கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது – அண்ணா

  கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது! கோடு, குன்றம் இரண்டும் ஓரேபொருளைக் குறிக்கும் சொற்களன்றோ என்பர் அன்பர், உண்மை. அதுபோலவே இங்கு நாம் விளக்க எடுத்துக் கொண்ட பிரச்னை சம்பந்தப்பட்டமட்டில், உயர்ந்தது தாழ்ந்தது என்னும் இருசொற்களுமம் கூர்ந்து நோக்கும்போது, ஒரே பொருளையே தருவதும் விளங்கும். எந்தப் பிரச்சனை? எந்தக் கோடு? எந்தக் குன்றம்? அச்சாரியார் பிரச்சனை! திருச்செங்கோடு! திருப்பரங்குன்றம்! இவையே சிலபல திங்களாக வீடு, நாடு, மன்றமெங்கும் பேசப்பட்டவை. இப்போது திருச்செங்கோடு தேர்தல் செல்லுபடியாகக் கூடியதே என்று…

காமராஜர் சிந்தும் கண்ணீர்! – அண்ணா

அந்த மோகனப் புன்சிரிப்பிலே, அவரும் சொக்கினார். பத்தரை மாற்றப் பசும்பொன் மேனியனே! ஓற்றைத் துகிடுத்த ஒளிவிடு வடிவழகா! பற்று ஆற்றவனே! பவம் அறுத்திடுவோனே!! – என்று அவர் அர்ச்சித்தார், ஒருநாள் இருநாளல்ல – ஒய்வின்றி இருபது ஆண்டுகள்!! தொழுது நின்றவரை, தூரத்திலிருந்து நாம் அழைத்து, “பக்திப் பரவசத்திலே மெத்தவும் உடுபட்ட அன்பரே! நீர்தொழும் தேவன், உமக்கு அருள்பாலிக்க மாட்டானே! பூசுரரின் பாசுரமே அந்தத் தேவனுக்குச் செந்தேன்! உன் மலரைவிட, அவர்கள் தரும் சருகு, அவருக்கு ஆனந்த மளிக்கும்!…

‘கன்னடிய இராமசாமிக்குத் தமிழ் நாட்டில் என்ன வேலை’ – காமராஜர்

நாம் யாருக்கு எதிரி திராவிடர் கழகத்தாராகிய நாம் பார்ப்பனர்களுக்கு எதிராக வேலை செய்கிறோமென்றும், தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனர்கள், திராவிடர் கழகத்தாருக்குப் பயந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதென்றும், திராவிடர் கழகத்தாரால் செய்யப்பட்டு வரும் ‘ஆபத்துகளை’ ஒழித்துப் பார்ப்பனர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும் 1-3-49இல் நடைபெற்ற பட்ஜெட் விவாதக் கூட்டத்தின் போது தோழர் காளேஸ்வரராவ் அவர்கள் சட்டசபையில் பேசியிருக்கிறார். பட்ஜெட் கூட்டத்தின் போது தோழர் காளேஸ்வரராவ் இந்த விஷயத்தை ஏன் பேசினார் என்பது தெரியவில்லை. ஒருவேளை, திராவிடக் கழகத்தாரை ஒழித்துக் கட்டுவதற்கும்…

வாழ்க்கை வழிகாட்டி – அண்ணா

மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியார் என்ற பெயருடன் தென் ஆப்பிரிக்காவிலே முரட்டு வெள்ளையர்களுக்கு எதிராகச் சாத்வீகப் போராட்டம் நடத்திய காலத்திலும் நாட்டுத் தலைவராகி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்திய பல போராட்டங்களின்போதும் சிறைச்சாலையிலேயும் நாட்டு மக்களின் உள்ளத்திலே தூய்மையை உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பலமுறை உண்ணாவிரதம் இருந்த காலங்களிலும் அவர் சென்ற ரயிலைக் கவிழ்க்க முயற்சித்தபோதும் வெறியன் வெடிகுண்டு வீசியபோதும் ஆபத்து அவரை நோக்கி வந்தது. அவ்வளவு ஆபத்துகளிலிருந்தும் அவர் தப்பினார். “ஒவ்வோர் சமயமும் அவர்…

அவர்(காந்தி) காட்டிய வழி! – அண்ணா

அவர் காட்டிய வழி! தன் நலங் கருதாது பொதுத் தொண்டு புரிந்ததன் காரணமாக உலக உத்தமர் என்ற உயரிய நிலையைப் பெற்ற காந்தியார் மறைந்து ஓர் ஆண்டு நிறைந்து, அவருடைய நினைவின் அறி குறியாக நாடெங்கும், ஏன், உலகமெங்குமே அவருடைய உழைப்புக்கும் தியாகத்திற்கும் நன்றி செலுத்தும் முறையில் அனைவரும் அவருக்கு வணக்கமும் மரியாதையையும் செலுத்தினார். காந்தியார் மறைந்தாலும் அவர் வகுத்த கொள்கைகளும் திட்டங்களும் நம்முன் இருக்கின்றன என்றும், ஆவற்றை நடைமுறையில் கொண்டு வருவதே நம்முடைய நீங்காக் கடமையாக…

வினோபாவுடன் திராவிட நாடு பிரச்சினை – அண்ணா

தம்பி, புனிதமான புத்தர் விழாவைக் கெடுத்துத் தொலைத்தான் பாவி, தூய்மை நிரம்பிய தமிழ்ச் சங்கப் பொன்விழாவைப் பாழாக்கிவிட்டான் பாதகன் என்றெல்லாம், பழிசுமத்தப்படுகிறது உன் அண்ணன் மீது. ஏன்தான் நமக்கு இந்தத் தொல்லைகள் தாமாக வந்து தாக்குகின்றனவோ என்று நான் சில வேளைகளிலே கவலைப் படுவதும் உண்டு – எனினும் என் செய்வது? சில பல நிகழ்ச்சிகளில் நான் ஈடுபட நேரிடுகிறது. நான் ஈடுபடுவதனாலேயே நிகழ்ச்சிகள் கெட்டு விடுகின்றன என்று கூறி, நான் தாக்கப்படுகிறேன். அந்த முறையில், இதற்கு…

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு – அண்ணா

வேலூரில் காந்தி சிலையை திறந்து வைத்து உரையாற்றிய அண்ணா “வேலை மாநகர் ஆட்சி மன்றத்தார், மணி மண்டபத்தில் விளங்கும் உத்தமரின் சிலையைத் திறக்கும் பணியினை எனக்களித்தார்கள். இது பற்றிக் குறிப்பிட்ட மன்றத் தலைவர் ‘வேலூர் வரலாற்றிலேயே இன்று ஓர் பொன்னாள்“, எனக் குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரையிலேயே, என்னுடைய வாழ்க்கையில் – ஏன், தமிழ்நாட்டின் அரசியலில், ஒரு முக்கியமான கட்டம் என்று கூறுவேன். காந்தியாரின் உருவச் சிலையை நான் திறக்கிறேன் – இந்தச் செய்தியால் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள…