மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 11

“வருமானத்தில் சமத்துவம்”

உலகமெல்லாம் கண்டு பொறாமைப்படக்கூடிய அளவுக்கு இந்தியா ஒரு முன்மாதிரியான சுதந்திர வாழ்கை நடத்த வேண்டுமென்றால், இங்குள்ள தோட்டிகள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள், மற்றவர்கள் ஆகிய எல்லோரும் அன்றாடம் செய்யும் நாணயமான உழைப்பிற்கு ஒரே சமத்துவமான ஊதியம் பெறவேண்டும். இந்திய சமுதாயம் ஒரு போதும் இந்த இலட்சியத்தை எட்டாமல் இருக்கலாம். ஆயினும் இந்தியா மகிழ்ச்சி நிறைந்த நாடாக இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு இந்தியனும் இந்த இலட்சியத்தை நோக்கியே பயணப்படவேண்டும்.

– ஹரிஜன் 16-3-1947

Mahatma Gandhi and Kasturba with fellow settlers at the Phoenix Settlement, Natal in 1906.

Mahatma Gandhi and Kasturba with fellow settlers at the Phoenix Settlement, Natal in 1906.

வாழ்ந்த காலத்திலேயே இதை செயல்படுத்தியவர் காந்தி. 1904 இல் தென்னாப்பிரிக்க சைவ உணவு விடுதியில் அறிமுகமான போலக் விரைவிலே காந்தியின் நண்பரானார். போலக்”கிரிடிக்” என்ற பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக இருந்தார். காந்தி “இந்திய ஒப்பீனியன்” என்றொரு பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்தார்.ஒரு சமயம் நோட்டாலுக்கு செல்லவிருந்த காந்தியை வழியனுப்ப வந்த போலக் பிரயாணத்தின் போது படிக்க ஜான்ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் ‘கடைத்தேற்றம்’ என்ற நுாலைக் கொடுத்தார்.

printing-press-founded-by-mahatma-gandhiஜோஹானஸ்பர்க்கில் இருந்து டர்பனுக்கு புகைவண்டியில் காந்தி பயணப்பட்ட அந்த இரவு அவரின் வாழ்வைப் புரட்டிப் போட்டது எனலாம். காந்தி தனது லட்சியவாத வாழ்வை தொடங்கினார். ரஸ்கினுடைய அந்நூலை பின்னர் “சர்வோதயம்(சர்வஜன நலம்) என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டார் காந்தி. ரஸ்கினுடைய நூலில் கூறப்பட்ட பிரதான செய்தியாக காந்தி மூன்று விசயங்களை வரிசைப்படுத்தினார்.அவை

1) எல்லோருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது
2) தங்கள் உழைப்பினால் ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ளுவதற்கு எல்லோருக்குமே ஒரே மாதிரியான உரிமை இருப்பதால்,முடி திருத்தும் தொழிலாளிக்கு இருக்கும் அதே மதிப்புத்தான் வக்கீலின் வேலைக்கும் உண்டு.
3) நிலத்தில் உழுது பாடுபடும் பாட்டாளியின் வாழ்க்கையும் குடியானவரின் வாழ்க்கையும் கைத்தொழிலில் செய்பவனின் வாழ்க்கையுமே ஆகக்கூடிய மேன்மையான வாழ்க்கை……

டர்பன் நகரத்துக்கு வெளியே போனிக்ஸ் பண்ணையை ஆரம்பித்தார். இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கையை அங்கிருந்து கொண்டு இயக்க ஆரம்பித்தார்கள். தொழிலாளர்கள் அனைவருக்கும் பாகுபாடற்ற மாதாந்திர சம்பளமாக 3 பவுண்ட் வழங்கப்பட்டன. தமது உணவை தாமே பயிர் செய்து கொள்ள சிறிதளவு நிலமும் ஒதுக்கித்தரப்பட்டன. தோட்டி வேலை முதலிய அனைத்தையும் தாமே செய்து கொள்ளவேண்டும்.

பிறப்பினாலோ, செய்யும் தொழிலாலோ எந்த வகையான ஏற்றத்தாழ்வுகளுக்கும் சர்வோதயம் இடமளிக்கவில்லை. ஆண்களும் பெண்களும் சரிசமமாக வாழும் முறையைச் சர்வோதயம் வலியுறுத்துகிறது. சர்வோதய சமுதாயத்தில் அன்பே முதற்பொருளாகும். சர்வோதய சமுதாயத்தில் சமயச் சமத்துவம் நிலைநாட்டப்படும். சமய வேறுபாடுகளுக்கு அச்சமுதாயத்தில் இடமில்லை.

ஆதாரம் :
1) சத்திய சோதனை
2)தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்
3) சர்வோதயம் – மா.ப.குருசாமி
4)கிராம சுயராஜ்யம்
5) ஹரிஜன் 16-3-1947

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s