சத்தியம் செத்ததோ ? – கல்கி

எத்தனை காலம் இனி வாழ்ந்திருந்தாலும், 1948-ம் வருஷம் ஜனவரி மாதம் 30-ந் தேதி வரையில் இருந்தது போல் இனி நம் வாழ்க்கை ஒருகாலும் இராது. பெரும் வித்தியாசம் இருக்கத்தான் இருக்கும். சூரியன் நிரந்தரமாக அஸ்தமித்து உலகில் முடிவில் லாத இருள் சூழ்ந்து விட்டால் உலகத்தின் வாழ்க்கை முன்போல் இருக்க முடியுமா? ஒருநாளும் முடியாது. அந்த நிலையிலேதான் இன்று நாம் இருக்கிறோம். நமது வாழ் வில் அப்படி இருள் கவிந்திருக்கிறது. சென்ற முப்பது வருஷங்களாக, காந்தி மகானுடைய வாழ்க்கையைச்…

‘Nathuram did not leave the RSS’ – Gopal Godse

கேள்வி: நீங்கள் ஆர்.எஸ்.எஸில் ஓர் அங்கமா? கோபால் கோட்சேயின் பதில்: நாதுராம் (காந்தியைக் கொன்றவன்) தாத்தாத்ரியா நான் (கோபல் கோட்சே) கோவிந்தத் ஆகிய நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸில் இருந்தோம் எங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதைவிட ஆர்.எஸ்.எஸில் வளர்ந்தோம் என்றே கூற வேண்டும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போல் ஆகும்). கோபால் கோட்சேயின் இந்தப் பதிலுக்கு பிஜேபியினர் இதுவரை என்ன சமாதானம் சொல்லி இருக்கிறார்கள்? நாதுராம் கோட்சே உயிருடன் இல்லை – காந்தியாரைக் கொலை செய்த…

“Gandhi Murdabad”

  Activities of RSS & Hindhu Maha Sabha during Dec 1947 -Jan 1948 On December 6, 1947, Golwalkar convened a meeting of RSS workers in the town of Govardhan, not far from Delhi. The police report on this meeting says it discussed how to “assassinate the leading persons of the Congress in order to terrorise…

இறந்த காந்தியார் நம் காந்தியார் – பெரியார்

சென்ற மாநாட்டிற்குப்பின் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் முதன்மையாகப் பேசப்படவேண்டியது காந்தியாரின் மறைவைக் குறித்தாகும். காந்தியார் உயிரோடிருந்த வரை அவருடைய போக்கைப் பெரும் அளவுக்குக் கண்டித்துவந்த எனக்கு காந்தியார் மறைவுக்குத் துக்கப்படவோ, அவரது மறைவுக்குப்பின் அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசவோ என்ன உரிமை உண்டென்று சிலர் கேட்கலாம். சிலர், காங்கிரஸ்காரரின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக்கொள்ளவே நான் இவ்விதம் சூழ்ச்சி செய்வதாகவும் கருதி இருக்கலாம். ஆனால், தோழர்களே! இவை உண்மையல்ல. காந்தியார் மறைவுக்காக எந்தக் காங்கிரஸ்காரர். துக்கப்பட்டா ர் ? அழுதார்…

காந்தியார் மாற்றமும், கொலையும் – பெரியார்

தோழர்களே! கதத்திரம் வந்துவிட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டு வெள்ளையனும் போய் விட்டதாகக் கூறப்பட்ட அந்தத் தினத்திலிருந்து, காந்தியாரின் எண்ணங்களில் பல குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டு வந்ததை நான் கண்டேன். காங்கிரஸ்காரர்கள் விரும்பியபடி சுயராஜ்யம் கிடைக்குமானால், நம் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் என்னென்ன கேடுகள் விளையக்கூடும் என்று நான் இடைவிடாது கூறிவந்தேனோ, அக் கேடுகள் வினைய நேரிட்டதை உணர்ந்து, காந்தியார் அதை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார்: அக்கேடுகளையும் அனுபவிக்க ஆரம்பித்தார் அவசரப்பட்டு சுயராஜ்யம் கேட்டது எங்கு ஆபத்தாக முடியுமோ என்று கவலைகொள்ள ஆரம்பித்தார் :…

காந்தியார் மறைவு பற்றி – பெரியார்

தோழர்களே! இன்று இந்த ஸ்தானத்தில் இருக்கும் நான் முதலாவதாகப் பேசவேண்டியது பெரியார் காந்தியாரின் மறைவுபற்றி-கொலைபற்றி. பேசவேண்டியது, சம்பிரதாயப்படி மாத்திரம் அல்லாமல் உண்மைப்படியும், கடமைப்படியும் பேச வேண்டியதாகும். காந்தியார் மறைவு திராவிட நாட்டுக்கும், திராவிட மக்களுக்கும் மகத்தான நட்டமும், மாபெரும் ஏமாற்றமடையத்தக்க வாய்ப்புமாகும். காந்தியார் கொலை திராவிட மக்களின் எல்லையற்ற ஆத்திரமும், இரத்தக் கொதிப்பும், திடுக்கிடும்படியான விறுவிறுப்பையும் கொள்ளத்தக்க காரியமாகும். இதைச் சொல்லுகிறபோது என் மனம் பதைக்கிறது; கை நடுங்குகிறது; நா வறட்சியடைகிறது; இதயம் துடிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு…

காந்தியார் நினைவாக – பெரியார்

காந்தியாரின் ஞாபகார்த்தமாக இந்தியா தேசத்திற்கு காந்தி தேசம்’ என்று பெயரிடலாம் என்றும்; கிறிஸ்து ஆண்டு, முகம்மது ஆண்டு என்பதுபோல் ‘காந்தி ஆண்டு’ துவக்கலாம் என்றும் கிறிஸ்து மதத்தைப்போல், பவுத்த மதத்தைப்போல், ‘காந்தி மதம் ‘ என்ற ஒரு புது மதத்தைத் தோற்றுவிக்கலாம் என்றும் நான் யோசனை கூறியிருக்கிறேன். நமக்குத் தெரியாத கலியுக ஆண்டு, பசலி ஆண்டு, கிறிஸ்து ஆண்டு விவரம், தெளிவு கண்டுபிடிக்க முடியாத பிரபவ ஆண்டு முதலியவைகளை ஒப்புக் கொண்டு இருப்பதைவிட, நமக்குத் தெரிந்த ஒரு…