புனா ஒப்பந்தத்தில் வங்காள (சாதி)இந்துக்களுக்கு உடன்பாடில்லை – தாகூர்

சர் இரவீந்திரநாத தாகூர் அனுப்பிய தந்தி

நாள்: 27 ஜூலை 1933

சர் என்.என். சர்க்கார் அவர்களுக்கு,

tagore-with-gandhiவகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்வு சம்பந்தமாக மகாத்மாஜி தெரிவித்த யோசனையை ஏற்பதற்குத் தாமதிக்க வேண்டாம் என்று பிரதமரை வேண்டி அவருக்கு அனுப்பிய தந்தி எனக்கு நினைவுக்கு வருகிறது. புனா உடன்படிக்கை ஏற்படுத்தும் விளைவு என்ன என்பதைப் பற்றி அமைதியாகச் சிந்திக்க அந்த நேரத்தில் எங்களுக்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது. சாப்ரு, ஜெயகர் இருவரும் மற்ற உறுப்பினர்களோடு புறப்பட்டுச் சென்று விட்டார்கள். வங்காளத்திலிருந்து வந்த உறுப்பினர்களில் ஒருவர் கூடப் பொறுப்பான பிரதிநிதியாக இல்லை. இந்தப் பிரச்சினைக்கான உடனடித் தீர்வில்தான் மகாத்மாஜியின் ஜீவன் இருந்தது. இத்தகைய ஒரு நெருக்கடி ஏற்படுத்திய தாங்க முடியாத கவலை என்னை நெருக்கித் தள்ளியதால் நான் அதை ஒத்துக் கொள்ள நேர்ந்தது. அது தவறு என்று இப்போது நான் உணர்கிறேன். நாட்டின் நலனுக்கு அது எப்போதும் எதிரானது. அரசியல் விஷயங்களில் அனுபவம் இல்லாததாலும் மகாத்மாஜியிடம் பெரிய அளவில் அன்பும், இந்திய அரசியல் பற்றிய அவரது அறிவுக் கூர்மையில் நம்பிக்கையும் வைத்திருந்ததாலும் நான் மீண்டும் பரிசீலனை செய்யாமல், வங்காளத்தின் விஷயத்தில் நீதி பலியிடப்பட்டதைக் கவனிக்காமல் ஒத்துக் கொள்ளத் துணிந்தேன். சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அநீதி இழைக்கப்பட்டு அல்லல்படுவார்கள் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. வகுப்பு வாதப் பிணக்கு ஊக்கம் பெற்றுள்ளதைப் பார்க்கும் போது நமது மாநிலத்தில் அமைதியான அரசமைப்பது கடினம்.

– இரவீந்திரநாத தாகூர்

நன்றி : டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும்

poona

பூனா ஒப்பந்தம் – சில உண்மைகள் – அ.அண்ணாமலை

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s