கத்தி வைத்துக் கொள்ளுங்கள் – பெரியார்

டில்லியில் காமராஜர் தங்கி இருந்த வீட்டுக்கு நெருப்பு வைத்து விட்டார்கள் பார்ப்பனர்கள்! ஏன் இப்படிச் சொல்லுகின்றேன் என்றால், நெருப்புவைத்த நாளில் சிருங்கேரி சங்கராச்சாரி, பூரி சங்கராச்சாரி முதலிய பார்ப்பன சமுதாயத் தலைவர்கள் டில்லியில் இருந்திருக்கிறார்கள்; தவிரவும், சந்தியாசிகள் (சாதுக்கள்) என்னும் போல் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் பல பாகங்களிலுமிருந்து அன்று டில்லிக்கு வந்து இருக்கின்றார்கள். ஏன் இந்த சந்தியாசிகளைப் பார்ப்பனர்கள் என்கிறேன் என்றால், பார்ப்பனர் அல்லாத (சூத்திர) சாதிக்கு சந்தியாசம் கொள்ள உரிமை இல்லை. அவனைச் சாது வென்றோ, சந்தியாசி என்றோ சொல்லமாட்டார்கள்.

periyar-kamarajarஆகவே, அன்றையக் கலவரத்துக்கு காலித்தனத்துக்கு நேரடியாகச் சம்பந்தப் பட்டவர்களும், துண்டி விட்டவர்களும், ஆதாரமாக இருந்தவர்களும், தலைமை வகித்தவர்களும் பார்ப்பனர்கள் தவிர, மத தர்ம சம்பிரதாயங்களில் பார்ப்பனர்களுக்குச் சீடர்களாக இருந்தவர்களுந்தான் காரணஸ்தர்கள் ஆவார்கள் என்ற உறுதியால்தான் சொல்லுகிறேன். மற்றும் இராஜாஜி எலெக்ஷனுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியை ஒழித்தாக வேண்டும். என்றும் எந்த அதர்மத்தைச் செய்தாவது ஒழித்தாக வேண்டும்_என்பதாகச் சொன்னதும், அஹிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்பதும் ஆகப் பேசியதும் எனது உறுதிக்கு ஆதாரம் ஆகும்.

‘பசு வதை தடுத்தல்’ என்பது ஒரு பொய்யான காரணமேயாகும். உண்மைக் காரணம்-பார்ப்பனருடைய வருணாசிரம தர்மத்துக்குக் கேடு வந்துவிட்டது என்பது ஒன்றேதான். அந்தக் கேட்டை உண்டாக்கினது காமராஜர் என்கின்ற ஒரே காரணத்தான், காமராஜர் இருந்த வீட்டுக்கு நெருப்பு வைக்க முக்கியமான காரணமாகும்.

பார்ப்பானுக்கு மாட்டுக் கொலையைப்பற்றி அக்கறை இருக்கின்றதென்பது அப்துல்காதர் ஆடி அமாவாசையன்று தன் தகப்பனாருக்குத் தர்ப்பணம் கொடுத்தார். என்பது போன்ற கதையேயாகும். இந்தச் சாதுக்கள், சங்கராச்சாரியார்கள், மற்றும் சர்வ பார்ப்பனர்களுக்கும் முன்னோர்களாகிய ரிஷிகள், முனிவர்கள், மகான்கள், தேவர்கள், இராமன், கிருஷ்ணன் முதலிய எல்லா ஆரியர்களுக்கும் மாடுதான் முக்கிய ஆகாரமாய் இருந்து இருக்கிறது.இவ்வுண்மை இன்றும் மனுதர்ம சாஸ்திரத்தில் பார்ப்பன தர்மமாய் இருந்துவருகின்றது.

உலகிலுள்ள மக்கள் 100-க்கு 100 பேர்கள் மாட்டின் பாலைக் குடிப்பதும், மாட்டின் உழைப்பைப் பயன்படுத்திக் கொள்வதும், 100-க்கு 50 பேருக்கு மேலாக மாட்டு மாமிசம் உண்பதும் 100-க்கு 90 பேர்கள் வேறு பல மாமிசம் உண்பவர்களாகவே இருந்து வருகின்றார்கள்.

இப்படிப்பட்ட மக்களுக்குப் பசுவதைத் தடுப்பு உணர்ச்சி ஏற்பட்டது என்றால், இதை எந்த மடையன்தான் உண்மை என்று நம்புவான் எப்படி அது யோக்கியமான காரியமாய் இருக்க முடியும்!

காமராஜர் “பார்ப்பனரை வதை செய்யும்” காரியத்தை உண்டாக்கியவர்; அதுதான் சமதர்மம் என்பது. காமராஜரின் “சமதர்மம்” என்பதே ‘பார்ப்பனக் கொலை தர்மம்’ என்பதுதான் தத்துவார்த்தமாகும்.

‘காமராஜர் சமதர்மம்’ என்பது 100-க்கு 100 அமுலுக்கு வந்தால், பார்ப்பனீயப் பூண்டு’ உலகத்திலேயே இருக்க முடியாது.

காமராஜர் சமதர்மத்தில் எல்லோருக்கும் படிப்பு; எல்லோருக்கும் வீடு; எல்லோருக்கும் வேலை; எல்லோருக்கும் உணவு; எல்லோருக்கும் சம அந்தஸ்து ஏற்பட்டு விடும். பிறகு இதில் மனித பேதம் எப்படி இருக்க முடியும் மனித பேதத்தானே பார்ப்பனியம் என்பது!

ஆகவே, இதனால்தான் இந்தப் பார்ப்பனியக் கலவரத்துக்கும், காலித்தனத்திற்கும், பார்ப்பனக் குருமார்கள் பார்ப்பனச் சாதுக்கள், பார்ப்பன அதிகாரிகள், பார்ப்பனர்கள், பார்ப்பனப் பத்திரிகைக்காரர்கள், பார்ப்பன தர்மிகள் காரணமாக, காரியசித்தர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதோடு, பிர்லா, பஜாஜ், டாட்டா முதலிய செல்வர்கள் பலபேர்கள் கூட்டமும், மற்றும் சொல்லவேண்டுமானால் நந்தாக்கள் முதலிய மந்திரிகள் கூட்டமும் உடந்தையாயும், ஆதரவாளர்களாகவும் இருந்திருக்கின்றார்கள் என்பதில் சிறிதும் சந்தேமில்லை.

நேரு தங்கைக்கும், மற்றும் நேரு சாதிக்கும் இந்தச் சமதர்மம் எதிர்க்கப்படவேண்டியதாகவே இருந்து வந்திருக்கின்றது. மற்றும், நந்தாக் கூட்டம் பெரிய அழுக்கு மூட்டைக் கூட்டமாகும். இந்தியப் பிரதமர் தேர்தலுக்கு நடந்த போட்டியில் ஒருவராக நிற்க முனைந்தவர் நந்தா அதுவும் ஒரு பிரபல ஜோசியர் கட்டனைப்படி நின்றவர் ; தேதி மாற்றத்தால் விலகிக் கொண்டவர்; இப்படிப்பட்ட அவர் எப்படிச் சமதர்மத்துக்கு உடந்தையாக இருக்கமுடியும்:

எனவே, டில்லிக் கலவரமும் காலித்தனமும் பார்ப்பனரின் மனுதர்மத்துக்கும், காமராஜரின் மனித (சம)தர்மத்திற்கும் ஏற்பட்டு நடந்து வரும் பலாதிகாரப் போராட்டங்களில் ஒன்றேயாகும். எல்லாப் போராட்டங்களையும், கலவரத்தையும், காலித்தனங்களையும்விட நேற்று நடந்த டில்லிப் போராட்டத்தின் குறிப்பிடத்தகுந்த முக்கியம் என்ன வென்றால், காமராஜர் தங்கி இருந்த வீட்டை காமராஜர் உள்ளே இருந்து ஆங்கிக்கொண்டு இருக்கும்போது, நாலுபுறமும் சூழ்ந்துகொண்டு, நாலுபுறத்திலிருந்தும் நெருப்பு வைத்துக் கொளுத்தினதுதான் முக்கியமாகக் குறித்துக் கொள்ளத்தக்கதான சம்பவமாகும்.

இந்தச் செய்கை காலிக்கூட்டத்தினரால் இலக்குவைத்துத் திட்டமிட்டு நடத்திய செய்கையாக இருக்கமுடியாது. பார்ப்பனச்சங்கராச்சாரியார்கள் பலர்களும், சாதுக்களும், ஆனந்தாக்களும், பிரலாக்களும், பஜாஜ், டாட்டாக்களும், அமுக்குமூட்டை நந்தாக்களும் கூடி கலகம் நடத்திடத் திட்டமிட்டு, பல லட்ச ரூபாய் உதவி, பல அதிகாரிகளைச் சரிப்படுத்திக்கொண்டு நடத்திய சதித் திட்டமேயாகும்.

Cow (1)போலீஸ் 7-8 பேர்களைச் சுட்டது என்றால், ஏதோ அநாமதேயக் காலிகளைத்தான் சுட்டு இருக்குமேயொழிய, மேற்கண்ட கூட்டத்தினரில் ஒருவரைக்கூடச் சுடவில்லை. சுட தினைக்கவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நான் 3-ம்தேதி எழுதி, 4-ம்தேதி நகல்படுத்தி, 5-ம் தேதி சென்னைக்குப் பதிப்பிக்க அனுப்பிய விடுதலை பெயர்போட்டு 6-ம் தேதி எழுதிய ‘சாதிப்பிரிவுகள் ‘ என்ற தலையங்கத்தில் நல்லவண்ணம் விளக்கிக் கூறி இருக்கின்றேன். அதில் ‘இனி நடக்கவேண்டியது மத்திரிகளைக் கொல்லவேண்டியதுதான்’ என்று எழுதி இருக்கின்றேன். ஆனால், டில்லிச் செய்கை மந்திரிகளைக் கொல்லுவதாய் இல்லை.

மந்திரிகள் பல மாகாணங்களில் இச் செய்கைகளுக்கு ஆதரவானவர்களாக இருக்க தேசத்துவிட்டதால் (காங்கிரஸ்) தலைவரையே கொல்லத் திட்டமிட்டு அவர் இருந்த வீட்டில் அவர் தூங்கிக்கொண்டு இருக்கும்போது வீட்டைச் சுற்றி 4 புறத்திலும் நெருப்பு வைக்கச் செய்து விட்டார்கள். காமராஜர் தங்கி இருந்த வீட்டிற்குப் புழக்கடைப் பக்கம் வெளியேற ஒரு வழி இல்லாதிருந்தால் காமராஜரின் கதி அன்று என்னவாகி இருக்கும்!

இனி, இது தேசத் தலைநகரில் மாத்திரம் அல்லாமல் மாகாணங்கள் முழுவதிலும் இக் கொலை, நெருப்பு வைத்தல் முதலிய காரியங்கள் பரவும் என்பதிலும் ஆட்சேபணை இல்லை. இன்று பல மாகாண ஆட்சித் தலைவர்கள், பார்ப்பன அடிமைகள், வருணாசிரமக் காவலர்கள், சமதர்ம விரோதிகள் என்று சொல்லும்படியாகவே அமைந்துவிட்டார்கள்! ஆதலால் இந்த மாடல் டில்லிக் காலித்தனங்கள் இனி எல்லா மாகாணங்களிலும் ஏற்பட்டே தீரும்-பலவற்றில் ஏற்பட்டே விட்டதே!

அதாவது, பார்ப்பன எதிரிகள், பார்ப்பனர்களின் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்பவர்களைக் கொல்லவும், அவர்கள் வீட்டையும் நெருப்புவைத்துக் கொளுத்தவுமான நிலை ஏற்படலாம். அவற்றிற்கு அரசாங்கப் பாதுகாப்பும் அதற்கு ஏற்ற அளவில்தான் இருந்துவரும். எதிர்க்கட்சிக்காரர்கள் (பார்ப்பன அடிமைக் கட்சிக்காரர்கள்) இப்போதே அடிக்கல் நாட்டிக்கொண்டுவிட்டார்கள். அதுதான் ‘அண்ணாதுரையைத் தாக்கினார்கள்’ என்பது போன்ற கற்பனைகளாகும்.

தமிழ்நாட்டு ஆட்சி அமைப்பை மாற்றாவிட்டால் காமராஜருக்குப் பாதுகாப்பு ஏற்பட்டுவிடுமே என்றுதான் கருதுகின்றனர். என்னைப்பற்றிக் கவலையில்லை. எனக்கு ஒரு கால் நாட்டிலும் ஒரு கால் சுடுகாட்டிலும் என்ற பருவத்தில் இருக்கின்றேன். ஆதலால் என்னைப்பற்றிக் கவலை இல்லை.

காமராஜர் இன்று இந்த நாட்டுக்கு இரட்சகராக இருக்கிறார்; அதனால்தான் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் காமராஜர்மீது கண்வைத்து இருக்கின்றார்கள்; அவர் இருந்த வீட்டைக் கொளுத்தினார்கள். காமராஜருக்கு ஏதாவது ஏற்பட்டால் அவருக்கு ஒன்றும் நட்டம் கில்லை; அவரது தாயார் கூட. மயக்கம் வரும்வரை அழுவார்கள்; அவ்வளவுதான். பிறகு நம்நாடு வருணாசிரம தர்ம நாடாகிவிடும்! அது மாத்திரமல்ல; இன்றையப் பார்ப்பனக் கூலிகளான காங்கிரஸ் எதிரிக்கட்சிகளுக்கு, தலைவர்களுக்கு பலர்களுக்கும் நாதியற்ற நிலை ஏற்பட்டுவிடும். பழைய கறுப்பர்’களாகி விடுவார்கள். பிறகு நாடு என்ன ஆகுமோ! எப்படி ஆகுமோ! எப்படியோ இருக்கட்டும்.இனி காமராஜர் தக்க பாதுகாப்புடன் இருக்கவேண்டும்.

பார்ப்பன எதிர்ப்புக் கட்சித் தோழர்கள் ஒவ்வொருவரும் 6 அங்குள நீளத்திற்குக் குறையாத கத்தி ஒன்றைத் தற்காப்புக்காக வைத்துக் கொண்டிருக்கவேண்டும். கண்டிப்பாக சிக்கியர்களது மத தர்மம்போல், கண்டிப்பாகக் கத்தி வைத்துக்கொண்டிருக்க வேண்டும். இந்தக் காரியம் காமராஜரைப் பாதுகாக்க அல்ல. நம் நாட்டில் உள்ள 3 கோடி கீழ்சாதி(சூத்திர) மக்களை இழிவில் இருந்தும் அடிமை நிலையிலிருந்தும் படுகுழிப் பள்ளத்தில் இருந்தும் வெளியாக்கிப் பாதுகாக்கவேயாகும்.

நமது சரித்திரம் தெரிய, இந்த நாட்டில் காமராஜரைப் போல ஒர் இரட்சகர் இதுவரை தோன்றியதே இல்லை. புராணங்களில் இரண்யர்கள், இராவணர்கள் தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் கொல்லப்பட்டதாக-பிரகலாதன், அனுமான், விபீடணன்களைக்கொண்டு அழிக்கப்பட்டதாக எழுதிப் புராணங்களை முடித்திருக்கின்றார்கள்.

அந்தக் காலம் அப்படி; ஆனால் இந்தக் காலம் அதுபோன்ற புராண-சரித்திர காலம் அல்ல; உண்மை பிரத்யேக நடப்புக் காலம்; இதில் அந்த வித்தைகளை பலிக்கவிடக்கூடாது. கத்தி வைத்துக்கொள்ளுங்கள்! காமராஜரைப் பாதுகாருங்கள்! மறுபடியும் எழுத இடம் வைத்துக்கொள்ளாதீர்கள். கண்டிப்பாய்க் கத்தி வைத்துக்கொள்ளுங்கள்!

(விடுதலை-அறிக்கை-15.11.1966)

Advertisements

One thought on “கத்தி வைத்துக் கொள்ளுங்கள் – பெரியார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s