ராஜாஜியின் “காந்தி ஆசிரமம்”

வைக்கம் சத்தியாகிரகம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் டிசம்பர் 1924 இல் பெல்காமில் நடைபெற்ற மாநாட்டில் காந்தி காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டிற்குப் பின் சபர்மதியில் வைத்து காந்தியை சந்தித்த ராஜாஜி காந்தி பெயரில் தான் ஒரு ஆசிரமம் அமைக்க விரும்புவதாக கூறி ஆசி வாங்கினார். சொன்னபடியே பிப் 6 1925 இல் திருச்செங்கோடு தாலுகாவில் நல்லிப்பாளையம் கிராமத்திற்கு அருகில் புதுப்பாளையம் குடியிருப்பில் ஆசிரமம் ஒன்றை ஆரம்பித்தார். ரத்னசபாபதி கவுண்டர் என்பவர் நாலரை ஏக்கர் நிலம் தந்து உதவினார்.

g9ராஜாஜி தனது மகன் நரசிம்மன்(15) ,மகள் லட்சுமி(12) மற்றும் 15 ஆசிரமவாசிகளுடன் குடில் அமைத்து ஆசிரமப் பணிகளைத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து வழக்கறிஞர் தொழிலை கைவிட்ட மதுரை N.நடராஜன் ஆசிரம மேலாளராகவும் 1920 முதல் ராஜாஜியின் சீடராக அறியப்பட்ட க.சந்தானம் காதி பணிகளுக்கான மேலாளராகவும் பொறுப்பேற்றார்கள். “காந்தி ஆசிரமம்” ஒரு முன்மாதிரியாக சமூக மாற்றத்திற்கான வித்தாக தீண்டாமை ஒழிப்பு,மது ஒழிப்பு மற்றும் காதியை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. P.S.ராமதுரை, R.கிருஷ்ணமூர்த்தி N.S. வரதாச்சாரி போன்ற ராஜாஜியின் சீடர்களும் அவருடன் இணைத்தார்கள். ஆசிரமவாசிகளில் 5 பேர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். மற்ற ஆசிரமவாசிகளுடன் ஒன்றாக உணவருந்தி ஒரே கூரையின் கீழ் வசித்ததால் சுற்றியிருக்கும் கிராமத்தாரின் வெறுப்பை எளிதில் சம்பாதித்துக் கொண்டார்கள்.பால்,காய்கறி வரத்து அடியோடு நிறுத்துப்பட்டது. ரகசியமாக ஒருவர் பால் கொண்டுவந்து கொடுத்து உதவினார். ஆசிரமத்தை கொளுத்த ஏற்பாடு நடப்பதாக ஒரு புரளி ராஜாஜியின் காதுக்கு எட்டியது.தீ விபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிரமவாசிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ரத்னசபாபதி கவுண்டரின் உதவியுடன் நிலைமையை சமாளித்தார்கள்.

Shri. Rathna Sabapathy Gounder

Shri. Rathna Sabapathy Gounder

அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று மது விலக்கு பிரச்சாரங்களை மேற்கொள்ள ஒரு மாட்டு வண்டியை ஏற்பாடு செய்து கொடுத்தார் ரத்னசபாபதி கவுண்டர். வீரன் என்றொரு செருப்பு தைக்கும் தொழிலாளி குடி போதையில் அடித்து துன்புறுத்துவதாக அவரது மனைவி ராஜாஜியிடம் வந்து அழுது புலம்பினார். ராஜாஜியும் அவரை கூப்பிட்டு விசாரித்தார். தான் மனைவியை அடிக்கவில்லை என்று பொய்யுரைத்தார் வீரன். செருப்பை எடுத்து அவர் கையில் கொடுத்த ராஜாஜி தொழில் மீது சத்தியம் செய்யச் சொன்னார். தவறை உணர்ந்த வீரன் அவரிடம் இனி குடிப்பதில்லை என சத்தியம் செய்தார். மனம் திருந்தி சாகும் வரை மதுவைத் தொடாமல் வாழ்ந்த வீரனை ஆசிரமத்தின் காலணி தயாரிக்கும் பிரிவிற்கு மேற்பார்வையாளராக நியமித்தார் ராஜாஜி. அவரிடம் செருப்பு தைக்கவும் கற்றுக் கொண்டார்.

அருகில் வசித்த பட்டியல் சாதியினரின் குடியிருப்புகளுக்கு புதிதாக கிணறு வெட்டி கொடுத்தார்கள். அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று சுத்தப்படுத்தினார்கள். பிள்ளைகளுக்கு கல்வி போதித்தார்கள்.பட்டியல் சாதியைச் சார்ந்த சின்னான் என்பவரைச் சமையலுக்கு அமர்த்தினார்கள். ஆசிரமவாசிகளில் சகன் என்ற முஸ்லீம் மதத்தைச் சார்ந்த ஒருவரும் இருந்தார்.

அங்கமுத்து என்கிற பட்டியல் சாதி ஆசிரமவாசியை மசூலிப்பட்டினம் அனுப்பி காதி – அச்சு வரைகலை கற்றுக் கொள்ளவைத்தார் ராஜாஜி.அவரது மூத்த மகனை லயோலா கல்லூரியில் படிக்க வைத்தார். அவருக்கு இந்திய தபால் துறையில் வேலை கிடைத்து.நல்ல நிலையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அங்கமுத்துவின் மகளை கல்லூரி விரிவுரையாளர் ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார் ராஜாஜி.

ho_1பட்டியல் சாதியைச் சார்ந்த செவி குறைபாடுள்ள ஒருவரை அதற்கென உள்ள விசேசப் பள்ளி சேர்த்துவிட்டார். ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி பயின்ற அந்த மாணவனுக்கு தையல் இயந்திரம் வாங்கிக் கொடுத்தார். காதி வேலை தெரிந்த பெண்ணிற்கு மணம் முடித்து வைத்தார். மூன்று குழந்தைகளுடன் நல்ல முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். புது தையல் இயந்திரம் வாங்க வசதி இருந்தும் ராஜாஜி கொடுத்த பழைய இயந்திரத்தையை இறுதி வரை பயன்படுத்தினார்.

ஆசிரமம் ஆரம்பித்து இரண்டு மாதங்களில் அருகில் இருந்த இருவதற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பஞ்சில் இருந்து நூல் நூற்பதன் மூலம் மாதத்திற்கு ரூ ஒன்றரை வரை சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். ஆகஸ்ட் 1925 க்குள் எழுவதற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் காதி துணி தயாரிப்பில் மும்முரமாக இறங்கினார்கள்.

மொலிபள்ளி கிராமத்தில் நடந்த ஒரு கொலை சம்பவத்திற்காக திருசெஞ்கோடு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி கிராமத்தினர் துன்புறுத்தப்பட்டார்கள். காவல் அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூபாய் 200 வரை மிரட்டி கையூட்டு பெற்ற பின்பே விடுவித்தனர். கிராம மக்கள் ராஜாஜியை சந்தித்து முறையிட்டனர். அம்மக்கள் சார்பாக ராஜாஜி முறைப்படி மேலதிகாரிகளுக்கு புகார் அளித்ததன் பெயரில் கையூட்டாக பெற்ற தொகை திருப்பி அளிக்கப்பட்டதோடு நில்லாமல் காவல் நிலைய அதிகாரிகள் நிபந்தனை அற்ற மன்னிப்பும் கோரினார்கள்.

டிசம்பர் 1925 இல் திருப்பதியின் அடிவாரத்தில் உள்ள திருச்சானூர் ஆலயத்தில் நுழைந்த முருகேசன் என்கிற பஞ்சமர் (மாலா) ஒருவர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் IPC 295 சட்டப்படி ஒரு மாதக்கடுங்காவல் தண்டனையோ அல்லது 75.ரூபாய் அபராதமோ கட்டவேண்டிய கொடுமையான சூழலில் அவர் சிக்கியிருந்தார். சித்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கில் ராஜாஜி பங்கேற்க வந்தார். தன்னுடைய ஒத்துழையாமை சபதத்துக்குப் பங்கம் வராமல் தோள்கள், தலை ஆகியவற்றைக் கதர் துணியால் மூடிக்கொண்டு வந்திருந்த அவர் வழக்கறிஞர் ஆடையை அணியவில்லை.

நீதிபதியிடம் குற்றஞ்சாட்டப்பட்டவரின் நண்பராக வழக்கில் வாதாட அனுமதி பெற்றார். ‘குற்றஞ்சாட்டப்பட்டவர் இறைவனைத் திருடிக்கொண்டு போனார். தன்னுடைய இதயக்கூடையில் இறைவனை அளவில்லா அன்போடு கொண்டு சென்றது எப்படித் தவறாகும்? பத்தாண்டுகளாகக் கோயிலுக்கு வெளியே நின்று தேங்காய் உடைத்துக் கொண்டிருந்த அவர் இந்த முறை பக்தி மேலீட்டால் ஆலயத்துக்குள் நுழைந்திருக்கிறார். கோயில் நிர்வாகமே எதிர்த்தாலும், தன்னுடைய உரிமையை அவர் பறித்துக்கொள்வது தவறாகாது.’ என்று ராஜாஜி கம்பீரமாக வாதிட்டார். அவர் ஆலயத்துக்குள் சென்றது தவறில்லை என்றாலும், சட்டப்படி ஆலய நுழைவு செல்லாது என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி மதத்துக்கு எந்த அவமானமும் அவரால் உண்டாகவில்லை என்று சொல்லி குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்தார். இந்தச் சம்பவத்தை ஒட்டி ராஜாஜி அந்தப் பக்தர் பாடுவதாக எழுதியது தான்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

 

 

ஆதாரம் ::
1) Rajaji and Gandhi – B.K.Ahluwalia ,Shashi Ahluwalia
2) Rajaji (A Study of his Personality) Vol I – Masti Venkatesa Iyengar
3) The Rajaji Story Vol I (A Warrior From The South) – Rajmohan Gandhi
4) Rajaji’s unknown collaborator – Gopal Krishna Gandhi
5) The Crime of Caste – Young India, 14-1-1926
6) Still shirking the issue – Young India, 11-3-1926
7) In the footsteps of Rajaji... R. Varadarajan of Gandhigram 
8) The ‘Tiruchengodu CR’ Gopal Krishna Gandhi 
9) Rajaji : A Life – Rajmohan Gandhi
10) Gandhi : The Man ,His People and the Empire – Rajmohan Gandhi
11) Ashram Website http://www.tcdgashram.com/
related ::
இராஜாஜி அவர்களால்தான் திராவிட நாட்டில் சமபந்தி போஜனம் என்பதும், அதைவிடத் தீவிரமான சாதிபேதம் என்பதே இல்லாமல் யார் வீட்டிலும் யாரும் உணவு அருந்தலாம் என்கிற தன்மையும் ஏற்பட்டது. நான் அறிய இராஜாஜி அவர்கள் 1910-லேயே பார்ப்பனரல்லாத மக்களுடன் சமபந்தி போஜனம் செய்வார்; 1915-ல் பார்ப்பனரல்லாத மக்கள் வீட்டில் உணவு அருந்துவார். இது அவருக்கு மாத்திரம் ஏற்படுத்திக் கொண்ட சாதனை என்றாலும், காங்கிரசிலேயே எல்லாப் பார்ப்பனர்களும் சமபந்தி போஜனம் அருந்தும்படி செய்தவர் இராஜாஜி அவர்களே ஆவார். காந்தியாருக்கும்கூட சமபந்தி போஜனத்தில் நம்பிக்கை இல்லாத காலத்திலேயே, யார் வீட்டிலும் யாருடனும் இருந்து உணவு கொள்ளும் தன்மையை ஏற்படுத்தினார். காங்கிரசில் பெரிய தீவிர தேசபக்தர், மகா தியாகி என்று சொல்லப்பட்ட வ.வே. சுப்ரமணிய அய்யர் என்கிற (போலி) தேசபக்தர் வருணாசிரமப் பிரச்சாரம் செய்துகொண் டிருந்த காலத்தில், காங்கிரசில் தான் மாத்திரம் அல்லாமல் அனேக பார்ப்பனரையும், பார்ப்பன  இளைஞரையும் யாருடனும் யார் வீட்டிலும் உணவு அருந்தச் செய்தார்,இராஜாஜி. எது எப்படி இருந்தாலும், சமுதாயத் துறையில், இம் மாபெரும் சீர்திருத்தம் செய்த பெருமை இராஜாஜிக்குத்தான் உண்டு. அதுமாத்திரம் அல்ல. கலப்புத் திருமணம் என்னும் தன்மையைத் துணிந்து ஆதரித்தவர் இராஜாஜி அவர்களே ஆவார். 1920-ல் என்று கருதுகிறேன்; அருண்டேல் – ருக்குமணி அம்மையார் விவாகத்தைப் பார்ப்பனச் சமுதாயமே கட்டுப்பாடாக எதிர்த்த காலத்தில் இராஜாஜி அவர்கள் அதை ஆதரித்தார்; மற்றும், தனது பெண்ணையே பார்ப்பனரல்லாதவருக்கு மணம் செய்து கொடுத்தார். ஆகவே, சமுதாயத் துறையில் மாபெரும் சீர்திருத்தம் செய்தவர் இராஜாஜியே ஆவார். இந்தக் காரணங்களால் இராஜாஜி அவர்கள் சென்னைப் பார்ப்பனர்களான கஸ்தூரி ரங்க அய்யங்கார், சீனிவாச அய்யங்கார், ரெங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி அய்யர் முதலிய-பார்ப்பன ஆதிக்கப் பணிக்காகவே வாழ்ந்த பார்ப்பனக் கும்பலுக்கு எதிரியாக இருந்தார். https://raattai.wordpress.com/2015/10/03/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/
Advertisements

2 thoughts on “ராஜாஜியின் “காந்தி ஆசிரமம்”

  1. Pingback: இராஜாஜியின் சமூக சீர்திருத்தப் பணிகள் | இராட்டை

  2. Pingback: Rajaji’s Views on INTER-CASTE MARRIAGE , WIDOW RE MARRIAGE , iNTER-DINING , DEVADASI SYSTEM & TEMPLE ENTRY | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s