டோம். கோயில்களில் நடைபெறும் கொடுமைகளைக் கூறினோம் – வாயில் வந்தபடி எல்லாம் திட்டப்பட்டோம். மடாலயங்களில் மதோன்மத்த வாழ்வு நடத்தும் பண்டார சந்நிதிகளின் லீலா விநோதங்களை விளக்கினோம் – விதண்டா வாதம் செய்வதாக வீண்பழி சுமத்தப்பட்டோம். புரோகிதர்களின் புரட்டைப் பொதுமக்களுக்குப் புரிய வைத்தோம் பார்ப்பன விரோதி…