பசுவதைக்கு தடை விதிக்கக் கோரி டெல்லியில் கலவரம்! துப்பாக்கி சூடு

மாலைமலர் காலச்சுவடுகளில் இருந்து ………..

பசுவதைக்கு தடை விதிக்க கோரி டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக உருவெடுத்தது. துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானார்கள். டெல்லியில் காமராஜர் தங்கி இருந்த வீட்டில் தீப்பந்தங்கள் வீசப்பட்டன. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.   பசுவதைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜனசங்கம் வலியுறுத்தி வந்தது.

இதற்காக டெல்லி பாராளுமன்றம் முன்பு 7.11.1966 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. சில எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.   ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் டெல்லிக்கு வந்தனர்.

சுமார் 7 லட்சம் பேர் டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் கூடி பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். பெண்களும், குழந்தைகளும் ஊர்வலத்தில் ஏராளமாக இருந்தனர். மக்கள் குறைகளைக் கேட்கும் காமராஜர்.   ஊர்வலத்தில், சாமியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தினர் மஞ்சள் நிற உடை அணிந்து, பசு சின்னம் பொறித்த கொடிகளை கையில் பிடித்து இருந்தனர். ரோடு நெடுகிலும் மஞ்சள் கொடிகளும், தோரணங்களும் தொங்கின. ஊர்வலம், பாராளுமன்ற கட்டிடத்தை அடைந்ததும் சர்வகட்சி தலைவர்கள் மேடையில் உட்கார்ந்து இருந்தார்கள். திடீர் என்று சில சாமியார்கள் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைய முயன்றனர்.

அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர் களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.   அதனால் போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும், மேடையில் உட்கார்ந்து இருந்தவர்கள் மீதும் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டன. இதனால் கூட்டத்தினர் கல் வீச்சில் இறங்கினார்கள். செருப்புகளும் வீசப்பட்டன. கலவரம் வெடித்தது.

cow2

Pics (Times of India): Scenes from the huge rally in Delhi in 1966 against the Indira Gandhi government that ended in a march on Parliament and violence

இதனைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். சுமார் 15 நிமிட நேரம் 209 ரவுண்டுகள் சுட்டார்கள். துப்பாக்கி சூட்டில் 7 பேர் செத்தனர். 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தார்கள். கல்வீச்சில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டதும், கூட்டத்தினர் பயந்து அங்கும் இங்கும் ஓடினார்கள்.

அப்போது பெண்களும், குழந்தைகளும் கீழே விழுந்தார்கள். அவர்களை கூட்டத்தினர் மிதித்துக்கொண்டு ஓடினார்கள். இதில் பலர் மயக்கம் அடைந்தனர்.   ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து ஓடும்போது அகில இந்திய ரேடியோ நிலையத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்தார்கள். மத்திய அரசின் “பத்திரிகை தகவல் ஆபீசு”க்கும் (பிரஸ் இன்பர்மேஷன் பீரோ) தீ வைக்கப்பட்டது.

மற்றும் பல கார்கள் எரிக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. பத்திரிகைகளுக்கு செய்திகள் கொடுக்கும் “பி.டி.ஐ” ஆபீசையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினார்கள். கதவுகளும், ஜன்னல்களும் உடைக்கப்பட்டன. மத்திய மந்திரி கே.ரகுராமையா வீட்டுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தார்கள்.

மேலும் பாராளுமன்ற கட்டிடம் அருகில் உள்ள மந்திரிகள் ஆபீசுகள், கம்பெனிகள், பாங்கிகள் ஆகியவற்றின் முன்னால் ஏராளமான கார்கள், ஸ்கூட்டர்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினார்கள். சில சினிமா கொட்டகைகள், ஓட்டல்கள் ஆகியவற்றுக்கும் தீ வைக்கப்பட்டது.

அந்த சமயத்தில், பெருந்தலைவர் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தார். டெல்லியின் மத்திய பகுதியில் இருக்கும் வீட்டில் தங்கி இருந்தார். துப்பாக்கி சூடு நடந்த பிறகு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டம் கூட்டமாக பிரிந்து சென்று தீ வைப்பில் ஈடுபட்டார்கள். இதில் ஒரு கூட்டம் காமராஜர் வீட்டுக்கு சென்றது.

அப்போது காம ராஜர் தூங்கிக்கொண்டிருந்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் வீட்டிற்குள் புகுந்து மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். சமையல் அறையில் நுழைந்து பொருட்களை தூள்தூளாக உடைத்தனர். காமராஜர் படுக்கை அறையை ஆர்ப்பாட்டக்காரர்கள் குறி வைத்துத் தாக்கினார்கள். சரமாரியாக கல் வீசினார்கள்.

வீட்டுக்கு காவலுக்கு நின்ற காவலாளி, கூட்டத்தினரை பயமுறுத்த வானத்தை நோக்கி சுட்டார். அப்படியும் கூட்டம் கலையவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் தீப்பந்தங்களை காமராஜர் வீட்டுக்குள் வீசினார்கள். வரவேற்பு அறை, விருந்தினர்கள் அறை, சாப்பாட்டு அறை ஆகிய இடங்களில் தீப்பந்தங்கள் வீசப்பட்டன.

தீ மற்ற அறைகளுக்கும் பரவியது. அந்த சமயத்தில் போலீஸ் கோஷ்டி ஒன்று வந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றார்கள்.   வேலைக்காரர் ஓடிப்போய் காமராஜரை எழுப்பினார். தீ வைக்கப்பட்ட தகவலைச் சொன்னார். காமராஜர் ஆர்ப்பாட்டக்காரர்களை சமாதானப்படுத்துவதற்காக வெளியே வந்தார். அதற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஓடிவிட்டனர். காமராஜர் வீட்டின் ஒரு பகுதி எரிந்துவிட்டது.

வரவேற்பு அறையில் போடப்பட்டு இருந்த மேஜை  நாற்காலிகள் முழுவதும் நாசம் அடைந்துவிட்டன. டெலிவிஷன் பெட்டியும், குளிர்சாதன (ஏர்கண்டிஷன்) பெட்டியும் சேதம் அடைந்தன. தீ வைப்பு சம்பவம் நடந்த பிறகு காமராஜரை சந்திக்க நிருபர்கள் சென்றனர். “நான் பத்திரமாக இருக்கிறேன்” என்று காமராஜர் சொன்னார்.

பின்னர் காமராஜர் அன்றிரவு “சென்னை அவுஸ்” விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்கினார்.   பிரதமர் இந்திரா காந்தியும் மற்றும் பல மந்திரிகளும் காமராஜர் வீட்டுக்கு சென்று சேத விவரங்களை கேட்டறிந்தார்கள். கலவர சேத பகுதிகளையும் இந்திரா காந்தி நேரில் சென்று பார்வையிட்டார்.   கலவரத்தை தொடர்ந்து டெல்லியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். நாட்டில் நடந்த வன்முறைகள் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் இந்திராகாந்தி பேசினார். அவர் கூறியதாவது:-

“சட்டமும், ஒழுங்கும் இருந்தால்தான் ஜனநாயகம் நிலைக்கும். இப்போது ஜனநாயகத்தின் ஆணி வேரையே அறுத்துவிடக்கூடிய சம்பவங்கள் நடக்கின்றன. குறைகளை வெளியிடுவதற்கு வன்முறை செயல்களில் ஈடுபடுகிறார்கள். பலாத்காரத்தை பயன்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு விருப்பம் இல்லை. என்றாலும் பலாத்காரத்தை பலாத்காரத்தின் மூலம்தான் ஒடுக்க முடியும்.

எனவே கலவரங்களை ஒடுக்க அரசாங்கம் பலாத்காரத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம். இப்போது நடக்கும் கலவரங்கள், அரசாங்கத்துக்கு எதிராக மட்டும் நடப்பதாக நான் நினைக்கவில்லை. நமது பண்பாடுகள், நமது வாழ்க்கை முறை, நமது மதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இவைகளை அனுமதிக்க முடியாது.”

இவ்வாறு இந்திரா காந்தி கூறினார்.

………………..

1966-இல் ‘பசு பாதுகாப்பு’ சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய ஜனசங்க உறுப்பினர் ஒருவர், பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியைப் பார்த்து ‘இதுபற்றி ஆளும் கட்சியின் கருத்து என்ன?’ எனக் கேட்டார். அதற்கு சாஸ்திரி ‘இதுபற்றி எம் கட்சியின் தலைவர் காமராஜர் பதிலளிப்பார்’ என்று சொன்னார்.

 

காமராஜர் அளித்த பதில் இதோ;

‘என்ன இப்போ.. பசுவுக்காக இவங்க ரொம்ப வருத்தப் படறாங்கன்னேன்..! மனுசனுக்குக் குந்த குடிசையில்ல.. கட்ட துணியில்ல.. அடுத்த வேளை சோத்துக்கு ஆலாப் பறக்கிறான். ஆனா இவுங்க பசு மாட்ட வச்சி பாலிடிக்ஸ் பண்ணப் பாக்குறாங்க..! அட.. மாட்டுக்கு கொடுக்கிற மரியாதையை மனுசனுக்குக் கொடுக்கக் கூடாதான்னேன்..! இவங்க பூர்வீகக் கதை நமக்குத் தெரியாதான்னேன்..! இந்த வன்முறைக் கும்பல்தானே தேசப்பிதா காந்தியடிகள் உயிரையே குடிச்சது..! இன்னும் யார் யார் உயிரைக் குடிக்க அலையிறாங்க..! எத்தனைப் பிரச்சனை நம்ம கண்ணு முன்னாலே கெடக்கு.. நாம இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கு.. இந்த நிலைமையில இந்த ஜனசங்க ஆசாமிங்க நம்மை, காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துக்கிட்டுப் போறான்னேன்..!”

 

– இவ்வாறு பேசிய காமராஜர் மீது கடும் ஆத்திரம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல் டெல்லியில் அவரது வீட்டை முற்றுகையிட்டு அவரை உயிரோடு கொளுத்த முயன்றனர். (via Aloor Sha Navas’s FB post)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s