மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 9

காந்தி கனவுகண்ட சுயராஜ்யத்தில் பார்ப்பனர்கள் மலம் அள்ளும் துப்புரவு பணியை செய்வார்களா என்ன ?

பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் “காந்தியும் தமிழ் சனாதனிகளும்” நூலில் பின் இணைப்பாக கொடுத்துள்ள “தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம் – மா.நீலகண்ட சித்தாந்தியார்” இல் இருந்து 

காந்தியும் தமிழ் சனாதனிகளும்சுயராஜ்யங் கிடைத்தாற் கூட காந்தியே சர்வாதிகாரியாயிருப்பர். பிராமணர் முதலாயினாரை “ மலம் வாருங்கள் தோற்பதனிடுங்கள், வீதி குப்பையைக் கூட்டுங்கள். சுடுகாட்டுக் காவலிருங்கள். பிணந் தூக்குங்கள், பிணத்தைச் சுடுங்கள். வெட்டியான் வேலையைச் செய்யுங்கள். வேற்றுமை வேண்டாம்” என்று எந்த அரசாங்கமும் இதுகாறுஞ் செய்யத்துணீயாத செய்கையை இவர் செய்து துன்புறுத்தத் துணிவர். ஆட்சேபமில்லை. அப்போது, இப்போதே இவர் வாலைப் பின்பற்றும் பலகுட்டிச் சர்வாதிகாரிகள் மாகாணந்தோறும் ஏற்பட்டு அவர்களின் கீழ் அளவற்ற குஞ்சதிகாரிகளும் நிருவப்பட்டு ஜனங்களைப் படாதபாடு படுத்துவர் கண்டீர். இது தானா அஹிம்சை தருமம் ! அந்த உத்தியோகற்தித்காசைப்படுவோர்தான் “ உலகவிடுதலை உலகவிடுதலை “ என்று கூச்சலிட்டு வெளி வேஷம் பகல் வேஷம் போட்டாடுகின்றதை வேடிக்கை பாருங்களன்பர்களே ! அஹிம்சா தருமத்தைப் பின்பற்றுவோர் உள்ளதைக் கூறும் எம்மீதுங் கோபங் கொள்ளலாகாது. அப்போது அஹிம்சா தருமம் பறந்து விடும். மலம்வாரல் முதலிய பாவத்தொழில்களைக் கூசாமற் செய்ய இஷ்டப்பட்டுச் சீவிக்கப் பார்க்கும் ஜாதியினரை அத்தொழிலிற் பிரயோகித்தல் ஹிம்சையா, அன்றிச் சற்றேணும் அத்தொழில்களைச் செய்ய ஓர் போது மனமொப்பாத பிராமணர் முதலாயினோரை அத்தொழிலைச் செய்யக்கட்டாயப் படுத்துதல் ஹிம்சையா ? யாருங்கட்டாயப்படுத்தவில்லையே யென்றாற் சுயராஜ்யங்கையிலில்லை. வந்துவிட்டாற் காட்டாயமெற்பட்டுவிடும். இல்லாவிடிற் சுட்டே விடுவார்கள். இப்போதே சாஸ்திரம் வேண்டாம் என்போர் அப்போது வேதமுதலிய சர்வசாஸ்திரங்களையும் எரித்து முன்னொருவர் கூறியவாறே கோயில்களையெல்லாம் ருஷ்யாவிற் செய்தது போல் வெடிமருந்து (Dynamite) வைத்துச்சரிமட்டமாக்கி விடப்பின்னிடார் கண்டீர். மேலும் வைதீகர்களெல்லாம் வாயிலடித்துக் கொண்டு மாண்டு போகும்படி அந்ந்க கொடுமைகளையுஞ் செய்வர். இப்போது கோவில் கோவில் என்பதெல்லாம் பெரும் பகட்டேயாம்”. எந்த அக்கிரமஞ் செய்தாவது சுயராஜ்யமடையத் தீர்மானித்து விட்டார் கண்டீர் ! – பக்கம் 46

மார்கழி 1932

9,குருசாமி நாயுடு வீதி, திருவேட்டீஸ்வரன்பேட்டை,மவுண்ட்ரோட்,சென்னை

 

ஒத்துழையாமைப் போராட்டத்தில் கலந்து கொண்டு ரத்னகிரி சிறையில் இருந்த அப்பாசாகேப் பட்டவர்தன் சிறையில் தனக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதியை எதிர்த்து உண்ணா நோன்பிருக்கத் தொடங்கியுள்ளார். பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு அவரது கோரிக்கையை நிறைவேற்ற வற்புறுத்திக் காந்தி டிசம்பர் 3 1932 அன்று புனே  பகுதி காவல்துறை ஐ.ஜி கர்னல் ஈ.ஈ.டோயலுக்கு எழுதிய கடிதம் எழுதினார். அப்படி என்ன அப்பாசாகேப் அவர்களுக்கு சிறையில் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது? உங்களுக்கும் எனக்கும் அது அபத்தமாகத் தோன்றலாம்.ஆனால் காந்திக்கும் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் அது தாள முடியாத அநீதி.வேறொன்றுமில்லை அப்பாசாகேப் பட்டவர்தன் ஏதோ ஒரு ‘மேல்’ சாதிக்காரர். அந்தக் காலத்தில் எம்.ஏ முடித்தவர். காந்தியின் அழைப்பை ஏற்றுச் சிறை ஏகியவர். அவர் சிறையில் விரும்பி ஏற்றுச் செய்த ஒரு பணியைச் சிறை அதிகாரம் தடை செய்து விட்டது. அதென்ன அவர் விரும்பிய பணி? சக கைதிகளின் மலத்தை அள்ளும் தூய்மைப் பணி, துப்புரவுப் பணி. (மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியடிகளும்

குறிப்புகள் 1:  முக்கிய தமிழறிஞரும், காந்தியவாதியும் ஆன மு.அருணாசலம் அவர்கள் தான் சந்தித்த பெரியவர்கள் பற்றி எழுதியுள்ள ’காசியும் குமரியும்’ எனும் நூல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதில் அவர் சந்தித்த பெரியவர்களில் ஒருவர் வினோபா பாவே. பாவே அவர்கள் பிறப்பால் ஒரு பார்ப்பனர் என்பது குறிப்பிடத் தக்கது. கீதைக்கு உரை எழுதியவர்களில் அவரும் ஒருவர். அருணாசலம் அவர்கள் சில நாட்கள் பாவேயின் ஆசிரமத்தில் தங்கி இருக்கிறார். பாவேக்குத் தமிழில் ஒரு ஈடுபாடு இருந்ததையும் அவர் அதில் குறிப்பிடுவார். தினம் விடியும் முன் பாவே வெளியே புறப்படுவார். அவர் கையில் ஒரு கூடையும், ஒரு நீண்ட துரட்டியும் இருக்கும். அருணாசலம் அவர்களும் பேசிக் கொண்டே கூடச் செல்வார் இருவரும் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் மலம் கழிக்கும் பாதை ஓரங்களுக்குச் செல்வார்கள். பேசிக் கொண்டே துரட்டியால் மலத்தை அள்ளிக் கூடையில் போட்டு வந்து பெரிய கழிவுத் தொட்டியில் போட்டு மூடுவதை பாவே அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்ததை அருணாசலம் அவர்கள் பதிவதைத் தயவு செய்து ஒருமுறை படித்துப் பாருங்கள்.  நமக்குத் தோன்றலாம். இதன் மூலம் எல்லாம் இந்தப் பழக்கத்தை வேரறுத்துவிட இயலுமா? நான்தான் சொன்னேனே இது சமூகத்தைச் சீர்மைப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல. அது அவர்களின் ஆன்மீகச் சீர்மையை மேம்படுத்துவதை நோக்கிய பணியும் கூட

–அ.மார்க்ஸ்  

Gandhi <=> Appa <=>  Col. Doyle Correspondence

காந்தியைப் பற்றி கேள்விப்பட்டு அவரால் ஈர்க்கப்பட்டு ஆசிரமத்திற்கு வந்து சேர்கிறார் வினோபா. 1917 ல் கோச்ராப்பில் செயல்பட்டு வந்த ஆசிரமம் சபர்மதிக்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறது. வினோபாவின் இளைய சகோதரர் பாலகிருஷ்ணாவும் அவரை பின்பற்றி ஆசிரமத்தில் இணைந்துக் கொள்கிறார். ஆசிரமத்தில் மலம் அள்ள வேலைக்கு ஆள் வைத்திருந்திருக்கிறார்கள். ஒரு நாள் அவர் வேலைக்கு வர இயலாத நிலையில் தனது மகனை அனுப்பியுள்ளார். கனமான வாளியை சுமக்க அச்சிறுவன் கஷ்டப்படுவதை பார்த்த பாலகிருஷ்ணன் உதவியிருக்கிறார். பின் வினோபாவிடம் சென்று தான் இனி மலம் அள்ளும் துப்புரவு பணியை மேற்கொள்ளப் போவதாகவும் எனவே அதற்கு அனுமதி வேண்டுமென கேட்டிருக்கிறார். ஆகா அருமையான பணியாச்சே ! தமையனின் அந்த மகத்தான சேவையில் தானும் சேர்ந்து கொள்வதாக வினோபா மகிழ்ந்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட கஸ்தூரிப்பா காந்தியிடம் சென்று முறையிட்டு இருக்கிறார். ‘ஒரு பிராமணர் மலம் அள்ளுவதைவிட சிறப்பான விஷயம் இருக்க முடியுமா’ என காந்தி கொண்டாடியிருக்கிறார். பிறகென்ன அன்றாட ஆசிரம கடமையில் மலம் அள்ளும் பணியையும் சேர்த்துவிட்டார் காந்தி.

பார்க்க :: ஆசிரமத்தில் பிராமணர்கள் மலம் அள்ளுதல்

காந்தியால் பார்ப்பனர்களும் மலம் வாரக் கிளம்பினால் மா.நீலகண்ட சித்தாந்தியார் போன்ற சனாதனிகள் பதறாமல் என்ன செய்வார்களாம் ??

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s