எனது வெட்கமும் துக்கமும்

சகன்லால் காந்தியின் பொறுப்பில் உள்ள ஸ்டோர் கணக்கில் ஏதோ தவறுதல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆசிரமத்தின் அப்போதைய செயலாளர் திரு. சகன்லால் ஜோதி ஒரு நாள் காந்தியடிகளிடம் வந்து அறிவித்தார். அன்று மாலைப்பிரர்த்தனையின் போது காந்தி மிகுந்த மனவேதனையுடன், ஆசிரமத்தில் ஒரு இழிசெயல் நடந்து விட்டது எனக்குறிப்பிட்டார். “சகன்லால் காந்தி சத்தியத்திலிருந்து தவறிவிட்டிருக்கிறார். சத்தியத்தை வாய்மையைக் கடைப் பிடித் தொழுகுவதே நம்முடைய இந்த ஆசிரமத்தின் குறிக்கோ வாகும். எனவே தான் இதற்கு “சத்தியாக்கிரக ஆசிரமம்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இப்பெயரைச் சொல்லிக் கொண்டிருக்க நமக்கு உரிமை இல்லை. இன்று முதல் இந்த ஆசிரமத்தை ‘உத்யோக் மந்திர், (தொழிற்கூடம்) என அழைப்போம். பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறும் இந்த இடம் மட்டும் ‘சத்தியாக்கிரக ஆசிரமம்’ என அழைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
 
அதன்பின் காந்தி தம்முடைய இருப்பிடத்திற்குப் போய் விட்டார். சகன்லால்பாய் உள்பட எல்லாப் பழைய நண்பர்களும் காந்தியடிகளின் குடிசையில் வந்து கூடிவிட்டனர். காந்தி தீவிரமான ஆத்மசோதனையில் முனைந்திருந்தார். தன் சகோதரரின் மகன் செய்த தவற்றைத் தானே செய்ததாக நினைத்து தன்னேயே நிந்தித்துக்கொள்ளலானார். எல்லோரும் இதனால் மிகுந்த குழப்பமும் வருத்தமும் அடைந்தனர். இவையனைத்தையும் பற்றிச் சிறிது கேள்விப்பட்டபின் சகன்லால் காந்தி தன் தவற்றை ஒப்புக்கொண்டார். வருத்த மிகுதியால் அழ ஆரம்பித்தார். கூடியிருந்தவர்கள் இதைப்பார்த்து சகன்லால் காந்தி மீது இரக்கம் கொண்டனர்.
இதே சமயத்தில் காந்தியடிகளிடம் மற்றொரு சிக்கலைக் கிளப்பினார் யாரோ ஒருவர். சில நாட்களுக்கு முன் அறிமுகமில்லாத ஒரு அன்பர் ஆசிரமத்தைப் பார்க்க வந்திருந்தார், அவர் நான்கு ரூபாயைத் தன் அன்பளிப்பாகக் கஸ்தூரிபாவிடம் கொடுத்திருந்தார். கஸ்தூரிபா அதனைச் சில நாட்களுக்குப் பிறகு ஆசிரம அலுவலகத்தில் சேர்த்திருந்தார். காந்தி இதைக் கண்டு திருப்தி கொள்ளவில்லை, அவர் கஸ்தூரிபா மீது குறைப்பட்டுக் கொண்டார். மேற்கொண்டு இம்மாதிரி தவறுகள் ஏற்பட்டாலோ, அல்லது முன்பு நடந்த தவறுகள் ஏதேனும் இருந்து, அவை வெளிப்பட்டாலோ தன்னையும் ஆசிரமத்தையும் விட்டே வெளியேறி விடவேண்டுமென்று பாவிடமிருந்து வாக்குறுதி பெற்றிருந்தார்.
 
அன்று இரவு மூன்று மணி வரை ஆத்ம சோதனை வேள்வி நடந்து கொண்டிருந்தது. அதன் பின்னர் நண்பர்களை விடை கொடுத்தனுப்பி விட்டு காகிதம் பேனாவுடன் ஒரு கட்டுரை எழுத உட்கார்ந்தார். அன்று எழுதின கட்டுரை சரித்திரப் புகழ் பெற்றது. அக்கட்டுரையில் சகன்லால் காந்தியும் கஸ்தூரிபாவும் செய்த தவறுகளே வெளிப்படையாக விவாதித்து, மக்கள் முன் தம் மன உளைச்சலை அப்படியே விளக்கி எழுதியிருந்தார்.

From Nazar Photography Monographs 03 – KANU’S GANDHI.
Photograph by Kanu Gandhi / © Gita Mehta, heir of Abha and Kanu Gandhi.

 
இந்தக் கட்டுரையைப் படித்த இந்நாட்டவரும், வெளிநாட்டவரும் திகிலடைந்தனர். சிலருக்குத் துக்கம் தாள முடியவில்லை. மற்றும் சிலருக்குக் காந்தியடிகள் மீது கோபம் ஏற்பட்டது. கஸ்தூரிபாவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களைக் கண்டு திருமதி சரோஜினி நாயுடுவின் மனம் புண்பட்டது. இச் சம்பவம், பாரத நாட்டின் பெண் குலத்திற்கே இழுக்கு என நினைத்தார் சரோஜினி நாயுடு, அவர் உடனே ஹைதராபாத்திலிருந்து சபர்மதிக்கு வந்து நேராக கஸ்தூரிபாவிடம் சென்றார்.
 
காந்தியைச் சந்திக்கக்கூட நினைக்காத அளவுக்கு அவர் மனதில் அவ்வளவு கசப்பு உண்டாகியிருந்தது. ஆனால் காந்தி, காந்தியாகவே இருந்தார் விஷயம் அறிந்து அவர் சிரித்துக் கொண்டே சரோஜினியைச் சந்திக்க வந்தார். அடிகளைப் பார்த்ததும் சரோஜினி நாயுடு ஆத்திரத்தில் ஒரிரு வார்த்தைகள் அதிகமாகவே பேசிவிட்டார். காந்தியடிகள் விருப்பு, வெறுப்பு இல்லாமல் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். சரோஜினி நாயுடு எல்லாவற்றையும் பேசி முடித்த பிறகு காந்தியடிகள் தம் இயற்கையான சுபாவத்துடன் பேசலானார்: சரோஜினி தேவி, இன்றைய இந்நேரம் கோபப்பட வேண்டியதல்ல, மகிழ்ச்சி ததும்ப வேண்டிய நேரம். கடவுள் நம் மீது மிகவும் கருணை காட்டியிருக்கிறார் என்பதை அறிந்து கொள். கடவுள் என்னை, இக் கட்டுரையை எழுதச் செய்யாமலிருந்தாலோ அல்லது நான் இங்கு நடந்த தவறுகளை மறைத்து வைத்திருந்தாலோ இந்த ஆசிரமம் ஆசிரமமாகவே இருந்திருக்காது. இது நரகமாகத் தான் இருந்திருக்கும். என் மூலமாக இக் கட்டுரையை எழுதச் செய்து கடவுள் நம் எல்லோரையும் காப்பாற்றி விட்டார். நம் பளுவைக் குறைத்து பூவைப் போன்று ஆக்கி விட்டார். இப்போது சகன்லாலோ, கஸ்தூரி பாவோ, ஆசிரமத்திலுள்ள மற்ற நண்பர்களோ சுதந்திரப் போராட்டத் தில் குதித்துள்ள வேறு நண்பர்களோ யாரும் இம் மாதிரித் தவற்றைச் செய்ய மாட்டார்கள். ஆகையால் உன் கோபம் இப்போது மகிழ்ச்சியாக மாற வேண்டும். இறைவன் காட்டிய எல்லேயற்ற கருணைக்காக அவன் புகழைப் போற்றிப் பரவுவோம்.

உப்புச் சத்தியாக்கிரத்தைத் தொடங்கு முன், வழக்கம் போல் காந்தி தேசம் முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்தார். இந்த யாத்திரையின் போது காசிக்குச் சென்று ஸ்ரீ பிரகாசாவின் வீட்டில் தங்கினார். அங்கிருந்து கிளம்பும் போது அக்குடும்பத்திலுள்ள எல்லோரும் காந்தியை வழியனுப்ப ஒன்று கூடினர். அவர்களில் ஸ்ரீ பிரகாசாவின் தாயாரும் ஒருவர்.
 
தீடீரென்று அவள் காந்தியிடம் ‘மஹாத்மாஜீ, தாங்கள் ‘பா’விடம் மனம் நோகும் வகையில் நடந்து கொள்ளுகிறீர்கள் என்றாள். சில நாட்களுக்கு முன் கஸ்தூரிபா செய்த சிறு தவறுக்காக ‘எனது வெட்கமும் துக்கமும்’ என்ற உணர்ச்சிமிக்க கட்டுரையைக் காந்தி எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் கடுமையான வார்த்தைகளால் கஸ்தூரிபாவைக் கண்டனம் செய்திருந்தார். யாரோ ஒருவர் கஸ்தூரிபாவிடம் ரூபாய் நான்கு நன்கொடையாகக் கொடுத்திருந்தார். அதை உரிய நேரத்தில் ஆசிரமத்தின் கஜானாவில் பார் சேர்க்க முடியாமற் போயிருந்தது. இந்தக் கட்டுரையைப் படித்த பலருக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது. இதனை மனதில் எண்ணிக் கொண்டு தான் ஸ்ரீ பிரகாசாவின் தாயார் காந்தியிடம் மேற் சொன்ன சொற்களைக் கூறினாள். ஆனால், காந்தியோ முற்றும் துறந்த முனிவராயிற்றே; சிரித்துக் கொண்டே, ‘பா’வுக்கு நான் சாப்பாடு போடுகிறேன். உடுக்கத் துணிமணி கொடுக்கிறேன். அவளை நான் கவனித்துக் கொள்கிறேன். மீண்டும் அவள் குறை கூறுகிறாளா? என்று கேட்டார்.நான் ‘பா’வுக்குக் கொஞ்சம் ரூபாய் கொடுக்க விரும்புகிறேன். ஆனால் அவள் வாங்கிக் கொள்வதில்லை. வாங்க அனுமதியுங்கள்’ என்றாள் அம்மையார்.
 
காந்தி இதை ஒப்புக் கொள்ளவில்லை. ‘இல்லை, இல்லை. ரூபாய் ‘பா’வுக்குக் கொடுக்க வேண்டாம், ஸ்ரீபிரகாசாவிடம் கொடுங்கள். ஏனென்றால் அவர் எனக்காகக் கஷ்டப்பட்டு நிதி சேர்த்துக் கொண்டிருக்கிறார். தாங்கள் கொடுக்க விரும்பும் பணத்தை அந்த நிதிக்கே கொடுத்து விடுங்கள்’ என்றார்.
 
கடைசியில் அம்மையார் ‘பா’வுக்காகக் கொண்டு வந்திருந்த தங்கக் காசை அந்த நிதிக்கே கொடுத்து விட்டார்.
 
நூல் : எனது பசி இந்தியாவின் பசி
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s