நான் கண்ட காந்தி – எம்.ஜி.ஆர்

காந்திஜியின் பேரில் எம்.ஜி.ஆர். கொண்டுள்ள பக்திக்கு அளவேயில்லை. இதோ… காந்திஜி பற்றி சொல்கிறார் எம்.ஜி.ஆர். காந்திஜியை நீங்கள்  எப்போது முதலில் பார்த்தீர்கள்? 1930ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. காரைக்குடியில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நான் நடித்துக்கொண்டிருந்த பொழுது காரைக்குடிக்கு வந்திருந்தார் காந்திஜி. அப்போது தான் அவரை பார்த்தேன். அவரை பார்த்ததும் முதன்முதலில் உங்களுக்கு எத்தகைய உணர்வு ஏற்பட்டது? அமைதியும் எளிமையுமே உருவான அவரை பார்த்ததும் ஏதோ தெய்வ தன்மை பொருந்திய ஒருவரை பார்ப்பது போன்ற பக்தி…