“உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும்”

தினமணியில் வெளியான “ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்” ல் இருந்து திராவிட நாடு சாத்தியமா? திராவிட நாடு சாத்தியமா என்று கருத்தறிய வழக்கறிஞர் வி.பி. ராமன் இல்லத்தில் ஒர் ஆலோசனைக் கூட்டத்தை சம்பத் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு நெடுஞ்செழியன், கருணாநிதி, என்.வி.என், ஆசைத்தம்பி, மதியழகன் ஆகிய பல முக்கியப் பிரமுகர்களும் வந்திருந்தனர். அண்ணாவுக்குக் காஞ்சிபுரத்திற்கு டிரங்கால் போட்டு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றும் அழைத்தனர். அதுவரை அண்ணாவிடம் போய் பேசுகிற பழக்கம்தான் இருந்தது. இப்போது அவரை வரச்…