காந்திப் பசு – பாரதி

தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நியாயத்தை எடுத்துரைக்க 1909-ல் லண்டன் சென்ற பாரிஸ்டர் காந்தியின் பயணம் தோல்வியில் முடிந்தது. திரும்பிச் சென்றால் கைது செய்யப்படுவது நிச்சயம் என்ற நிலைமை புரிந்த மற்ற தலைவர்கள் வெளியே இருந்து கொண்டே போராட்டத்தைத் தொடர எண்ணி தலைமறைவாகி விட்டனர், காந்திஜியோ தென்னாப்பிரிக்கா திரும்பினார். எதிர்பார்த்தபடி அவரைக் கைது செய்து சிறையிலிட்டது தென்னாப்பிரிக்க அரசு. இது பற்றி தமது

இந்தியா வார இதழில் பாரதி ஒரு கேலிச்சித்திரம் வெளிட்டு அதனடியில் பின் வரும் குறிப்பையும் பிரசுரித்தார் ஸ்ரீ காந்தியென்ற பசுவானது தனது கன்றுக்குட்டியாகிய இதர இந்தியர்களின் தன்மையின் பொருட்டு இங்கிலாந்துக்குப் போய்ப் பேசி விட்டு, சிறையிலடைபடுவதற்காக மறுபடியும் திரான்ஸ்வால் வந்திருக்கிறது. தென்னாப்பிரிக்க உத்யோகஸ்தர்களாகிய புலிகள் இவருடைய மேன்மையை அறியாமல் சிறையிலடைத்தனர்.

முற்காலத்தில் நடந்ததாக ஹிந்துக்களின் புராணங்களில் சொல்லியிருக்கும் விஷயம் அநேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு காட்டில் புலியின் வாயில் அகப்பட்ட பசுவானது தன்னுடைய கன்றுக்குட்டிக்குப் பால் கொடுக்காமல் வந்துவிட்ட படியால், புலியைப் பார்த்து, ‘ஹே பிரபு இன்று என்னுடைய கடமையைச் செலுத்தாமல் வந்து விட்டேன், என்னுடைய கன்றுக்குப் பால் கொடுக்கவில்லை. ஆதலால் நான் இப்பொழுதே போய்ப் பால் கொடுத்து விட்டு வந்து உமக்கு இரையாய் விடுகிறேன், உத்தரவளிக்க வேணும்’ என்றது.

புலி நெடு நேரம் யோசித்து அதனுடைய சத்தியத்தைப் பரீட்சிக்கும் பொருட்டு போய்க் காரியமான உடனே வந்து விடு’ என்று சொல்லி அனுப்பியது.

பின்பு பசுவானது கன்றுக்குப் பால் கொடுத்து விட்டு, அதைத் தன் சினேகிதியான மற்றொரு பசுவிடத்தில் ஒப்புவித்து விட்டு, புலியினிடத்தில் வந்து, ‘என்னுடைய தர்மத்தைச் செய்து விட்டு வரும்படி உத்தரவளித்ததற்கு உமக்கு வந்தனமளிக்கிறேன். என்னைப் புசியும்’ என்றது.

இதைக் கண்ட புலி ஆச்சரியப்பட்டு, அம்மா, ஸத்திய தேவதையே, உன்னைப் புசித்து விட்டு நான் எந்த நீச கதிக்குப் போவேன். நான் இதுவரைக்கும் செய்தது போதும்!’ என்று சொல்லிப் பட்டினியிருந்து பிராணனை விட்டது.

இப்பசுவைப் போல் நடந்து கொண்ட நமது ஸ்ரீ காந்தி பிரபுவை தென் ஆப்பிரிக்கா புலிகள் என்ன செய்கின்றன பார்த்தீர்களா? ஒன்றும் தெரியாத புலி கூட இந்துஸ்தானத்தில் தயையினுடைய பிரவாகத்தைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் மனுஷிய ரூபம் தரித்துப் புவியைப் பார்க்கிலும் கொடுமை யாக (தங்களுக்கு உதவி புரிந்த) இந்தியர்களை நடத்தும் நாகரிக ஆங்கிலேயர்கள் இக்கலிகாலத்தில் தான் காணலாம்.

–இந்தியா, டிஸம்பர் 18, 1909

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s