காந்தியை மனிதராகவே இருக்க விடுங்கள் – வினோபா

காந்தியைப் பொறுத்த வரையில் இத்தகைய மூட பக்திக்குத் தேவை இல்லை. அவர் ஒரு மனிதர் மட்டும் தான். அப்படி அவர் மனிதராகவே இருக்க வேண்டும். அவரை அப்படி இருக்க விடுவதால் தான் நமக்கு லாபம், அப்படிச் செய்வதால் நல்லவர் ஒருவரின் ஓவியம் நம் கண் முன் நிற்கும். இன்றைக்கு மிகத் தேவையான ஒழுக்க நெறிகள் எவை என்பது உலகத்துக்குத் தெரிய வாய்ப்புண்டாகும். அதை விட்டு அவரைத் தெய்வமாக்கினால் தெய்வங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை என்பதன்றி நமக்குக் கிடைக்க வேண்டிய லட்சியம் ஒன்றை நாமே தொலைத்தது போலும் ஆகும். பக்தி பாவனைக்கு ஒத்தவை நிறையத்தான் உண்டே நம்மிடம். நமக்கு இப்போது வேண்டியது ஒரு புதிய தெய்வம் அன்று வாழ்க்கைத் தூய்மையின் ஒரு புனித ஓவியமே உடனடியான தேவை. நீதிக்கு நாம் தந்து வந்துள்ள பழைய  எடுத்துக்காட்டுக்கள் தற்காலத்துக்கு ஒவ்வா. புது எடுத்துக்காட்டுகள் பாபுவின் உருவத்தில் நமக்குக் கிடைத்துள்ளன.

 

அவரை தெய்வமாக்குவதால் நமக்குத் தீமையன்றி வருங்காலத்தில் நன்மை ஒன்றும் விளைதாயில்லை. எத்தனையோ சமயச் சம்பிரதாயப் பிரிவுகளில் மேலும் ஒன்று என்று சேருவதன்றி நமக்கு என்ன நன்மை ? ஆதலால் உத்தமமான வழி காந்தியைக் கொண்டுபோய் கடவுளரோடு இருத்தாமலிருப்பதே அவரைத் தெய்வமாக்காமல் ஓர் இலட்சிய மனிதராக இருக்க விடுவதே சிறந்தது.

காந்தியைப் போன்ற ஒரு பெருந்தகையாளர் நமக்காக வந்து தோன்றினர் என்பது தான் எத்தனை ஆனந்தம் தரும் செய்தி. அவர் இவ்வுலகம் தவிர்த்த வேறுவுலகத்தைச் சேர்ந்த திவ்ய புருஷராகாமற்போனதே கடவுள் அருளால் தான் என்று கொள்ளல் வேண்டும். சுகதேவர் பிறப்பிலேயே ஞானி, கபில மகாமுனி பிறந்த கணமே தாய்க்கு உபதேசம் செய்வாராயினர். சங்கராச்சாரியார் எட்டாவது வயதில் வேதம் கற்பதை முடித்துக் கொண்டு பாஷ்யம் எழுதத் தலைப்பட்டார். அவர்கள் எல்லோரும் இந்த இப்பிறவியில் எதையோ முயன்று அல்லது நாம் காணும் வகையில் தம்முடையதான ஒரு சாதனையை மேற்கொண்டு அல்லது சத்திய நிஷ்டையால் எதையோ சென்றடைந்தனர் என்பதில்லை. இவ்வகையில் காந்தியின் வாழ்க்கை நமக்குச் சாதகமாக அமைந்துள்ளது; அது பிறர் பின்பற்றத்தக்கதாக உள்ளது.

ஒருவர் என்னை ஒரு தரம் கேட்டார், அவரைக் “காந்தி” என்பதா அல்லது “காந்திஜி” என்பது தான் சரியா? என்று, ‘நீங்கள் அவரை தனி மனிதர்” என்றோ வழிபாட்டுக் குரியபெருந்தகையாளர் என்றோ கருதுவீர்களாயின் “காந்திஜி” என்று தான் சொல்லவேண்டும். அப்படியன்றி, “காந்தி ஒரு சிந்தனைப் போக்கு” என்று கொள்வீர்களானால் “காந்தி” என்று தான் செல்ல வேண்டும் அதற்குப் பிறகு “காந்தி இருந்தான்” என்று சொல்ல வேண்டியிருக்கும். என்னைப் பொருத்தவரை காந்தி ஒரு சிந்தனைப் போக்கு மட்டும்தான்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s