காந்தியின் வளர்ப்பு மகள் லட்சுமி (பட்டியல் சாதி)

சபர்மதி ஆசிரமத்தில் வளர்ந்த காந்தியின் வளர்ப்பு மகள் லட்சுமி (பட்டியல் சாதி)
Gandhi with Lakshmi

Gandhi with Lakshmi

ஜன 9, 1915 ல் காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்புகிறார். தன்னுடன் தென்னாப்பிரிக்காவில் ஃபீனிக்ஸ் பண்ணையில் இருந்த பறையர் சாதியைச் சேர்ந்த செல்வன் (துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்) என்பவரின் மகனை (நாயக்கர் ) தரங்கம்பாடியில் இருந்து ஆசிரமத்துக்கு ஏப்ரலில் அழைத்து வருகிறார். மே 20-25 1915-இல் அகமதாபாத் நகருக்கு வெளியே (Kocharab) கோச்ராப்பில் ஆசிரமம் அமைக்கிறார். செப் 26 1915 இல் ஒரு பட்டியல் சாதி குடும்பத்தை ஆசிரமத்தில் குடியமர்த்துகிறார் ( தக்கர் பாபாவின் நண்பர் தூதாபாய், அவருடைய மனைவி தானிபென், கைக்குழந்தையாக லட்சுமி) நவம்பரில் 7 இல் ஆசிரம விதியில் தீண்டாமையை கடைபிடிக்கக்கூடாது என்ற திருத்ததைக் கொண்டுவருகிறார். கஸ்தூரிபா எதிர்ப்பு தெரிவிக்கிறார். நண்பர்களாக பிரிந்துவிடலாம் என மிரட்டுகிறார். மாதம் 7 ரூபாய் செலவிற்கு அனுப்புகிறேன் தனது அக்கா ரலியாத்யுடன் சென்று வசிக்குமாறு கூறுகிறார். காந்தியின் குடும்பத்தினர் பலர் காந்தியின் இந்த செய்கையை கண்டித்தனர். ஆசிரமத்திற்கு நிதியளித்து உதவியவர்கள் பின்வாங்கினர். பட்டியல் சாதியினர் வசிக்கும் பகுதிக்கு ஆசிரமத்தை இடம் மாற்றலாம் என முடிவெடுத்தார் காந்தி. எதிர்பாராதவிதமாக அம்பாலால் சாராபாய் என்ற மில் முதலாளி பண உதவி செய்தார். 1917-இல் காந்தியின் உறவினர் குஷால்சந்த் காட்டமாக ஒரு கடிதம் எழுதுகிறார். ஆரம்பத்தில் இருந்தே ஆசிரமத்தில் வருணாசிரமத்தை கடைபிடிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். எல்லாரும் சேர்ந்தே உணவு உண்ணுகிறோம் என்று பதில் அனுப்புகிறார் காந்தி. தூதாபாய்க்கு நல்ல வேலை கிடைக்கிறது. ஆசிரமத்தை விட்டு வெளியேறுகிறார். பின் 1920-இல் லட்சுமியை காந்தியின் பொறுப்பில் ஆசிரமத்தில் விட்டுவிட்டு செல்கிறார். காந்தியின் தத்துபிள்ளையாக கஸ்தூரிபாவின் செல்லப்பிள்ளையாக அங்கேயே வளர்கிறார் லட்சுமி. 1931-இல் லட்சுமியை பட்டியல் சாதி அல்லாத ஒருவரையே மணமுடித்து வைக்க தான் விரும்புவதாக தூதாபாயின் அபிப்பிராயத்தை கேட்டு கடிதம் எழுதுகிறார். சென்னையைச் சேர்ந்த பார்ப்பனரான மருதய்யா என்ற மாருதியுடன் ஆசிரமத்தில் வைத்து 1933 மார்சு மாதம் கல்யாணம் நடந்திருக்கிறது. 1927 முதல் ஆசிரமத்தில் ஒரே சாதியில் இனி திருமணம் நடத்திவைக்கப் போவதில்லை என்ற முடிவெடுத்திருக்கிறார்.
…..
related ::
6  சத்தியசோதனை >> 9 ஆசிரமத்தின் ஆரம்பம்
Advertisements

3 thoughts on “காந்தியின் வளர்ப்பு மகள் லட்சுமி (பட்டியல் சாதி)

  1. Pingback: காந்தியின் ஆசிரமத்தில் வசித்த தமிழ் (பறையர்) குடும்பம் | இராட்டை

  2. Pingback: மகாத்மாவும் அவரது ஹரிஜன குடும்பமும் – துஷார் பட் | இராட்டை

  3. Pingback: மகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட் | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s