காந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்ற பெரியாருக்காக … அண்ணா

காந்தியார் பெரியாரின் மாளிகையிலே தங்கியிருந்திருக்கிறார் ; காந்தியின் நினைவாக தன் தமக்கையின் பெண்ணுக்கு ‘காந்தி’ என்றே பெயர் வைத்திருக்கிறார் பெரியார். காந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்று பெரியார் (ஈ.வெ.ரா.) சொன்னாரென்றால் அவருக்கு அவைகளின்பேரில் இருக்கிற வெறுப்பினால் அல்ல! தேசியக் periyar-and-annaகொடிக்கு-தேசியச் சட்டத்திற்கு இழுக்கை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அல்ல; ‘இவைகளை எந்தக் காரணத்திற்காக கொளுத்தச் சொல்லுகிறேன்; கிழிக்கச் சொல்லுகிறேன்’ என அவர் எடுத்துச் சொல்லுகிறாரோ அந்தக் குறைபாடுகளையெல்லாம் நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக அவர்களுடைய கவனத்தைக் கவர்வதற்காக சொல்லப்படுகிற விஷயங்கள்தான். அவர் எந்தக் காரணங்களுக்காக உள்ளம் குமுறிக்கொண்டிருக்கிறாரோ அவைகளை நிறைவேற்றாதவரையில் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றாலும்கூட சட்டத்தின் நோக்கம் நிறைவேறாது. பெரியார் ஒரு ‘அதிர்ச்சி வைத்தியம் செய்கிறார். பெரியார் அவர்களை நீங்கள் ‘பித்தம் பிடித்தவர் ‘ என்று கருதலாமே தவிர உலகத்தில் பெரும் பகுதியினர் அவ்வாறு கருதவில்லை. அரசியல்சட்டத்தைக் கொளுத்துவதன் மூலம் அவர்கள் இன்று சாதி அடிப்படையிலே இருக்கும் பல குறைகளை வெளிப்படுத்துவதற்காகத்தான் ! ”அரசியல் சட்டம் என்றால் அது என் வாழ்விற்காக இருக்கிறது; அது என்னை மனிதனாக ஆக்குகிறது; என்னை நல்லவனாக இருக்கச் செய்கிறது. எனக்கு நாட்டில் மதிப்பு அளிக்கிறது !” என்று நாட்டில் உள்ள மக்கள் ஒவ்வொருவரையும் உணரச் செய்தால், அதை யாருமே தீண்டமாட்டார்கள். – – (11-11-57ல் தேசீய கெளரவ அவமதிப்புச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்ற பேரவையில் அண்ணா சொன்னவை..)

 

காந்தி பொம்மையை உடையுங்கள் – பெரியார்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s