முரசொலியில் அம்பேத்கர் மறைவு குறித்த செய்தி

(டாக்டர் அம்பேத்கரின் படத்தை திராவிட நாடு முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. ஆனால் முரசோலியோ நாதஸ்வர வித்வான் திரு. ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் மறைவை ஒட்டி அவரது புகைப்படத்தை தனது முதல் பக்கத்தில் பிரசுரித்திருந்தது. ஒரு வேளை கலைஞர் அவர்கள் கலைத்துறையில் இருந்த காரணத்தால் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் படத்தை வெளிட்டிருக்கலாம். ஆனால் 21 டிசம்பர் இதழின் முதல் பக்கத்தில் இறுதி அஞ்சலி குறித்த படம் இடம்பெற்றிருக்கிறது )

ஐந்து கோடி ஆதித் திராவிட மக்களின் ஈடு இணையற்ற தலைவர் டாக்டர்.அம்பேத்கார் காலமாகிவிட்டார்.

வர்ணாஸ்ரமத்தின் கோரப்பிடியில் சிக்கிச் சீரழிந்த மூன்று லட்சம் மக்களுக்கு ஆத்மீக சமுதாய விடுதலை வாங்கித் தருவதற்காக, ” புத்தம் சரணம் கச்சாமி ! சங்கம் சரணம் கச்சாமி ! தர்மம் சரணம் கச்சாமி ! ” என்று ஒலித்த அந்தக் குரலை இனி நாம் என்றுமே கேட்க முடியாது.

இந்து மதத்தின் இழிகுலத்திலே பிறந்து, அரசியல் உலகில் அறிவுப் பகலவன் என ஒளி வீசி, அருளரசன் புத்தனின் ஞான மார்க்கத்தில் ‘தீட்சை’ பெற்று, ஜனநாயகப் பண்பாடு தழைக்க தன்னை அர்ப்பணிக்கும் நிலையில் இருந்த அறிவுஜோதி அணைந்துவிட்டது.   

அரசியல் உலகம் ஒரு மேதையை இழந்துவிட்டது ! சட்ட உலகம் ஒரு நிபுணரை இழந்துவிட்டது ! ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் செத்துவிட்டது ! சுயமரியாதை இயக்கம் உற்றதொரு தோழரை இழந்து கண்ணீர் வடிக்கிறது !

ஆசியாவின் அரசியல் மேதைகள் சிலரில் ஒருவர் என்று பீவர்லி நிக்கலஸ் புகழ்ந்தார் ! இந்திய அரசியல் சட்டத்தை சிறப்புற செய்து முடித்தார் என்ற காரணத்திற்காக அவர் படித்து பட்டம் பெற்ற கொலம்பியா சர்வகலாசாலை ‘சட்டப் பேரறிஞர்’ என்ற கெளரவப் பட்டத்தை வழங்கி மரியாதை செய்தது.

இந்துவாகப் பிறந்து – இழிபிறப்பு என்ற காரணத்தால் – தாழ்த்தப்பட்டோர் குலத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்தால் – இன்னல்களுக்கும் இடையூறுகளூக்கும் பள்ளிப்பருவத்திலேயே ஆளாக்கப்பட்ட அம்பேத்கர், பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டினை நிலைநிறுத்தி, இந்து மதத்தின் பெருங்கேட்டினை மாய்க்க சூளுரைத்துப் புறப்பட்டபடியே வெற்றியும் பெற்றுவிட்டார் !

இந்து மதத்தின் இழிமகனாகப் பிறந்தார் ! அதன் பித்தலாட்டங்களை எதிர்த்து சீர்திருத்த மேதையாக வாழ்ந்தார் ! ஆசிய ஜோதி புத்தனின் வழிநின்று அறவொளி பரப்பும் கர்மவீர்ராய் மாண்டார் !

அறிஞர் அம்பேத்காரின் வாழ்க்கை, சமுதாயக் கழனியில் முளைத்துவிட்ட களைகளைப் பிடுங்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நமக்கெல்லாம் வழிகாட்டி ! அவரது பிரிவால் வாடும் எண்ணற்ற தாழ்த்தப்பட்டோரின் துயரில் திராவிடமும் பங்கு பெறுகிறது. வாழ்க அம்பேத்காரின் தொண்டு !       (பக்கம் 2)

பக்கம் 2
பக்கம் 7
பக்கம் 12

——————————————————————————————————————-

ராஜரத்தினம் பிள்ளை
பக்கம் 12
பக்கம் 10

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s