மனுதர்மம் குறித்து காந்தி

ராஜ்மோகன் காந்தி தனது “சுதந்திரமும் சமூகநீதியும்” நூலில் சொல்கிறார்

டிசம்பர் 1927இல், அம்பேத்கரும் அவரது ஆதரவாளர்களும் மனு ஸ்மிருதியின் பிரதியை மகத்தில் பொது இடத்தில் எரித்தார்கள். காந்தி இதற்கு என்ன கருத்து தெரிவித்தார் என்பது எனக்குத் தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். டிசம்பர் 1927இல் அம்பேத்கர் செய்தது புத்திசாலித் தனமான செயலா, காந்தி அவரை மேலும் முனைப்புடன் ஆதரித்திருக்க வேண்டுமா போன்ற கேள்விகளுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கருத்துக்கள் இருக்கலாம்

manuஅதே ஆண்டு தமிழக சுற்றுப்பயணத்தில் காந்தியை சந்தித்த நீதிக்கட்சி ஆள்கள் “வர்ணாஸ்ரமம்” , “மனுதர்மம்” குறித்தெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

Q. Do you approve of the doctrine as given in Manusmriti?

A. The principle is there. But the applications do not appeal to me fully. There are parts of the book which are open to grave objections. I hope that they are later interpolations.

Q. Does not Manusmriti contain a lot of injustice?

A. Yes, a lot of injustice to women and the so-called lower ‘castes’. All is not Shastra that goes by that name. The Shastras so called therefore need to be read with much caution.

சத்தியசோதனை (கஸ்தூரிபாயின் தீரம்) நூலில் இருந்து 

மனுஸ்மிருதியின் சுலோகங்கள் எனக்குத் தெரியும்.என்னுடைய நம்பிக்கையைப் பொறுத்தவரையில் அவை தேவையும் இல்லை. அந்தச் சுலோகங்களெல்லாம் இடைச் செருகல்கள் என்று கருதும் ஒரு சாராரும் இருக்கிறார்கள். அப்படி இவை இடைச் செருகல்கள் அல்ல என்றே வைத்துக்கொண்டாலும் என்னுடைய சைவ உணவுக் கொள்கை சமய நூல்களை ஆதாரமாகக் கொள்ளாமல் சுயேச்சையாகக் கைக்கொள்ளப்பட்டதாகும்

மற்றச் சமயங்களிடம் சகிப்புத் தன்மை கொள்ள நான் கற்றிருந்தேன் என்றால், உண்மையில் எனக்கு கடவுளிடம் திடமானநம்பிக்கை இருந்தது என்பது பொருளல்ல. அந்த சமயத்தில் மனுஸ்மிருதியையும் நான் படிக்க நேர்ந்தது. படைப்பைப் பற்றியும், அது போன்ற விஷயங்களைக் குறித்தும் அதில் கூறப்பட்டிருந்த கதை எனக்கு அவ்வளவாக நம்பிக்கை ஊட்டுவதாயில்லை.இதற்கு மாறாக நாஸ்திகத்தை நோக்கி ஓரளவுக்கு என்னைச் சாயும்படியும் அது செய்தது.
 
என் பெரியப்பா பிள்ளை ஒருவர் உண்டு. அவர் இன்றும் இருக்கிறார்.அவருடைய அறிவாற்றலில் எனக்கு அபார மதிப்பு உண்டு. எனக்கு இருந்த சந்தேகங்களையெல்லாம் குறித்து அவரிடம் கேட்டேன். ஆனால்,அவற்றைத் தீர்த்துவிட அவரால் இயலவில்லை.“உனக்கு வயதானதும் இந்தச் சந்தேகங்களை எல்லாம் நீயே தீர்த்துக் கொண்டு விடுவாய். இந்த வயதில் இப்படிப்பட்ட சந்தேகங்கள் உனக்குத் தோன்றலாகாது” என்று பதில் சொல்லி, அவர் என்னை அனுப்பிவிட்டார். என் வாய் அடைபட்டுப் போயிற்று.ஆயினும், மனம் திருப்தியடையவில்லை. மனுஸ்மிருதியில் உணவு பற்றியும் அது போன்றவை குறித்தும் கூறப் பட்டிருந்தவை, தினசரி வழக்கத்திற்கு மாறுபட்டவை என எனக்குத் தோன்றின. இதில் எனக்கு உண்டான சந்தேகத்திற்கும் அதே பதில்தான் கிடைத்தது. ‘அறிவுவளர வளர, அதிகமாகப் படிக்க படிக்க, அதை நான் நன்றாகப் புரிந்து கொள்ளுவேன்’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
 
மனுஸ்மிருதி, அக்காலத்தில் அகிம்சா தருமத்தை எனக்குப் போதிக்கவில்லை என்பது மாத்திரம் உண்மை. நான் புலால் உண்ட கதையைக் கூறியிருக்கிறேன். அதை மனுஸ்மிருதி ஆதரிப்பதாகத் தோன்றியது. பாம்புகள், மூட்டைப் பூச்சி முதலியவைகளைக் கொல்லுவது முற்றும் நியாயமானதே என்று கருதினேன். மூட்டைப் பூச்சிகள் போன்ற ஐந்துகளைக் கொல்லுவது ஒரு கடமை எனக் கருதி அந்த வயதில் அவற்றை நான் கொன்றது எனக்கு நினைவிருக்கிறது.
 
ஆனால், ஒன்று மாத்திரம் என்னுள் ஆழ வேரூன்றியது; ‘ஒழுக்கமே எல்லாவற்றிற்கும் அடிப்படை ; சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றின் சாரமும் ’ என்று நான் கொண்ட உறுதியே அது. சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று. ஒவ்வொரு நாளும் அதன் மகிமை வளரலாயிற்று. அதற்கு நான் கொண்ட பொருளும் விரிவாகிக்
கொண்டே வந்தது.
 
அதேபோல நன்னெறியைப் போதிக்கும் ஒரு குஜராத்திப் பாடலும் என் அறிவையும் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது.
‘ தீமை செய்தோருக்கும் நன்மையே செய் ’ என்ற அப்பாடலின் போதனை, என் வாழ்க்கையில் வழிகாட்டும் தருமமாயிற்று. அதில் எனக்கு அதிக பிரேமை உண்டாகி விட்டதால் அதை மேற்கோளாகக் கொண்டு பற்பல சோதனைகளையும் செய்யத் தொடங்கினேன். மிக அற்புதமானவை என நான் எண்ணும் அப்பாடலின் வரிகள் இவை:
 
‘உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குக் கைம்மாறாய் 
விண்ணமுதைப்போல்அன்னம் விரும்பிப் படைத்திடுவாய்.
அன்போடு கும்பிட்டால் அடிபணிந்து நீதொழுவாய்.
செம்பான காசுக்குச் செம்பொன்னைத் தந்திடுவாய்.
உயிர்காத்தோன்துன்பத்தை உயிர்கொடுத்து நீ துடைப்பாய்.
செயலாலும் சொல்லாலும் சிந்தையினாலும் பெரியோர்
சின்னஞ்சிறு உதவி செய்தவர்க்கு எந்நாளும்
ஒன்றுக்குப் பத்தாய் உவந்து செய்வர் பேருதவி,
வையத்தார் எல்லோரும் ஒன்றெனவே மாண்புடையோர்
ஐயப்பா டின்றி அறிந்திருக்கும் காரணத்தால்
இன்னாசெய்தாரை ஒறுக்க, அவர் நாண
நன்னயம் செய்து விடுவர் இந்நானிலத்தே.’

related :: You cannot accuse me of placing a wrong emphasis on varnashrama dharma

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s