பாரதியும் முத்துலட்சுமி அம்மையாரும்

பெண்கல்வியின் அவசியத்தை எடுத்துக்காட்ட விரும்பிய பாரதி பிற்காலத்தில் சமூக சீர்திருத்தவாதியாக விளங்கிய டாக்டர். முத்துலக்ஷ்மி ரெட்டி எஃப்.ஏ. பரீட்சையில் தேறின செய்தியையும், பிற்காலத்தில் ‘சிஸ்டர்’ என்று அழைக்கப்பட்ட ஆர்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாள் மெட்ரிகுலேஷனில் தேறிய செய்தியையும் ‘சக்கரவர்த்தினி’ பத்திரிகையில் வெளியிட்டார். (சக்கரவர்த்தினி, 1906 ஜனவரி, பக்: 143).

“சக்கரவர்த்தினி: இது சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஒரு தமிழ் பத்திரிகை. பெண்பாலாரின் அறிவுப் பெருக்கத்துக்கென்று தொடங்கப் பெற்றது இது. இதன் முதல் இரு பகுதிகள் கிடைக்கப்பெற்றோம். நம் நாட்டு மாதர்கள் நிலையைச் சீர்படுத்துவதற்கென்றே எத்தனை பத்திரிகைகள் வெளிவந்தாலும் அவை மிகையாகாதென்று பத்திராசிரியர் இப்பத்திரிகையின் முதல் பகுதியில் எழுதியது முற்றிலும் பொருத்தமேயாம். ஒரு நாட்டின் சீரும் சிறப்பும் அந்நாட்டு மாதர்களைப் பொறுத்தே பெரும்பாலும் இருத்தலின் தேச நலத்தைக் கருதும் நன் மக்களெல்லாம் அதிலும் கவலை செலுத்தற்குரியர். இப்பத்திரிகை பெண்பாலார்க்கு முக்கியமாகத் தெரிய வேண்டிய பல இனிய வியாசங்களைத் தன்பால் நிரம்ப உள்ளது. இதுபோன்ற சிறந்த பத்திரங்களை நம்நாட்டு மாதர்கள் பெற்றுப் படித்துவரின் அவர்கள் லெளகீக வைதீக ஞானங்களில் தேர்ச்சி பெற்று விளங்குவரென்பது திண்ணம். இதற்குச் சுதேசமித்திரன் பத்திராசிரியராகிய ஸ்ரீ ஜி.சுப்பிரமணிய ஐயரவர்கள் முதலிய நல்லறிஞர்கள் விஷயமெழுதி வருகின்றனர். இதன் பத்திராசிரியர் ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியாரவர்கள். இந்தப் பத்திரிகையை எல்லாரும் அபிமானித்து, அதனை நடாத்துபவர்க்கு ஊக்கமளித்து வர நம்மவர்கள் கடமைப் பட்டவர்களாவர்.”

முதல் பத்திரிகை “சக்கரவர்த்தினி”  அறிஞர் தொ.மு.சி. ரகுநாதன்.


Muthulaksmi met Subramania Bharathi at Dr.Nanchunda Rao’s residence in Madras in 1908. Subramania Bharathi at that time was the Editor of a news paper called, India. He requested Muthulakshmi to write essays on women’s rights.

Dr. Nanjunda Rao, (B.A., M.B.C.M., F.C.S.) – opinion about Bharathi’s “The Fox with the Golden Tail” 
“It has a high educational value. A careful study of the booklet will do good to all the children in our country, young as well as old.” 

பாரதி 1912-இல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடவில்லையே ஏன்?
பாரதி 1908-ஆம் ஆண்டே புதுச்சேரிக்குப் போய்விட்டார். 1912-இல் அவர் புதுச்சேரியில் வாழ்ந்துகொண்டிருந்தார். 1908 முதல் 1912 ஆண்டு முடிய பாரதியின் சூழ்நிலையைப் பார்ப்போம்.
சென்னையிலிருந்து ‘இந்தியா’ பத்திரிகை 1908 செப்டம்பர் 5-ஆம்தேதிவரை வெளிவந்தது. புதுச்சேரியிலிருந்து அக்டோபர் 10-ஆம்தேதி முதல் மீண்டும் வெளிவரத்தொடங்கியது. 1910 மார்ச் மாதம் ‘இந்தியா’ நின்றுபோனது.
1910 ஜனவரி முதலாக பாரதி சொந்தமாக நடத்திய உயர்தர மாதப் பத்திரிகை ‘கர்மயோகி’ அதுவும் சில இதழ்களோடு 1910-லேயே நின்றுபோனது.
‘விஜயா’ பத்திரிகை 1909, கிருஷ்ணஜெயந்தி முதல் வெளிவந்தது. 1910 ஏப்ரலுக்குப் பிறகு விஜயாவும் நின்றுபோனது.
சூரியோதயம், பாலபாரதி கூட 1910-க்குள்ளேயே நின்றுவிட்டது.
1910ம் வருஷம் முடிவதற்குள் தமக்கென ஒரு பத்திரிகை இல்லாத சங்கடமான நிலைமையை அடைந்துவிட்டார் பாரதி.
ஆம். புதுச்சேரிக்கு வந்த இரண்டாண்டுகளில் பாரதியின் பத்திரிகை முயற்சிகளெல்லாம் நின்றுபோயின. அதன்பின்பு, புதுவையில் இருந்த காலம்வரை அவர்வேறு பத்திரிகைகள் ஆரம்பிக்கவில்லை. தொடர்ந்து சமகால அரசியல் போக்குகளை எழுத முடியாத நிலை 1913 வரை பாரதிக்கு ஏற்பட்டது.

இங்கே ஒருவர் வரலாறே படிக்காமல் இப்படி உளறிக் கொட்டுகிறார்.

தகவல்களை விரல் நுனியில் வைத்திருந்த நம் மஹாகவியோ, உள்ளுர் பெண்ணின் அகில இந்திய சாதனை குறித்து, ஒரே ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. – மதிமாறன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s