நமக்குப் பிள்ளையார் கடவுளல்ல – பெரியார்

‘பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை தயங்கவேண்டியதில்லை. பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள். அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக ஆகி விடுவ தில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கைதான் உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.…

தாழ்த்தப்பட்ட மக்களும் தேர்தலும் – பெரியார்

  தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரசுக்கு எதிராக. ‘ஷெட்யூல்ட் வகுப்பு பெடரேஷன்’ மூலமாகவோ, தனியாகவோ தேர்தலுக்கு நிற்கலாமா என்று பலர் நம்மைக் கேட்கிறார்கள். இவர்கள் தேர்தலுக்கு நிற்பதானது இன்றையத் தேர்தல் முறையைத் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒத்துக் கொண்டுவிட்டதாக உலகம் கருதத்தான் உதவி அளிக்குமே தவிர, மற்றப்படி வேறு எந்தக் காரியத்திற்கும் பயன்படாது என்பது நமது கருத்தாகும். திராவிட மக்கள் நிலைபோலவே, நம் மாகாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர்களின் நம்பிக்கையை ஒரு முகமாகப் பெற்ற தலைவர்கள் இல்லை. “தியாகம்” என்ற…

சிதம்பரம் சிதைவு

தோழர் வி.ஒ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் முடிவெய்தி விட்டார். தனக்கு இயங்கும் சக்தி இருந்து ஓடி ஆடி உசாவித் திரியும் காலமெல்லாம் தனக்கு சரியென்று தோன்றிய வழிகளில் உழைத்துவிட்டு ஒடுக்கம் ஏற்பட்டவுடன் அடக்கமாகி விட்டார். இது மக்கள் வாழ்க்கையின் நியாயமான நிலையேயாகும். மிக்க மந்தமான காலத்தில் அதாவது மனிதன் பொதுநலம் என்றால் மதசம்மந்தமான காரியம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியல் என்றால் அது தெய்வீக சம்மந்தமானது என்றும், எப்படி எனில், கூனோ குருடோ, அயோக்கியனோ,…

‘கன்னடிய இராமசாமிக்குத் தமிழ் நாட்டில் என்ன வேலை’ – காமராஜர்

நாம் யாருக்கு எதிரி திராவிடர் கழகத்தாராகிய நாம் பார்ப்பனர்களுக்கு எதிராக வேலை செய்கிறோமென்றும், தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனர்கள், திராவிடர் கழகத்தாருக்குப் பயந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதென்றும், திராவிடர் கழகத்தாரால் செய்யப்பட்டு வரும் ‘ஆபத்துகளை’ ஒழித்துப் பார்ப்பனர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும் 1-3-49இல் நடைபெற்ற பட்ஜெட் விவாதக் கூட்டத்தின் போது தோழர் காளேஸ்வரராவ் அவர்கள் சட்டசபையில் பேசியிருக்கிறார். பட்ஜெட் கூட்டத்தின் போது தோழர் காளேஸ்வரராவ் இந்த விஷயத்தை ஏன் பேசினார் என்பது தெரியவில்லை. ஒருவேளை, திராவிடக் கழகத்தாரை ஒழித்துக் கட்டுவதற்கும்…

பெரியார் – மணியம்மை திருமணமும் ராஜாஜியும்

பெரியார் மணியம்மை திருமணம் பெரியார் – மணியம்மை திருமணம் தமிழக அரசியலில் ஒரு பெரிய புயலை உருவாக்கியது. அந்தத் திருமணத்தைப் பற்றி – பெரியாரின் நியாயத்தைப் பற்றி இந்நூல் தெளிவுபட உரைக் கிறது. பெரியாரின் திருமணம் குறித்து, தலைவர் வீரமணியிடம் பயிற்சி முகாம்களில் இளைஞர்கள் கேள்வி கேட்பார்கள். வரலாற்றில் நாம் வாசிக்கின்ற காரண காரியங்கள் 1949-லே வீரமணிக்கு மனப் பாடமாக மனதிலே பதிந்திருக்கிறது. 1949 ஜூன் 1, 19, 25 அய்யாவின் அறிக்கைகள், சாமி கைவல்யத்தின் ரத்தினச்…

திருமணங்கள் எல்லாம் பெரியார் வழியில் நடக்க வேண்டும்! – ராஜாஜி

31.05.1936 இல் குற்றாலத்தில் காலை 9 மணிக்கு பட்டிணம் பொடி உரிமையாளர் தோழர் எஸ். தங்கவேலுவுக்கும் மதுரை அய்யம்பாளையம் வியாபாரி கே.எஸ்.இராமசாமி பிள்ளையின் மகள் பூரணத்தமாளுக்கும் குற்றாலம் காடல்குடி ஜமீன்தார் மாளிகையில் தந்தை பெரியார் தலைமையில் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் நடந்தது.அத்திருமணத்தில் இராச கோபாலாச்சாரியார் (இராஜாஜி), டி.கே. சிதம்பரநாத முதலியார், பப்ளிக் பிராசிக்கியூட்டர் பி. ஆவுடையப் பிள்ளை, அ. பொன்னம்பலனார், ஏ. வேணுகோபால், பி. பிச்சையா, கே.சி. இராமசாமி (கொல்லம்), எ.கே.கே. குற்றாலிங்க முதலியார், சு.ரா. அருணாசலம்…

கத்தி வைத்துக் கொள்ளுங்கள் – பெரியார்

டில்லியில் காமராஜர் தங்கி இருந்த வீட்டுக்கு நெருப்பு வைத்து விட்டார்கள் பார்ப்பனர்கள்! ஏன் இப்படிச் சொல்லுகின்றேன் என்றால், நெருப்புவைத்த நாளில் சிருங்கேரி சங்கராச்சாரி, பூரி சங்கராச்சாரி முதலிய பார்ப்பன சமுதாயத் தலைவர்கள் டில்லியில் இருந்திருக்கிறார்கள்; தவிரவும், சந்தியாசிகள் (சாதுக்கள்) என்னும் போல் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் பல பாகங்களிலுமிருந்து அன்று டில்லிக்கு வந்து இருக்கின்றார்கள். ஏன் இந்த சந்தியாசிகளைப் பார்ப்பனர்கள் என்கிறேன் என்றால், பார்ப்பனர் அல்லாத (சூத்திர) சாதிக்கு சந்தியாசம் கொள்ள உரிமை இல்லை. அவனைச் சாது வென்றோ,…