இம்மண்ணில் ஊனோடும் உதிரத்தோடும் …..

காந்தி பிறந்தநாள், இறந்தநாள் வந்தாப் போதும் நம் மக்கள் ஐன்ஸ்டீன் காந்தி மறைவின் போது விடுத்த செய்தியாக ஒன்றைத் தூக்கிப் போட்டு மேற்கொள் காட்டுறாங்க
 இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் இந்த நிலவுலகத்தில் ஊனோடும் உதிரத்தோடும் உலவினார் என்பதை வருங்காலச் சந்ததியினர் நம்பவே மறுப்பர்………………….
உண்மையில் அது காந்தியின் 70வது பிறந்த நாளுக்கு (1939) வாழ்த்து தெரிவித்த போது ஐன்ஸ்டீன் கூறியது….
albert_einstein_head-230x300Einstein’s Statement on the occasion of Mahatma Gandhi’s 70th birthday(1939)
A leader of his people, unsupported by any outward authority: a politician whose success rests not upon craft nor the mastery of technical devices, but simply on the convincing power of his personality; a victorious fighter who has always scorned the use of force; a man of wisdom and humility, armed with resolve and inflexible consistency, who has devoted all his strength to the uplifting of his people and the betterment of their lot; a man who has confronted the brutality of Europe with the dignity of the simple human being, and thus at all times risen superior.
Generations to come, it may be, will scarce believe that such a one as this ever in flesh and blood walked upon this earth.
(Albert Einstein-Out of My Later Years – New York: Philosophical Library,1950)
காந்தி மறைந்த போது ……
Everyone concerned in the better future of mankind must be deeply moved by the tragic death of Mahatma Gandhi. He died as the victim of his own principles, the principle of nonviolence. He died because in time of disorder and general irritation in his country, he refused armed protection for himself. It was his unshakable belief that the use of force is an evil in itself, that therefore it must be avoided by those who are striving for supreme justice to his belief. With his belief in his heart and mind, he has led a great nation on to its liberation. He has demonstrated that a powerful human following can be assembled no only through the cunning game of the usual political manoeuvres and trickeries but through the cogent example of morally superior conduct of life.
The admiration for Mahatma Gandhi in all countries of the world rests on recognition, mostly sub-conscious, recognition of the fact that in our time of utter moral decadence, he was the only statesman to stand for a higher level of human relationship in political sphere. This level we must, with all our forces, attempt to reach. We must learn the difficult lesson that an endurable future of humanity will be possible only if, also in international relations, decisions are based on law and justice and not on self-righteous power, as they have been upto now.
மானுடகுலத்தின் மேன்மையான வருங்காலத்தை எண்ணி கவலையுறும் ஒவ்வொரு மனிதனையும் காந்தியின் மரணம் ஆழமாக அசைத்துவிட்டது.அவரது அகிம்சை கொள்கைகளே அவர் உயிரை பறித்தது.தன் தேசம் சீர்குலைந்து , பொறுமையின்றி தத்தளித்துக் கொண்டிருந்த ஓர் தருணத்தில் அவரை பாதுகாத்துக்கொள்ள முனையாமல் ,ஆயுத பாதுகாப்பை ஏற்க மறுத்ததால் உயிர் துறந்தார்.அதிகாரத்தை பிரயோகிப்பதே தீது என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை , ஆதலால் அவரது இந்த நம்பிக்கையை ஏற்பவர்கள் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றார் .இதயத்திலும் மனத்திலும் இந்த நம்பிக்கையை சுமந்துக்கொண்டு மகத்தான தன் தாய்நாட்டை சுதந்திரத்தை நோக்கி இட்டு சென்றார்.வழமையான அரசியல் சூழ்ச்சிகள் ,வழிமுறைகளை தவிர்த்து அறம் தோய்ந்த ,உயர்ந்த நெறிகளால் நிறைந்த வாழ்வை முன்னுதாரணமாக கொண்டும் கூட மக்கள் சக்தியை திரட்டலாம் என்பதை உலகிற்கு உணர்த்தினார் .
அறநெறிகள் சீரழிந்துக் கொண்டிருக்கும் இக்காலங்களில்,அரசியல் தளத்தில் மானுட உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற ஒரே உலக தலைவர் அவர்தான் என்பதை ஆழ்மனதில் உணர்வதே உலகமக்கள் அனைவரும் அவர் மேல் அன்பும் மதிப்பும் கொண்டிருக்க முக்கிய காரணம்.நாம் முழு முயற்சியோடு அந்த உயரத்தை எட்டிப்பிடிக்க முனைய வேண்டும்.அனைத்து இக்கட்டுகளையும் கடந்து மானுடகுலம் தழைக்க – சர்வதேச உறவுகளில் எடுக்கப்படும் முடிவுகள்,இதுவரை மலிந்து கிடக்கும் சுயநலத்தோடு இல்லாமல்,  சட்டப்பூர்வமாகவும் நீதியுனர்வுடனும் இருக்க வேண்டும்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s