காந்தியார் மாற்றமும், கொலையும் – பெரியார்

தோழர்களே! கதத்திரம் வந்துவிட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டு வெள்ளையனும் போய் விட்டதாகக் கூறப்பட்ட அந்தத் தினத்திலிருந்து, காந்தியாரின் எண்ணங்களில் பல குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டு வந்ததை நான் கண்டேன். காங்கிரஸ்காரர்கள் விரும்பியபடி சுயராஜ்யம் கிடைக்குமானால், நம் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் என்னென்ன கேடுகள் விளையக்கூடும் என்று நான் இடைவிடாது கூறிவந்தேனோ, அக் கேடுகள் வினைய நேரிட்டதை உணர்ந்து, காந்தியார் அதை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார்: அக்கேடுகளையும் அனுபவிக்க ஆரம்பித்தார் அவசரப்பட்டு சுயராஜ்யம் கேட்டது எங்கு ஆபத்தாக முடியுமோ என்று கவலைகொள்ள ஆரம்பித்தார் :…