மதம் மாறிய மகனுக்கு – கஸ்தூரிபா

காந்தி – கஸ்தூரிபா இருவருக்கும் பிறந்த புதல்வர்தான் ஹரிலால். இவர் தனது தந்தையான காந்திக்கு நேர் எதிரான குணங்களை உடையவராக இருந்தார். காந்தியடிகள் ஒழுக்க சீலர் என்றால் ஹரிலால் ஒழுக்க மற்றவர். தந்தை அமைதியானவர், இவர் ஆர்ப்பாட்டமுடைய அராஜகவாதி; காந்தி மதுபான விரோதி; இவர் மதுபானப் பிரியர்; காந்தி அகிம்சாவாதி; இவர் அகிம்சைக்கே பகையானவர்; காந்தி இந்துமதப் பேரறிவளார்; மகன் முகமதிய மதம் மாறியவர். இவ்வாறு எல்லா நிலைகளிலும் அவர் தனது தந்தை பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவராக வாழ்ந்தவர்.

முகமதியராக மாறிவிட்ட தனது மகனுக்கு கஸ்தூரிபாய், ஒரு கடிதம் எழுதினார். அவர் எழுதிய கடித விபரம் வருமாறு:

எனது அன்புள்ள மகன் ஹரிலாலுக்கு,

சென்னை நகரில், நள்ளிரவில், நடுத்தெருவில், நீ குடி வெறியோடு பல தவறுகளைச் செய்ததற்காகப் போலீசார் உன்னைக் கைது செய்து, மறுநாள் ஒரு பெஞ்சு மாஜிஸ்திரேட் விசாரணையில், உனக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இவ்வளவு எளிய தண்டனையோடு உன்னை விடுதலை செய்து விட்டார்களே! இது தவறு என்றே எனக்குத் தோன்றுகிறது.

உனது தந்தையாரின் பெருமையை மனத்தில் கொண்டு தான் அந்த மாஜிஸ்திரேட் உனக்கு இவ்வளவு சிறு தண்டனையை விதித்திருக்க வேண்டும். இந்த விவரத்தைக் கேட்டு எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அன்றைய இரவு நீ தனியாக இருந்தாயா? அல்லது வேறு யாராவது நண்பர்கள் உன்னோடு இருந்தார்களா என்று எனக்குத் தெரியாது. எப்படியானால் என்ன? நீ செய்தது பெருந்தவறு.

hiralal_gandhiஉனக்கு என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. தன்னடக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் உனக்குக் கண்ணீருடன் கூறியிருக்கிறேன். ஆனால், நீயோ, மேலும் மேலும் வீழ்ச்சி அடைகிறாய். இப்போது நீ, என் உயிருக்கே அபாயமாக முடியும் படியான காரியங்களைச் செய்கிறாய். இறுதியை நெருங்குகிற பெற்றோருக்கு நீ அளிக்கும் துயரத்தைப் பற்றி எண்ணிப்பார்.

கயமையான வாழ்க்கை நடத்துகிற நீ, சமீபத்தில் பெருமை வாய்ந்த உனது தந்தையைக் குறை கூறி ஏளனம் செய்வதாய் அறிந்தேன். பகுத்தறிவு உள்ளவனுக்கு அடாத செய்கை இது. ஈன்ற தந்தையாரை இழிவு படுத்துவதால் நீ உன்னையே இழிவு செய்து கொள்கிறாய் என்பதை உணரவில்லையா? அவரோ, உனக்கு இன்றும் அன்பையே வழங்குகிறார். ஒழுக்கத் தூய்மைக்கு அவர் தருகிற மரியாதை என்ன என்று உனக்குத் தெரியும். ஆனால், அவருடைய அறிவுரைகளை எல்லாம் நீ அலட்சியம் செய்து விட்டாய். ஆயினும் அவர் உன்னைத் தம்மோடு வைத்துக் கொண்டார்; உணவும் உடையும் அளித்தார்; நீ, நோயுற்ற போது பணி விடைகளும் புரிந்தார்.

அவருக்கு இந்த உலகத்தில் தான் எத்தனை பொறுப்புக்கள் அவர் உனக்குச் செய்தது அதிகம். அவர் விதியை எண்ணித்தான் வருந்த முடியும். பகவான் அவருக்கு மாபெரும் ஆன்ம சக்தி அளித்துள்ளார். அவர் இந்த உலகத்தில் நிறைவேற்றி வந்திருக்கும் கடமைகளைச் செய்து முடிக்க ஆண்டவன் தான் அவருக்கு ஆயுளும் உடல் வலிமையும் தரவேண்டும். நான் அபலை. உன்னுடைய அடாவடித் தனத்தை என்னால் தாங்க முடியவில்லை.

உன்னுடைய தீய ஒழுக்கம் பற்றிப் பலர் உனது தந்தையாருக்குக் கடிதம் எழுதுகின்றனர். உன்னால் உண்டாகும் அவமானங்களை எல்லாம் அவர் ஏற்க வேண்டியுள்ளது. ஆனால், என்.அவமான உணர்ச்சியை எங்கு மறைப்பது? நண்பர்களுக்கும் அறிமுகமில்லாதவர்களுக்கும் இடையில் நான் நிமிர முடியாதபடி செய்து விட்டாய்! உனது செயல்கள் அவ்வளவு வெட்கக் கேடாக உள்ளன. உன் தந்தையார் உன்னை மன்னிப்பார்! கடவுள் உன்னை மன்னிக்கவே மாட்டார்.

சென்னையில், ஒரு பிரமுகர் வீட்டில் விருந்தாளியாக இருந்து, அங்கு தவறான காரியங்கள் செய்து விட்டு, ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி விட்டாயாம்! உனது செயலைக் கண்டு அந்தப் பிரமுகர் திணறிப்போய் இருப்பார். ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழித்ததும் தினசரிகளில் உன்னைப் பற்றி என்ன செய்திகள் வருமோ என்ற அச்சத்தினால் எனது நெஞ்சு நடுங்குகின்றது.

சில சமயம் நீ எங்கிருக்கிறாயோ, எங்கு தூங்குகிறாயோ, என்ன உண்ணுகிறாயோ என்று கவலைப்படுகின்றேன். ஒருவேளை நீ, அனாசாரமான உணவுகளையும் சாப்பிடத் தொடங்கி இருக்கலாம். இவ்வாறெல்லாம் எண்ணி இரவெல்லாம் தூக்கம் இழந்து துன்புறுகிறேன். ஆனால், உன்னை எங்கே பார்க்க முடியும் என்றும் தெரியவில்லை. நீ என்னுடைய மூத்த மகன், உனக்கு ஐம்பது வயதாகி விட்டது. உன்னை நேரில் பார்த்தால் என்னையும் அவமதித்து விடுவாயோ என்று எனக்கு அச்சமாகவும் இருக்கிறது.

உன்னுடைய மூதாதையரின் மதத்தை நீ துறந்ததின் காரணம் எனக்குப் புரியவில்லை. அது உன் சொந்த விஷயம். ஆனால், ஒரு மாசும் அறியாத பாமர மக்களை ஏமாற்றி இச்சகம் பேசி உன்னைப் பின்பற்றும்படி தூண்டுகிறாய் என்று அறிகிறேன். உனக்கு மதத்தைப் பற்றி என்ன தெரியும்? உன்னுடைய மனநிலையில் மற்றவர்களுக்கு நியாயம் கூற உனக்கு என்ன தகுதி இருக்கிறது? உனது தகப்பனார் பற்றிப் பேச உனக்குச் சிறிதும் தகுதி கிடையாது. இவ்வாறு நீ ஒழுகினால், விரையில் எல்லோரும் உன்னை வெறுத்து ஒதுக்கும் நிலையை அடைவாய். வழி தவறியுள்ள உன் மனத்தை நேர் வழியில் திருப்பு. இது எனது வேண்டுகோள்.

நீ மதம் மாறியதை நான் விரும்பவில்லை. ஆயினும், நன்னெறி செல்லவே மதம் மாறினேன்’ என்று நீ அறிவித்த போது, மத மாற்றங்கூட நல்லது தான் என்று உள்ளுக்குள் மகிழ்ந்தேன். இனி நீ ஒழுக்கம் தவறாமல் வாழ்வாய் என்று நம்பினேன். ஆனால், அந்த நம்பிக்கையும் உடைந்து விட்டது.

உன்னுடைய நடத்தையால் உன் பிள்ளை எவ்வளவு துயரப்படுகிறான் என்பதை நீ அறிவாயா? உன் நடத்தையால் ஏற்பட்ட சோகச் சுமையை உன் பெண்களும், மருமகளும் மிகவும் கஷ்டப்பட்டுச் சுமக்கிறார்கள்.”

ஹரிலாலுக்கு இவ்வாறு கடிதம் எழுதிய கஸ்தூரிபாய், ஹரிலாலின் முகமதிய நண்பர்களுக்கும் பத்திரிகை வாயிலாக ஒர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை விவரம் வருமாறு:

என்மகன் சமீபத்தில் செய்த காரியங்களுக்கு உதவி புரிந்தவர்களுக்குத்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உங்கள் செயலும், மனப்போக்கும் எனக்கு விளங்கவில்லை. சிந்தனையில் சிறந்த முஸ்லிம் பெரியோர்களும், எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு நண்பர்களாக இருந்த முஸ்லிம்களும், என் மகன் செய்ததைச் சற்றும் ஏற்கவில்லை என்பதைநான் அறிவேன். அதற்காக, நான் மகிழ்கிறேன். மத மாற்றத்தால் என் பிள்ளை உயரவில்லை. இன்னும் இழி செயல்களிலே ஆழ்ந்து விட்டான். ஆனால், உங்கள் மதத்தைச் சார்ந்த சிலர், அவனுக்கு ‘மெளல்வி என்று பட்டம் சூட்டவும் முனைந்துவிட்டார்கள். இது உங்களுக்கு நீதியா என்று கேட்கிறேன். என் மகனைப் போன்ற ஒழுக்கம் கெட்டவர்களுக்கு ‘மெளல்வி பட்டம் சூட்ட உங்கள் மதம் சம்மதிக்கிறதா?

kasturba1939அவனைத் தட்டிக் கொடுத்து, நீங்கள் கண்ட ஆனந்தம் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அவனுடைய நன்மைக்காக இவ்வாறு செய்கிறீர்கள் என்றும் என்னால் நம்ப முடியவில்லை. எங்களை இழிவு செய்ய வேண்டும் என்பதே உங்கள் நோக்கம் என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்யலாம்.

உங்களுக்குள் சிலருக்காவது மனச்சாட்சி இருக்காதா? நொந்து நலியும் ஒரு தாயின் சோகக் குரல் உங்களுடைய உள்ளத்தைத் தீண்டாதா? அதனால், அவர்கள் என் பிள்ளையை நேர் வழிக்குத் திருப்பிட முயற்சி செய்ய மாட்டார்களா? தெய்வ சந்நிதானத்தில் நியாயமான வேலைகளையே செய்ய வேண்டும் என்று எனது மகனுக்குக் கூறினேன். அதையே உங்களுக்கும் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்.

கஸ்தூரிபாய், தன்னுடைய மகன் செய்கையால் எவ்வளவு நொந்து போயிருந்தார் என்பதையே மேலே உள்ள இரண்டு கடிதங்களும் உணர்த்துகின்றன.

அப்துல்லாவாக மாறிய ஹரிலால் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பி ஹீராலால் என்று பெயர் வைத்துக் கொண்டார். அவர் தனது செயல்களுக்காக வருந்தினார். ஆனால் அவர், தனது பெற்றோர்களுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பவில்லை.

அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் – திரு.என்.வி.கலைமணி

From RajMohan Gandhi’s “Mohandas A True Story of the Man His People and an Empire “

Chapter 11 > Negotiating Repression

In April 1936 he met his parents in Nagpur and told them ‘how he was amused by the attentions that were being paid to him by the missionaries of rival faiths’. Some weeks later, on 30 May, while Gandhi and Kasturba were in Bangalore, the newspapers announced that Harilal, now forty-eight, had secretly converted to Islam and had been accepted on Friday 29 May as a Muslim in one of Bombay’s main mosques, and now bore the name Abdulla. A shattered Kasturba conveyed her reaction in a letter to Harilal’s daughter Rami:

I am very unhappy, but what to do? In fact I feel very ashamed… We have lost a jewel. The jewel has gone into the hands of Musalmans.

Gandhi thought the conversion stemmed from compulsive habits. ‘He must have sensation and he must have money,’ he wrote to Amrit Kaur (1 June 1936: 69: 75). But the publicized conversion to Islam of Gandhi’s son was more than a personal or family matter. It demanded a public response. On 2 June Gandhi issued a press statement:

The newspapers report that about a fortnight ago my eldest son Harilal, now nearing fifty years, accepted Islam and that on Friday last… he was permitted to announce his acceptance amid great acclamation and that, after his speech was finished, he was besieged by his admirers who vied with one another to shake hands with him.

If his acceptance was from the heart and free from any worldly considerations, I should have no quarrel… But I have the gravest doubt about this… Everyone who knows my son Harilal, knows that he has been for years addicted to the drink evil and has been in the habit of visiting houses of ill-fame.

kasturba_and_childrenGod can work wonders. He has been known to have changed the stoniest hearts and turned sinners into saints, as it were, in a moment. Nothing will please me better than to find that… he had… suddenly become a changed man… But the Press reports give no such evidence…

Harilal’s apostasy is no loss to Hinduism and his admission to Islam is a source of weakness to it if, as I apprehend, he remains the same wreck that he was before.

My object in addressing these lines to my numerous Muslim friends is to ask them to examine Harilal in the light of his immediate past and, if they find that his conversion is a soulless matter, to tell him so plainly and disown him, and if they discover sincerity in him to see that he is protected against temptations so that his sincerity results in his becoming a God-fearing member of society.

I do not mind whether he is known as Abdulla or Harilal if, by adopting one name for the other, he becomes a true devotee of God, which both the names mean (Harijan, 6 June 1936).

Harilal’s son Kanti visited his father and wept at his state. Soon there were stories of Abdulla Gandhi preaching Islam in different parts of the country but also of disorderly conduct by him and proceedings against him. A humiliated Kasturba ‘gave vent to her feelings one morning in Delhi’ before Devadas, who reduced pain’s flow into ‘An Open Letter from a Mother to her Son’ that newspapers published on 27 September. The letter also offered a glimpse into Gandhi’s heart, piercing its steel casing, and into her own:

Dear son Harilal, Now it has become hard for me even to live. How much pain you are inflicting on your parents in the evening of their life, at least think of that a little.

Your father does not speak anything about this before anybody. But the shock that your behaviour causes breaks his heart to pieces. God has given him strong willpower… But I am a weak, aged woman, and I am unable to endure the mental torture caused by you.

Your father daily receives letters from many persons complaining against your behaviour. He has to gulp down the bitter drink of all this infamy. But for me you have not spared a single place where I can go. Out of shame I cannot move with ease among friends or even strangers. Your father has always forgiven you; but God will never tolerate your behaviour.

Every morning when I wake up I have a fear in my heart what if there are reports about your new evil doings in the newspapers. I long ardently to meet you; but I do not know your whereabouts. You are my eldest son, and you are now fifty years of age. Perhaps you may insult even me.

You have changed your ancestral religion. That is your personal affair. You like those who give you money but you spend the money on drinking and after that you deliver discourses from the pulpit…

Addressing Muslims who celebrated the conversion, Kasturba added:

The powerless voice of a wounded mother will surely stir someone’s heart… What you have been doing would not be reasonable in the eyes of Khuda.

Harilal’s first reaction (not wholly inaccurate, as we know) was that his mother ‘didn’t write this letter. Someone else wrote it and signed her name.’ He also claimed he would stop drinking if his parents embraced Islam. But the conversion was not real, and before the end of the year he reconverted to Hinduism in an Arya Samaj ceremony and adopted a new name, Hiralal.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s