உடலை வருத்தி உழைக்கும் மக்கள் மாட்டுக் கறியை சாப்பிட அனுமதிக்க வேண்டும் – விவேகானந்தர்

“உடலை வருத்தி உழைக்கும் மக்கள் மாட்டுக் கறியை சாப்பிட அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பக்தர்களாக வாழ விரும்புவோர் மாட்டுக்கறி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 4).

“ஒரு காலத்தில் ‘பிராமணர்கள்’ மாட்டுக்கறி சாப்பிட்டார்கள். ‘சூத்திரர்’களை திருமணம் செய்து கொண்டார்கள். ‘பிராமணர்’களுக்கு சூத்திரர்கள் மாட்டுக்கறி உணவை சமைத் தார்கள்” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 9).

“நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்துஅல்ல.” (He is not a good Hindu whodoes not eat beef) – (தொகுதி-3 – அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்பில்’ பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை).

Swami_Vivekananda_in_Belur_Math_19_June_1899

அமெரிக்காவில், ‘உலக மதங்களின் நாடாளுமன்றம்’ என்ற அமைப்பு செயல்பட்டது (1893). அந்த அமைப்பில், விவேகானந்தர் ஆற்றிய உரையைத்தான் சங்பரிவாரங்கள் சிலாகித்துப் பெருமை பேசுகின்றன. இந்த நாடாளுமன்றத்தின் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜான் ஹென்றி பாரோஸ்எனும் பாதிரியார். அவர் எழுதிய ‘ஆசியாவில் கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பு’ என்ற நூலில், கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“மதங்களுக்கான நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு முடிந்த பிறகு, நான் விவேகானந்தருடன் உணவு விடுதிக்கு சாப்பிடச் சென்றேன்; அந்த உணவு விடுதி, நிகழ்ச்சி நடந்த ‘ஆர்ட் இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்தின் தரைதளத்தில் இருந்தது. ‘என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்டேன். ‘எனக்கு மாட்டிறைச்சி கொடுங்கள்’ என்று விவேகானந்தர் கேட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : கீற்று

Dr. Barrows told that he observed Swami Vivekananda eating beef in the United states. He also told, right after the close of the first session of the Parliament of the World’s Religion, he took Vivekananda and some other participants to a restaurant in the basement of the Art Institute, there Vivekananda preferred to eat beef.

In an article appeared on The Outlook on 17 July 1897, Barrows wrote— “After the first session of the Parliament of Religions I went with Vivekananda to the restaurant in the basement of the Art Institute, and I said to him, ‘What shall I get you to eat?’ His reply was “Give me beef !””

Source : Did Swami Vivekananda eat Beef ? 

Orthodox brahmins regarded with abhorrence the habit of eating animal food. The Swami courageously told them about the eating of beef by the brahmins in Vedic times. One day, asked about what he considered the most glorious period of Indian history, the Swami mentioned the Vedic period, when ‘five brahmins

used to polish off one cow.’ He advocated animal food for the Hindus if they were to cope at all with the rest of the world in the present reign of power and find a place among the other great nations, whether within or outside the British Empire. || Vivekanand A Biography – Swami Nikhilanda

There was a time in this very India when, without eating beef, no Brahmin could remain a Brahmin; you read in the Vedas how, when a Sannyasin, a king, or a great man came into a house, the best bullock was killed; Rigveda (10/85/13) declares, “On the occasion of a girl’s marriage oxen and cows are slaughtered.” || The Complete Works of Swami Vivekananda/Volume 3/Lectures from Colombo to Almora/Reply to the Address of Welcome at Madura

The Brahmins at one time ate beef and married Sudras. [A] calf was killed to please a guest. Sudras cooked for Brahmins. The food cooked by a male Brahmin was regarded as polluted food. But we have changed our habits to suit the present yuga – The Complete Works of Swami Vivekananda/Volume 9/Newspaper Reports/Part IIi

பசுக்களைப் பரிபாலிக்கின்ற சபை ஒன்றினுக்கு ஊக்கமுள்ள பிரசாரகர் ஒருவர் சுவாமிஜியைக் காணும் பொருட்டு வந்தார். அவர் தம் தலையிலே காஷாயத் தலைப்பாகை அணிந்திருந்தார்; தோற்றத்திலே வடநாட்டினரைப் போலக் காணப்பட்டார். அவரது உடை எறக்குறையச் சந்நியாசிகளுடைய உடை போன்றிருந்தது. அந்தப் பசு பரிபாலன சபைப் பிரச்சகர் வந்தார் என்று கேள்விப்பட்டதும், சுவாமிஜி சாலை அறைக்குவந்தார். பிரசாரகர் சுவாமிஜியை வணங்கிப் பசுத்தாயினுடைய படம் ஒன்றினைச் சுவாமிஜிக்கு கொடுத்தார். சுவாமிஜி படத்தைபெற்று அருகில் நின்ற ஒருவர் கையில் கொடுத்தார் பின்னர், பின்வரும் சம்பாஷணை நிகழ்ந்தது

விவேகானந்தர் : உங்களுடைய சங்கத்தின் நோக்கம் என்ன?

பிரசாரகர் : நமது நாட்டிலுள்ள பசுத்தாய்களை கசாப்புக் கடை காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம், நோயுற்ற பசுக்களும் வலுவிழந்தனவும் கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்திய சாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம்.

விவேகானந்தர் : அது மிக நல்லது, உங்கள் வருவாய்க்கு வழி என்ன?

பிரசாரகர் : உங்களை போன்ற பெரியமனிதர்கள் அன்போடு கொடுக்கின்ற நன்கொடைகளைக் கொண்டே சபையின் வேலை நடந்து வருகின்றது.

விவேகானந்தர் : இப்பொழுது எவ்வளவு பணம் சேர்த்து வைத்துள்ளீர்கள்?

பிரசாரகர் : இந்த முயற்ச்சிக்கு மார்வாடி வணிகர் கூட்டம் சிறந்த உதவி புரிகின்றது. இந்த நன்முயற்ச்சிக்கு அவர்கள் பெருந்தொகையை கொடுத்திருக்கிறார்கள்.

விவேகானந்தர் : மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்துவிட்டது. ஒன்பது இலட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்று இந்திய அரசாங்கத்தார் செய்தி வெளியிட்டிருக்கின்றனர். இதற்கு உதவி புரிவதற்கு உங்களுடைய சபை ஏதாவது செய்திருக்கின்றதா?

பிரசாரகர் : பஞ்சம் முதலிய துன்பம் வரும்பொழுது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத்தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே எற்படுத்தப்பட்டுள்ளது.

விவேகானந்தர் : உங்களுடைய சொந்தச் சகோதர சகோதரிகளாகிய இலட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தினால் துன்பம் அடைந்து மரணத்தின் வாயில் விழும்பொழுது அவர்களுக்கு எவ்வழியிலாவது உணவளித்துக் காப்பாற்ற வேண்டுவது உங்கள் கடமை என நீங்கள் நினைக்கவில்லையா?

பிரசாரகர் : இல்லை! இந்தப் பஞ்சம் மக்களுடைய பாவகருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே.

(பிரசாரகர் இந்த வார்தையை கூற, இவற்றைக் கேட்டுச் விவேகானந்தருடைய கண்களிலிருந்து நெருப்புப் பொரி பறப்பது போன்றிருந்தது; முகம் சிவந்தது, அவர் தம் கோவத்தை அடக்கிக்கொண்டு, பின்வருமாறு கூறினார்)

விவேகானந்தர் : தம்முடைய சொந்த சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரை காப்பாற்றும் பொருட்டு ஒரு பிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாபமின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் குவியல் குவியலாக உணவைக்கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை. மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடைகிறதென நான் எண்ணவில்லை. மனிதர் தம் கருமத்தினால் இறக்கின்றனரென்று நீர் வாதிப்பீராயின், இவ்வுலகத்துலே எதைக் கருதியும் முயல வேண்டுவதில்லை என்பது தீர்மானமாகின்றது. விலங்குகளைப் பரிபாலிப்பதற்க்காக நீர் செய்கிற வேலையும் இவ் விதிக்குப் புறம்பாகாது. பசுத்தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக் கடை காரர்களுடைய கையிலகப்பட்டு இறக்கின்றன வென்று சொல்லிவிட்டுச் சும்மா இருக்கலாமே?

பிரசாரகர் : சிறிது நாணத்துடன்; ஆம் நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், பசு நம் அன்னை என்று சாத்திரங்கள் சொல்லுகின்றனவே? என்றார்.

விவேகானந்தர் : நகைத்துக்கொண்டே, ஆம் பசு நம் அன்னை என்பதை நான் அறிந்துகொண்டேன்; இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்!

(இந்த வார்தைகளை கேட்டுப் பிரசாரகர் விவேகானந்தரை வணங்கிவிட்டு போய்விட்டார், பின்பு விவேகானந்தர் சீடர்களை நோக்கிச் சொல்லுகிறார்)

விவேகானந்தர் : அந்த மனிதனுடைய சொற்களைப் பாருங்கள்! மனிதர் தமது கருமத்தினால் இறக்கிறார்கள் என்று சொல்கின்றான். அவர்களுக்கு உதவுவதனால் என்ன பயன் என்கிறான். நாடு நாசமாய்ப் போய்விட்டதென்பதற்க்கு இதுஒரு தக்கசான்று. இந்துக்களுடைய கரும விசாரணை எவ்வளவு பழுதடைந்து விட்டதென்பதைப் பாருங்கள்! மனிதருக்கு இரங்காத இதயமுள்ளவர்கள் இவர்கள், இத்தகையோரை மனிதர் என்று எண்ணலாமா?

Related : பசுவதை தடைச் சட்டம் குறித்து காந்தி

Advertisements

One thought on “உடலை வருத்தி உழைக்கும் மக்கள் மாட்டுக் கறியை சாப்பிட அனுமதிக்க வேண்டும் – விவேகானந்தர்

  1. Pingback: பசு வதை தடைச் சட்டம் குறித்து காந்தி | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s