மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 10

ஒவ்வொருவரும் தனக்குத்தானே தோட்டியாக இருக்கலாம்.உணவு உண்பதைப் போலவே மலத்தைக் கழிப்பதும் அவசியமான ஒரு செயல்.தன்னுடைய கழிவுப் பொருளைத் தானே அப்புறப்படுத்த வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும். இது சாத்தியமில்லையென்றால் ஒவ்வொரு குடும்பமுமாவது, தனது துப்புரவு வேலைகளுக்குத் தானே பொறுப்பேற்க வேண்டும்.

சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் தான் தோட்டி வேலை செய்ய வேண்டுமென்பதில் ஏதாவது பெரிய தவறு இருக்க வேண்டுமென்று நான் பல ஆண்டுகளாகவே கருதி வந்திருக்கிறேன். இந்த அத்தியாவசியமான சுகாதார சேவைக்கும், மிகத் தாழ்ந்த அந்தஸ்தை முதன் முதலாக அளித்தவர் யாரென்பதைப் பற்றி வரலாற்றுப் பூர்வமான எழுத்துச் சான்று எதுவும் நம்மிடமில்லை. அது யாராக இருந்தாலும் சரி, அவர் நமக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை.

manualscavengingநம்முடைய குழந்தைப் பருவத்திலிருந்தே நாமெல்லாம் தோட்டிகள் என்ற எண்ணத்தை நாம் மனதில் பதித்துக் கொள்ளவேண்டும். இதை உணர்ந்த ஒவ்வொருவரும் தோட்டியாக உடல் உழைப்பை மேற்கொள்ளத் தொடங்க வேண்டியதுதான். இவ்வாறு புத்திக் கூர்மையுடன் செய்யப்படும் தோட்டி வேலையானது, மனிதனின் சமத்துவத்தை உண்மையாக நிலைநாட்டுவதற்கு உதவும்.

Everyone must be his own scavenger. Evacuation is as necessary as eating; and the best thing would be for everyone to dispose of his own waste. If this is impossible, each family should see to its own scavenging. I have felt for years, that there must be something radically wrong, where scavenging has been made the concern of a separate class in society. We have no historical record of the man, who first assigned the lowest status to this essential sanitary service. Whoever he was, he by no means did us a good. We should, from our very childhood, have the idea impressed upon our minds that we are all scavengers, and the easiest way of doing so is, for everyone who has realized this, to commence Bread labour as a scavenger. Scavenging, thus intelligently taken up, will help one to a true appreciation of the equality of man.

“எரவாடா மந்திரிலிருந்து” – காந்தி அத்தியாயம் IX ரொட்டி-உடலுழைப்பு, பக்கம் 23

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s