பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் – திருவிக(1951)

பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் – திருவிக(1951)

திரு.வி.க

மார்க்கிஸ் முனிவன் மார்க்கம் கண்டனன்
அந்த மார்க்கம் யாக்கை போன்றது
ஆவி நல்க மேவினன் காந்தி;
மார்க்கிஸ் காந்தி மார்க்க மூலம்
யாதென் றுலகம் ஒது கின்றது?
ஆதி அருகன் ஒதினன் மூலம்;
அகிம்சை மேலாம் அறமென முதன்முதல்
அருளிய பெருமை அருகனுக் குண்டே ;
அகிம்சை உயிர்ப்பை அளித்த ஐயன்,
சீலப் போர்வையும் சால அமைத்தனன்
சீலம் வளர்வழி கோலினன் ; அதுவே
மிகுபொருள் விரும்பா மேன்மை ஒழுக்கம்; மிகுபொருள்
விரும்பாத் தகுதி இடத்தில்
அகிம்சா தர்மம் ஆடல் புரியும்;
மிகுபொருள் விரும்பும் விலங்குள இடத்தில்
அகிம்சை அகலும்; புகுங்கொலை களவு;
மிகுபொருள் விரும்பாத் தகுதி, அகிம்சை
உண்மை-சீலம்-ஒழுக்கம்-காக்கும்;
பொருளின் நிலைக்கும் அருளின் நிலைக்கும்
உற்றுள தொடர்பை உற்று நோக்குக;
பொருளொரு பாலே பெருகிச் செல்லின்
கொலைபுலை களவு குலைக்கும் உயிரை;
பொதுமை பொதுமை பொதுமை என்றே
பட்டினி பசியும் நெட்டிக் கூவும்;
அருகன் மொழிந்த அருளற வழியே,
புதுமை முயற்சியால் பொதுமை மலர்க;
மூர்க்கப் புரட்சியால் முளைக்கும் பொதுமை
மூர்க்கத் தாலே முடிவும் எய்தும் ;
‘வாளை எடுப்பவன் வாளால் மடிவன்’
என்றே கிறிஸ்து நன்றே கூறினர்;
மார்க்ஸியம் காந்தியம் தொடக்கம் மாறே
இரண்டும் முடிவில் இணையும் ஒன்றாய்.
அகிம்சையை இம்சையால் இணைப்பது மார்க்ஸியம்;
அகிம்சையை அகிம்சையால் அணைப்பது
காந்தியம் இரண்டு மார்க்கமும் திரண்ட மூலம்
ஆதி பகவன் போதனை என்க;
பொருளின் ஆணவம் அருளையும் ஒட்டிக்
கொலைபுலை காமம் களவுபொய் கள்ளே
முதலிய பாவம் நிதம்செயத் துரண்டும்;
பொருளில் ஆணவம் பொருந்தா வாறு
பொருளைத் தேடுக பொருளைத் தேடுக ;
அறவழி நின்று பொருளைத் தேடுக ;
வையம் பொருளே தெய்வம் அருளே
மார்க்ஸிஸ் பொருளே காந்தி அருளே
ஒன்ற இரண்டும் உழைத்தல் நன்றே.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s